யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர்கள், 512வது படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தச் செய்தியும் பிரசுரக்கப்படக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளின் பிரதிநிகள் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில், வெளியிடப்பட வேண்டிய பாதுகாப்பு செய்திகள் தொடர்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் தலைமை வழங்கவுள்ள வருடாந்த உரையை எக்காரணம் கொண்டும் பிரசுரிக்கக்கூடாது என்றும் மிரட்டப்பட்டுள்ளனர்.
இதுதவிர, ஏ-9 பாதை தொடர்பான செய்திகள், யாழ் மனித அவலங்கள் தொடர்பான விரிவான தகவல்கள், இராணுவ பாதுகாப்பு தொடர்பான செய்திகள் போன்ற பல்வேறு விடயங்களையும் தவிர்க்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மிரட்டல்கள், ஊடக சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்றும், இது மிகப்பெரிய மனிதஉரிமை மீறல் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
Tuesday, November 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment