Monday, November 20, 2006

இரட்டை வேட இந்திய அரசு? - கொதிக்கும் தமிழகம்.

-குமுதம் ரிப்போர்ட்டர்-

நவம்பர் இருபத்தாறாம் தேதி உத்தராஞ்சல் மாநிலம், டேராடூனில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த மேயர்களின் மாநாடு நடக்கிறது. தாராளமாக நடந்துவிட்டுப் போகட்டுமே என்று யாரும் வாழ்த்த முடியாத நிலை! காரணம், மாநாட்டைத் தொடங்கி வைப்பவர், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே.

இலங்கை முல்லைத் தீவு _ செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுவர் சிறுமிகள் இலங்கை விமான குண்டு வீச்சில் கொத்தாக மடிந்தது முதல், அண்மையில் நடந்த வாகரை குண்டு வீச்சில் நாற்பத்தெட்டுப் பேர் பலி, தமிழ் எம்.பி. ரவிராஜ் சுட்டுக் கொலை என்று ராஜபக்சே மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு.

அதோடு, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் வரும் உயிர்நாடிப்பாதையான ஏ9 நெடுஞ்சாலையை ராஜபக்சே மூடி வைத்து, தமிழர்களின் உயிருடன் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ராஜபக்சேயின் வருகையைக் கண்டித்து பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கறுப்புக் கொடி, கண்டன ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தி முடித்துவிட்டன.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஒருபடி மேலே போய் ‘‘ராஜபக்சே பங்கேற்கும் டேராடூன் மேயர்கள் மாநாட்டை, தமிழக மேயர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று அறிக்கை விட்டார்.

இந்நிலையில், தமிழக மேயர்கள் அந்த மாநாட்டை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வியோடு, சென்னை மேயர் மா.சுப்பிரமணியத்திடம் பேசினோம். ‘‘இது மழைக்காலம். சென்னையில் நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். நமக்கு மக்கள் பணிதான் முக்கியம். மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்று கடிதம் அனுப்பிவிட்டேன்’’ என்றார்.

கிட்டத்தட்ட இதே பதிலைத்தான் மற்ற மாநகர மேயர்களும் கூறினார்கள்.
டேராடூனில் மேயர் மாநாட்டை நடத்துபவர், அந்த நகர காங்கிரஸ் பெண் மேயர் மனோரமா சர்மா. காங்கிரஸ§க்குத் தெரியாமலா இவர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, இலங்கைப் பிரச்னையில், தமிழக முதல்வர் கலைஞர் தனது ஆதங்கத்தை ஆழ்ந்த வருத்தமாக பிரதமருக்கு எழுதினார். அதற்கு பிரதமரிடமிருந்து உடனடியாகப் பதில் வந்துள்ளது.

‘‘இலங்கைத் தமிழர் பகுதிக்கு, 5200 மெட்ரிக் டன் அரிசி, 1500 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பி வைக்க இருக்கிறோம். இந்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலாளர் கொழும்பு சென்று, இலங்கை அரசுக்கு நம் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிப்பார். இலங்கைத் தமிழருக்கு உரிமை வழங்க வற்புறுத்துவார். ராஜபக்சேவை நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்’’ _ இப்படிப் பதில் அனுப்பியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
இலங்கை விவகாரத்தில் இன்னும் சூடு தணிந்த பாடாக இல்லை. இப்போது லேட்டஸ்ட்டாக எழுந்துள்ள புதிய பிரச்னை என்ன தெரியுமா? சண்டிகர் நகரில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு மத்திய அரசு பயிற்சி தருவதுதான், அந்தப் புதிய பிரச்னை. இந்தப் பயிற்சி, ஜனவரி மாதம் வரை நீடிக்குமாம்.

ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்கு பால் பவுடர், அரிசி அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, மறுபக்கம் இலங்கை விமானப் படை வீரர்களுக்கு போர்ப் பயிற்சி தரலாமா? என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் சூடாக எழுந்துள்ளது.

இந்தியா தரும் உதவிப் பொருள்களை, தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம்தான் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Nov 23, 2006

4 comments:

Anonymous said...

இந்தியாக்காரன் இலங்கைக்காரனிடம் அடிவாங்கினாலும் அவன் அவர்களுக்கு உதவி செய்வான் என்ன இருந்தாலும் விஜயன் இந்தியாவிலிருந்து வட இந்தியாவிலிருந்து வந்தவன் தானே அந்த ரத்தம் தானே முதுகெழும்பு இல்லாத மன்மோகன் சிங்கின் உடலிலும் ஓடும். தமிழ் நாட்டின் நல்ல உள்ளங்கள் இதற்கு என்ன செய்வது

மாசிலா said...

சீரிய சேவை.
தாயகத்தில் தமிழ்மக்கள் நல்வாழ்க்கை பெற உமது கடின உழைப்பால் அவ்வப்போது இடைவிடாமல் சுடச்சுட செய்திகள் அறிவிப்பது நல்ல சேவை.
எனது ஊக்கங்கள்.
தொடர்க.
நன்றி.

Anonymous said...

I did not know entire tamilnadu worrying about this...

Hope everything before rajivgandhi assasination. Now only the Politicians making cover story...

Please u people come out to the reality

Marappan

Anonymous said...

The thing is most of people in TN and in india dont know what was the problem in srilanka and whats going on. But now many people are showing interest towards the problem and also started supporting for eelam. I am seeing a big change in TN media. Even dinamalar´s tone is changing. So I am sure that eelam will get all the support from our TN people.