Sunday, November 19, 2006

சிறிலங்கா மீது ஐ.நா. தடை?

சிறிலங்கா இராணுவத்தில் சிறார்களை சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடைக்கு முகம் கொடுக்கும் சிறிலங்கா உள்ளாகியுள்ளது.
"சிறிலங்காவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அறிக்கையை சனவரி மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறார் மற்றும் இன மோதல் தொடர்பிலான குழு பரிசீலிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கு எதிராக பயணத்தடை, இராணுவ கொள்வனவுக்கான தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்டவைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை பரிசீலிக்க கூடும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா. சிறப்பு பிரதிநிதி அலன் றொக், சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்ப்பு தொடர்பான தனது அறிக்கையை டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் தாக்கல் செய்ய உள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

இது எதிர்பார்கப்படும் ஒன்றுதான், நடைமுறைக்கு வருமா?