Monday, November 20, 2006

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டை வேடம்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது என்ற பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை நிலைவரம் தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்க்கும்போது அத்தகைய எண்ணம்தான் எழுகின்றது.

அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் தந்திரங்களைக் கையாள்வதை விட்டு, தமிழ் மக்களின் உண்மையானதும், சட்டபூர்வமானதுமான உரிமைகளைப் பேச்சு மூலம் வழங்கி, அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா வற்புறுத்த உள்ளது என அக்கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார்.

எதைக் கைவிட வேண்டும் என இலங்கையை இந்தியா வற்புறுத்தப் போகின்றது எனப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகின்றாரோ, அதே விடயத்தை மென்மேலும் இலங்கை தீவிரமாகப் புரிவதற்கு செய்வதற்கு முழு அளவில் உதவிக் கொண்டு தான் அதைச் செய்ய வேண்டாம் என இலங்கையைக் கோரப் போகின்றதாம் இந்தியா! மிகமிக வேடிக்கையான விடயம் இது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கைத் தரப்பின் மார்க்கங்களில் பிரதானமான ஒன்று விமானக்குண்டு வீச்சு. கண் மண் தெரியாமல் எழுந்த மானத்தில் வான்வழித் தாக்குதல்களைத் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் இலங்கை விமானப்படையின் கொடூரத்தால் எழும் பேரழிவின் பேரவலத்தின் தாக்கம், பாரத தேசத்திலும் அவ் வப்போது பிரதிபலிக்கத் தவறுவதில்லை. செஞ்சோலை மாணவர் படுகொலைப் பயங்கரம், கிளிநொச்சி வைத்தியசாலைக் கொடூரம் என்று அண்மைக் காலத்தில் இந்தக் கொடூரங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தியத் தரப்புக்கும் இது நன்கு தெரியும்.

இத்தகைய யுத்தத் தந்திரத்தை தமிழர்களைக் கொல்லும் மார்க்கத்தை கொண்டிருக்கும் இலங்கைத் தரப்புக்கு, அதற்கு உதவும் வகையில் செயற்படவே வேண்டாம் என்றுதான் வைகோ வும் ஏனைய தமிழக அரசியல் தலைவர்களும் இந்திய மத்திய அரசுக்கு வற்புறுத்தல் கொடுத்து வருகின்றார்கள்.

இலங்கை விமானப்படையினருக்குப் பஞ்சாப்பில் தொழில்நுட்பப் பயிற்சிகளை இந்தியா வழங்குவது ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசின் வான்வழித் தாக்குதல் தந்திரோபாயத்துக்கு நேரடியாக உதவி வழங்கும் நடவடிக்கை என்பது கண்கூடு.
அதைச் சுட்டிக்காட்டி ஈழத் தமிழர்களுக்கு எதிரான அந்தக் கொடூரத்துக்குத் துணை போவதைத் தடுத்து நிறுத்தும்படியே வைகோ கோரி வருகின்றார். ஆனால், அக்கோரத்துக்கு கொடூரத் துக்கு துணை போகும் தனது செயலை நிறுத்தாமல், அதற்குப் பதிலாகத் தொடர்ந்து செய்து கொண்டு, இலங்கைத் தரப்பின் நடவடிக்கையைக் கைவிடுமாறு கோரப்போகின்றதாம் இந்தியத் தலைமை.......!

ஒருபுறம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும் விமானக் குண்டு மார்க்கத்துக்குத் தொழில்நுட்ப உதவி. மறுபுறம் ஈழத் தமிழ்ப் பொதுமக்களைப் படுகொலை செய்யும் தந்திரங்களைக் கைவிட்டு, அந்த மக்களுக்கு உரிய உண்மையான சட்டபூர்வமான உரிமைகளைப் பேச்சு மூலம் வழங்கி அரசியல் தீர்வு காண வலியுறுத்தல்.
இதுதான் பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் புதுடில்லியின் இராஜதந்திரம்.

அயலில் உள்ள வல்லாதிக்க நாடு என்று மதிக்கப்படும் நமது பாரத தேசம், இத்தகைய இரட்டை வேட இராஜதந்திரத்தை இலங்கை விடயத்தில் கையாண்டதன் விளைவே இத்தீவின் ரண கள நிலைமைக்கு மூலகாரணம்.

ஒரு பக்கம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைத் தாஜா செய்து கொண்டு, மறுபுறம் ஈழத் தமிழர்களின் காதில் பூச்சுற்று வதற்கு எண்பதுகளின் பிற்பகுதியில் இந்தியத் தலைமை எடுத்த பிராந்திய மேலாதிக்கத் திமிருடன் கூடிய இராஜதந்திர நடவடிக்கை முழு அளவில் தோற்று, கையைச் சுட்டுக் கொண்டு, பெரும் அவமானத்துடன் இலங்கை விவகாரத்திலிருந்து விலக வேண்டிய விளைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. அதன் காரணமாக சுமார் பதினைந்து ஆண்டு காலம் இலங்கை விவகா ரப் பக்கம் தலைவைக்கவே விரும்பாமல் ஒதுங்கியிருக்க வேண் டிய கட்டாயமும் இந்தியாவுக்கு நேர்ந்தது.

ஆனால், அந்தப் பட்டறிவிலிருந்து அது இன்னும் பாடம் படித்ததாக இல்லை.
மீண்டும் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட் டும் தனது இராஜதந்திரத்தை அது தொடர்கின்றது.

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகள், போராட்டப் பயிற்சிகள் என்பவற்றை வழங்கி அவர்களது விடுதலைப் போராட்டத்தை முழு அளவில் ஊக்குவித்துத் தூண்டி விட்டுவிட்டு, பின்னர் அவர்களது தாயகத்தைத் தானே ஆக்கிரமித்து அந்தப் போராட்டத்தை அடக்குவதற்குத் தனது படைகளை ஏவிவிட்டமை போலவே
இப்போது இலங்கை விமானப்படையினர், தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு உதவும் வகையில் அந்தப் படைக்கு தொழில்நுட்பப் பயிற்சி உதவி களை நேரடியாகவே வழங்கிக் கொண்டு, மறுபுறத்தில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும் தந்திரங்களைக் கைவிடு மாறு இலங்கையை வற்புறுத்தப் போகின்றதாம் இந்தியத் தலைமை. இந்த இரட்டை வேட இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து எப்போதுதான் மாறப் போகின்றது புதுடில்லி?

இலங்கைத் தலைமையின் கொடூரப் போக்கால் பாதிக்கப்பட்டு பேரவலத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு பாரதத்தில் குறிப்பாக தமிழகத்தில் உணர்ச்சி அலை களும், உரிமைக் குரல்களும் பீறிட்டு எழுகின்றன. அவற்றைச் சமாளிப்பதற்காக ஒரு பக்கத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கும் விதமாக அறிவிப்புகளை புதுடில்லி விடுக்கின்றது. ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கு இந்தியப் பிரதமர் எழுதிய பதில் கடிதத் தின் உள்ளடக்கமும், அது பகிரங்கப்படுத்தப்பட்ட விதமும் அந் நோக்கத்தைத் தான் கொண்டவை.

அதேசமயம், ஈழத் தமிழர்களின் போராட்ட வலுவை உரிமைக் குரலை அடக்கும் தனது உள்ளார்ந்த அவாவை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அந்த முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் இலங்கைக்கும், இந்தியா உதவுகின்றது.

புதுடில்லி அரசுத் தலைமையின் இந்த இரட்டை வேட இராஜதந்திரத்தை இந்திய மக்களும், ஏனைய அரசியல் தலை வர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இப்போக்கிலிருந்து புது டில்லித் தலைமை விலகி விடுபட்டு ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் விதத்தில் நீதியுடன் செயற்படுவதற்கு அத னைத் தூண்டவும், வழிப்படுத்தவும் அவர்கள் முன்வர வேண்டும்.

அதை விடுத்து, தனது இரட்டை வேட இராஜதந்திர அணுகுமுறையை இலங்கை விவகாரத்தில் புதுடில்லி தொடர்வதற்கு இடமளிப்பது இலங்கைத் தீவில் நிலைமையை இன்னும் மோசமாக்கவே உதவும்.
நன்றி>உதயன்.

3 comments:

Anonymous said...

Whatever the reason, you say, its an utter foolish act by LTTE, is Rajiv's Assasination. Now they are harvesting, what they seeded. If the affected one are LTTE, Its bearable, but for LTTE, innocent tamils are suffering.

Its a very huge loss for Indians. The LTTE did a hypocrisy for Tamil nadu people who supported them.

They are paying for it. If Rajiv might be faulty but that was not the way to respond. Now the same way, that is LTTE way, our Indian Govt responding. Its a pure reactionary action.

Anonymous said...

Kumar you misunderstood Rajiv. Rajiv did not send Army to protect
tamils. He sent Army to kill LTTE and Ceylon Tamils. He asked 183 Oil
Resevation in Trincomalee. Ex Sri lankan Prim minister JR. Jeyawardane gave 183 Oil Reservation to India. now Indian Oil Corp enjoy it. But He Cheated Ceylon Tamil. He Cheated Tamilnadu.

Madurai Tamilan

Anonymous said...

Hi Kumar!! What happend to your Head? Read Vekateswaran's Interview. Clean your Head.