சர்வதேச சமூகத்தை உலுக்கியுள்ள மட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரை கதிரவெளி பாடசாலைகளில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தினரும் விமானப்படையினரும் நவம்பர் 8 ஆம் நாள் இணைந்து மேற்கொண்ட வலிந்த இராணுவத் தாக்குதலில் இடம்பெயர்ந்திருந்தோரில் 45 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மீது 30 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்தப் பேரவலம் நடந்தது.
சிறிலங்காவின் கோரக்கொலை வெறியாட்டத்தில் படுகொலையான 47 பேர் விவரம்:
01. பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஆர்.சதுஜன் (வயது 1 1/2)
02. பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஆர்.விஜயா (வயது 30)
03 .பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ரி.தர்சா (வயது 11)
04. பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஏ.ஜெயானந்தன் (வயது 32)
05. பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த என்.இந்திராணி (வயது 45)
06. கதிரவெளியைச் சேர்ந்த என்.தர்சிகா (வயது 34)
07. கதிரவெளியைச் சேர்ந்த ஆர்.பிரபு (வயது 16)
08. பூநகரைச் சேர்ந்த எல்.சசிகரன் (வயது 26)
09. கதிரவெளியைச் சேர்ந்த ஜெயகாந்தன் (வயது 21)
10. கதிரவெளியைச் சேர்ந்த கே.கோபால் (வயது 19)
11. சம்பூரைச் சேர்ந்த ரி.விவேகானந்தன் (வயது 32)
12. சம்பூரைச் சேர்ந்த வி.யாழினி (வயது 13)
13. கதிரவெளியைச் சேர்ந்த எஸ்.யுவந்தினி (வயது 10)
14. கணேசபுரத்தைச் சேர்ந்த வி.திவ்யா (வயது 16)
15. கணேசபுரத்தைச் சேர்ந்த ஆர்.பிரேமலதா (வயது 30)
16. வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த கே.காந்தன் (வயது 18)
17. பூநகரைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 20)
18. சம்பூரைச் சேர்ந்த ரி.ராஜன் (வயது 24)
19. ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த எஸ்.ஜெயகாந்தன் (வயது 24)
20. கண்டலடியைச் சேர்ந்த பி.ராஜன் (வயது 35)
21. கண்டலடியைச் சேர்ந்த ரி.நிர்மலநாதன் (வயது 34)
22. கடற்கரைச்சேனையைச் சேர்ந்த ரி.றீகன் (வயது 26)
23. சம்பூரைச் சேர்ந்த ரி.தர்சாந்தினி (வயது 07)
24. கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த எல்.விமலேந்திரன் (வயது 35)
25. கதிரவெளியைச் சேர்ந்த வி.ஆறுமுகம் (வயது 34)
26. விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயந்திரன் (வயது 36)
27. விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.யோகசீலன் (வயது 34)
28. சம்பூரைச் சேர்ந்த எஸ்.கிருபைராசா (வயது 30)
29. புளியங்கண்டலடியைச் சேர்ந்த எஸ்.யோகேஸ்வரன் (வயது 30)
30. பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த பி.வீரபத்திரன் (வயது 45)
31. சேனையூரைச் சேர்ந்த எஸ்.சிவநேசன் (வயது 25)
32. பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த ஆர்.இராமச்சந்திரன் (வயது 32)
33. மாவடிச்சேனையைச் சேர்ந்த பி.விக்கினேஸ்வரன் (வயது 10)
34. தங்கபுரம், பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ரி.யோகேஸ்வரன் (வயது 30)
35. மாலைமுந்தன்லைச் சேர்ந்த எஸ்.தயாகரன் (வயது 29)
36. கடற்கரைச்சேனையைச் சேர்ந்த ரி.நகுலேஸ்வரன் (வயது 32)
37. வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த எம்.பாக்கியராஜா (வயது 40)
38. கிளிவெட்டியைச் சேர்ந்த கே.சுஜேந்திரன் (வயது 15)
39. கதிரவெளியைச் சேர்ந்த கே.புஸ்பன் (வயது 05)
40. பூநகரைச் சேர்ந்த ஆர்.பூரணச்சந்திரன் (வயது 25)
41. வெருகல், முகத்துவாரத்தைச் சேர்ந்த கே.ரவி (வயது 31)
42. சின்னக்குளத்தைச் சேர்ந்த வி.மனோஜ்குமார் (வயது 18)
43. சீனவெளியைச் சேர்ந்த என்.டேவிட் (வயது 25)
44. சின்னக்குளத்தைச் சேர்ந்த எம்.குணராசா (வயது 25)
45. பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த எஸ்.தர்மலிங்கம் (வயது 35)
46. பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த எஸ்.சந்திரன் (வயது 36)
47. பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.சண்முகநாதன் (வயது 40)
சிறிலங்கா இராணுவத்தின் ஈவிரக்கமற்ற இந்தக் கொடுந்தாக்குதலை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் வன்மையாகக் கண்டித்து வருகின்றன.
நன்றி>புதினம்.
Sunday, November 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment