Thursday, November 30, 2006

கொழும்பில் குண்டு வெடிப்பு!!!





குண்டுத்தாக்குதலில் தப்பிய கோத்தபாய ராஜபக்சவை கட்டியணைக்கும் மகிந்த.

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜுபக்சவை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாக கருதப்படும் குண்டு தாக்குதல் இன்று காலை கொழும்பில் இடம் பெற்றுள்ளது. என சர்வதேச செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இதே வேளை இந்த தாக்குதலில் கோத்தபாய ராஜபக்ச காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாக, சிறீலங்கா இராணுவப்பேச்சாளர் சமரசிங்க தெரிவித்தார். என ஏ.எப்.பி டிசெய்தி வெளியிட்டுள்ளது.


ஆனால், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இது பற்றி மேலதிக விபரங்கள் தெரிவயில்லை என்றும் கொழும்பு நகரில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி: தமிழர் இணைப்பகம்.

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கால்பிட்டிய பித்தளைச்சந்தியில் கோத்தபாய சென்று கொண்டிருந்த வாகனத்தொடரணி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கோத்தபாய ராஜுபக்ச அலரிமாளிகையில் பத்திரமாக இருப்பதாகவும். அறியப்படுகின்றது.

இத்தாக்குதலில் 8 வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக சக்தி வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

கலைஞர் அவர்களே உங்களுக்கு ஒரு வரலாற்று கடமை இருக்கிறது.

- ஆனந்த விகடன்-
ஈழத்தமிழரின் பிரச்சனையில் கலைஞரின் அணுகுமுறை தொடர்பாக பதிலளிக்கையிலேயே கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார்.


விரிவான நேர்காணல்:

முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரள, தமிழக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதாக அறிவித்து இருக்கிறீர்களே என்ன காரணம்?

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு திடீரென்று வழங்கப்பட்ட ஒன்றல்ல. இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு கடைசியில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையையும் பார்வையிட்டு இருதரப்பையும் கலந்து பேசி ஒரு அறிக்கை தாக்கல் செய்யச்சொன்னது உச்சநீதிமன்றம்.

அந்த நிபுணர் குழுவிற்கு முன்னால் கேரளம் 12 காரணங்களைச் சொல்லி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று வாதிட்டது. காலம் கடத்துவதற்காக காரணங்களை அடுக்குகிறது கேரளம். இந்த காரணங்களில் நியாயமில்லை, என்று சொல்லி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது நிபுணர் குழு. அதன் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அந்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

என்ன காரணம் என்றால் கேரளத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. முல்லை பெரியாரில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தினால் கேரள தேர்தலில் தன் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் நலனுக்காக நாட்டு நலன் பலியிடப்பட்டதேயொழிய வேறில்லை.

பெரியாறு அணை தொடர்பாக கலைஞரை தாக்கி ஜெயலலிதா விடுகிற அறிக்கைகளைப் பார்க்கும் போது நகைப்புக்கிடமாக இருக்கிறது. சரி கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகாவது பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவரும் செய்யவில்லை. மீண்டும் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து மீண்டும் தன் தீர்ப்பை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை அமல்படுத்த தவறியதன் மூலம் முதல்வர் கலைஞரும் உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். கேரள முதல்வர் அச்சுதானந்தன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசினார். ஆகவே இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன்.

டில்லியில் நடைபாதை கடைகளை மத்திய அரசின் விருப்பத்தையும் மீறி சீல் வைக்கிற நீதிமன்றம் அதுபோல பெரியாறு அணையிலும் உச்சநீதிமன்றமே முன்நின்று செயல்படுத்தலாம் இல்லயா?

ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் சொல்கிற போது அதை செயல்படுத்துகிற உரிமை இரண்டு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. கேரளத்தை விட கூடுதலான பொறுப்பு தமிழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அப்படி எடுக்கும் போது கேரளம் அதை தடுத்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.

ஒன்பது மாதகாலமாக ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் என்ன செய்யும். பெரியாறு அணை விவகாரத்தில் மாநில அரசு தூங்கிக்கொண்டிருப்பதன் விளைவு இப்போ சட்டப்படி ஆறு போலிசார் இருக்க வேண்டிய இடத்தில் முப்பது போலிசாரை கேரளம் நிறுத்தி வைத்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆதிவாசிகளை "லஸ்க்கர்" என்கிற பெயரில் பாதுகாப்பின் பெயரில் நிறுத்தி வத்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டவிரோதமானது. தீர்ப்பு வந்தவுடன் தமிழக போலிசார் நூறு பேரை கொண்டு போய் பெரியாறு அணயில் நிறுத்தி அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டுமா? இல்லயா? எதையுமே செய்யவில்லயே செயலற்று போய்வீட்டீர்களே பின்னர் எப்படி கேரளத்தை குறை சொல்ல முடியும். அணயில் அதிகப்படியாக வரும் நீரை குழாய்கள் மூலமாகவோ குகைபாதை வழியாகவோ கொண்டு வந்து வைகை அணயிலும் பெரியார் பாசன ஐந்து மாவட்ட ஏரி கண்மாய்களையும் தூர் வாரி அதில் சேமித்திருக்க வேண்டும் அதற்கும் திட்டமில்லை. இப்படி திட்டமிடாததன் விளைவு இப்போது தறிகெட்டு ஒடிய தண்ணீர் குமுளி பாலத்தை அடித்துச் சென்றுவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சிறு வெள்ளத்தை தாங்கும் அளவுக்குக் கூட இல்லாமல் அந்த பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது.

இந்நிலையில் வருகிற 29 ஆம் தேதி மத்திய அரசின் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக சொல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன்பே கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொல்கிறார் 136 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றி பேசமாட்டோம் என்கிறார். இப்போ புதிய அணை கட்டுவதைப் பற்றி பேசுகிறார்கள். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனோ அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது பற்றி பேசுவோம் என்கிறார்.

இருவரும் சேர்ந்து போகாத ஊருக்கு புரியாத வழி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
. பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்துகிற மோசடி வலையை கேரளம் விரித்திருக்கிறது. அந்த வலையில் தமிழகம் விழுந்து விட்டது. முதலில் தமிழகம் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். கேரளத்தை தீர்ப்பை செயல்படுத்தினால்தான் பேச்சு என்று நிபந்தனை விதித்திருக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒன்றை நினவுபடுத்த விரும்புகிறேன். 1952ல் ராஜாஜி முதல்வராக இருந்த போது பெரியார் அணையில் இருந்து பாசனத்துக்கு எடுக்கிற தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை ராஜாஜி முன்வைத்தபோது அப்போதைய திருவிதாங்கூர், கொச்சி முதல்வர் பட்டந்தாணுப்பிள்ளை சம்மதிக்கவில்லை.

கம்யூனிஸ்ட்கள்தான் என்னுடைய முதல் எதிரி என்று சொன்ன ராஜாஜி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கம்யூனிஸ்ட்டான பி.ராமமூர்த்தி அவர்களை பட்டந்தாணுப்பிள்ளயிடம் பேச அனுப்பினார். திட்டம் நிறைவேறியது. கட்சியாலும் கொள்கையாலும் ராமமூர்த்தியும் ராஜாஜியும் எதிரிகள். ஆனால் மக்கள் நலன் என்று வந்த போது பேதங்கள மறந்து ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். ஆனால் அந்த பக்குவம் கலைஞருக்கும் இல்லை ஜெயலலிதாவுக்கும் இல்லை. பெரியாறு அணை விவகாரத்தில் ஒருவர் இன்னொருவரை குற்றம் சாட்ட தகுதியற்றவர்கள். காரணம் இருவருமே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள். இவர்களின் போட்டா போட்டியால் மொத்த தமிழர் நலனும் பாழாகப்போகிறது புதுடில்லியும் நம்மை மதிக்கவில்லை.

பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும் மக்களும் சமூக அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

1980ல் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். அப்போது முதன் முதலாக "மலையாள மனோரமா" என்கிற மலையாள பத்திரிகைதான் முதன் முதலாக இந்த பிரச்சனை பற்றி எழுதியது. அப்போதே இந்த பிரச்சன பற்றி சட்டமன்றத்தில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினேன். எதிர்காலத்தில் உரிமைகள் பறிபோவதற்கான வாய்ப்புகளும், பிரச்சனைகள் தோன்றுவதற்கான அறிகுறிகளும் இருந்ததை அப்போதே சுட்டிக்காட்டினேன். அப்போ எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். யாரும் நான் சொன்னதை கண்டு கொள்ளவில்ல. ஒரு கொடிய நோய்க்கான அறிகுறியாக தெரிந்தது.

அன்றைக்கே தமிழகம் விழித்திருந்தால் இன்றைக்கு பெரியாற்றில் தமிழர்களின் உரிமை பறிபோயிருக்காது. ஒரு கிலோ அரிசியை விளைவிக்க நாம் 2000 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறோம். தமிழக அமைச்சர் நேரு அவர்கள் சமீபத்தில் பேசும் போது பாலக்காடு கணவாய் வழியாக மட்டும் மாதம் ஒன்றுக்கு இருபது லட்சம் டன் அரிசி கேரளாவுக்கு போகிறது என்று சொன்னார். ஒரு கிலோ அரிசிக்கு 2000 லிட்டர் தண்ணீர் என்றால் இருபது லட்சம் டன்னுக்கு நான்காயிரம் மில்லியன் கன மீட்டர் தண்ணீரையும் சேர்த்தல்லவா அரிசியோடு நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாற்றில் வெறும் 82 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைத்தானே கேட்கிறோம். இது தவிர கோழி, ஆடு, மாடு என்று கறிவேப்பிலையில் தொடங்கி சகலமும் இங்கிருந்துதான் கேரளத்துக்கு போகிறது. போதாக்குறைக்கு நெய்வேலியிலிருந்து 20% மின்சாரம் கேரளத்துக்கு போகிறது. நீங்கள் நியாயமாக எங்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் கொடுங்கள் இல்லை என்றால் இதை எல்லாம் தடுப்போம் என்று சொல்ல எவளவு நேரம் ஆகும்? கம்யூனிஸ்டுகள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு அச்சுதானந்தன் தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம் அவர் கேரள மக்களை உசுப்பி விட்டு குளிர்காய நினைக்கிறார். இவர்களுடைய மரியாதைக்குரிய மூத்த தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்களுடைய அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார் வீ.ஆர்.கிருஷ்ணய்யர். (இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கம் ஈ.எம்.எஸ் உடையது). அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜரும் கிருஷ்ணய்யரும் இணந்து மேற்கே பாயும் நதிகளை கிழக்கே திருப்பிவிடுவதற்கான திட்டம் ஒன்றை வகுத்தார்கள். இதற்கு பிரதி பலனாக வருடம் தோறும் குறைந்த விலையில் இவ்வளவு டன் அரிசி கொடுப்பது என்றும் ஆரம்ப நிலயில் பேசப்பட்டது.

இருவரும் நேருவிடம் போய் நிதி உதவி கேட்க அவரும் பாராட்டிவிட்டு உதவுவதாக சொல்லியிருக்கிறார். திட்டத்தின் ஆயத்த பணிகள் நடந்த போது வீ.ஆர்.கிருஷ்ணய்யர் நீதிபதியாக உச்சநீதிமன்றத்க்கு போய்விட்டார். நேரு மரணமடைய காமராஜர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக போய்விட்டார். பின்னர் வந்தவர்காளால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1980ல் கிருஷ்ணய்யரை நான் சந்தித்த போது திட்டம் ஆரம்ப நிலயில் பேச்சுவார்த்தை கட்டத்தில் இருந்ததை ஒத்துக்கொண்டார். கட்சி நலனை விட மக்கள் நலன் பெரிது என்று நினத்த கிருஷ்ணய்யர், காமராஜர், நேரு மாதிரியான தலைவர்களுக்கு பக்குவம் இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றுமையும் இருந்தது. ஆனால் ஒரே மாநிலத்தில் இருக்கிற அதிமுக, திமுக என்கிற இரண்டு கட்சிகளுக்கிடயிலான போட்டி அரசியல் மொத்த மாநில நலனையும் பாழடித்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் விஷயத்திலும் பெரியாறு, காவிரி விஷயத்திலும் மத்திய அரசு நம்மை ஏளனமாக நடத்துவதற்கு இந்த இரண்டு கட்சிகளுக்கிடயிலான போட்டா போட்டிதான் காரணம். விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் பெரியாற்றில் தண்ணீர் கொடுக்காத கேரளத்துக்கு நாம் நிபந்தனை விதிக்க வேண்டும். எதிர்ப்பு காட்டாமல் நாம் காரியம் சாதிக்க முடியாது.

யாழ். குடாநாட்டில் ஆறு இலட்சம் மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே? இதில் இந்தியாவுக்கு என்ன பொறுப்பு இருக்க முடியும்?

ஈழத் தமிழரின் தாயகப்பகுதிகளான வடக்கு-கிழக்கில் 70% பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 30% பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாட்டில் உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளுக்கு எதிரான குழுக்களும் இயங்குகின்றன. இந்த குழுக்களின் உதவியோடு இராணுவம் படுகொலைலகளை செய்கிறது. போர் நிறுத்த காலத்தில் மட்டும் 3,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு கிடயாது. ரவிராஜ் என்கிற நாடாளுமன்ற உறுப்பினரை பாதுகாக்கப்பட்ட பகுதியான கொழும்பு நகரில் வைத்து படுகொலை செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். சிங்கள அரசின் உதவியில்லாமல் இந்த கொலைகள் நிகழ வாய்ப்பில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் சாதாரண தமிழர்களுக்கு அங்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சிங்கள அரசு தமிழர்கள் மீது பொருளாதார தடை விதித்து, ஏ-9 யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடி தாக்குதல் நடத்துவதற்கான தைரியம் ஏன் வந்ததென்றால். இலங்கையில் இருந்து தன்னை பார்க்க வந்த தமிழ் எம்.பிக்களை சந்திப்பதற்கு நேரமும் தேதியும் ஒக்கப்பட்ட பிறகும் சந்திக்க மறுத்விட்டார் பிரதமர்.

காரணம் தமிழக முதல்வர்.அவர்கள் டில்லிக்கு போவதற்கு முன்னால் தமிழக முதலவரை சந்திக்க சென்னயில் பத்து நாட்கள் காத்திருந்தார்கள் கடிதம் எழுதி முதல்வரை சந்திக்க நேரம் கேட்டார்கள். முதல்வரின் அலுவலகத்துக்கு போய் சந்திக்க முயன்றார்கள். கலைஞரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. முதல்வரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு பிரதமரை சந்திக்க டில்லி போன போது பிரதமரும் சந்திக்க மறுத்விட்டார்.

தமிழக முதல்வரே தமிழ் எம்.பிக்களை சந்திக்கவில்லை. அவர் சந்திக்காதவர்கள நாம் எப்படி சந்திக்க முடியும் என்று பிரதமரும் அவர்களை சந்திக்கவில்லை. வந்த தமிழ் எம்பிக்கள் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து விட்டு இலங்கைக்கு போன போது. இந்தியாவிலும் தமிழகத்திலும் இவர்களுக்கு ஆதரவில்லை அதனால்தான் தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் இவர்களை சந்திக்கவில்லை என்று ராஜபக்ச தவறாக புரிந்து கொண்டு...தமிழர்களை கொன்றால் கேட்பதற்கு ஆளில்லை என்று தன் கொடூர தாக்குதலை தொடங்கிவிட்டார்.

இந்தியா ஈழத்தமிழரை ஆதரிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணம் தமிழக முதல்வர்தான். இவர் அவர்களை சந்தித்திருந்தால் பிரதமர் அவர்கள சந்தித்திருக்கக்கூடும். இதனுடய முதல் பலிதான் ரவிராஜ் படுகொலை. 1983 ஜூலை கலவரங்களில் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கேபினட் அந்தஸ்துள்ள மூத்த ராஜதந்திரி ஜி.பார்த்தசாரதியையும் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமச்சர் பி.வி.நரசிம்மராவயும் அனுப்பி வைத்தார் இந்திராகாந்தி. "தனது கொல்லைப்புறத்தில் நடக்கும் படுகொலைகளை இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது" என்று ஜெயவர்த்தனாவிடம் கண்டிப்பான முறையில் சொன்னார் இந்திரா.

இலங்கை, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பகுதி என்பதிலும் ஈழத்தமிழர் ஆதரவிலும் உறுதியாக இருந்தார் இந்திரா காந்தி. திருகோணமலை கடற்பகுதியில் அமெரிக்காவின் கடற்படைத்தளம் வருவதை அனுமதிக்க முடியாது என்றார் இந்திரா. அன்று அவர் விடுத்த எச்சரிக்கை இலங்கைக்கு மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டது.

ஆனால் இன்று அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் என எல்லா நாடுகளும் இலங்கையில் இறங்கியிருக்கிறார்கள். எல்லோரும் ஆயுதங்கள் கொடுக்கிறார்கள் இதனால் ஈழத்தமிழருக்கு நேரும் ஆபத்தை விட இந்தியாவுக்கு நேரும் ஆபத்துதான் அதிகம். இந்தியா இதை கண்டுகொள்ளாமல் கண் இருந்தும் குருடாக இருக்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டால் தமிழகம் கொந்தளித்தால் உடனே கண்துடைப்புக்காக சிவசங்கரமேனன் என்கிற ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். ஜி.பார்த்தசாரதி அப்போது ஈழத்தமிழர் குறித்து பேச இலங்கைக்கு போனால் போவதற்கு முன்னால் தமிழகத்துக்கு வந்து முதல்வர் எம்ஜிஆரை பார்த்து பேசிவிட்டு போவார். ஆனால் இப்போது சிவசங்கர்மேனன் போய் தமிழர் பிரச்சனையை கொழும்பில் பேசிவிட்டு வருகிறார். அப்புறம் டில்லியில் இருந்து எம்.கே.நாராயணன் என்கிற அதிகாரியை அனுப்பி கலைஞருக்கு இலங்கைக்கு போய் வந்த தகவல் சொல்கிறார்கள்.

இந்தியாவிலேயே மூத்த முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கிற மரியாதை இவ்வளவுதானா? உங்களுக்கு 40 எம்பிக்கள் கொடுத்து முதுகெலும்பாக இருக்கிறாரே. அவரை இலங்கை பிரச்சனை தொடர்பாக பேச இராணுவ அமைச்சரையோ வெளிவிவகார அமைச்சரையோ அனுப்பலாமே? அவரையே நீங்கள் மதிக்கவில்லயே.

ஈழத்தமிழரின் பிரச்சனையை மதிக்காமல் ஏனோ தானோவென்று மத்திய அரசு கையாள்கிறது. ஒரு பக்கம் இலங்கைக்கு உணவுப்பொருட்கள் அனுப்புகிறோம் என்று சொல்லி விட்டு தமிழகத்தின் கோவையிலும், வட இந்தியாவிலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இங்கு கொடுக்கப்படுகிற பயிற்சி ஈழத்தில் தமிழர்கள கொல்லத்தான் பயன்படும் என்பது இந்தியாவுக்கு தெரியும். தெரிந்தேதான் இதை செய்கிறார்கள். தமிழகம் திரண்டெழுந்து மொத்த எதிர்ப்பை காட்டாமல் புதுடில்லி பணியாது. கலைஞர் தன் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த தவறுவதாலும். எதிர்ப்பு காட்டப்படாததாலும் மத்திய அரசு நம்மை மதிக்கத்தவறுகிறது. இப்படியான பழக்க வழக்கங்கள்தான் சிங்கள ராணுவத்துக்கு துணிச்சலை கொடுக்கிறது.

ஈழத்தமிழரின் பிரச்சனையில் கலைஞரின் அணுகுமுறை எப்படியிருக்கிறது?

தமிழக முதல்வர் தன்னுடய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை. அதனால்தான் இந்த அலட்சியம் ஈழத்தமிழருக்கு இழைக்கப்படுகிறது. நமது அண்டை நாடான வங்காள தேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையில் பராக்கா அணை பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது.

மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு திடீரென்று வங்காளதேச தலைநகரான டாக்காவுக்கு போனார். போய் குடியரசு தலைவரை பார்த்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஜோதிபாசு கையெழுத்திட முடியாது. காரணம் அவர் ஒரு மாநில முதல்வர். அவர் புதுடில்லிக்கு போய் அப்போது பிரதமராக இருந்த தேவகௌடாவை சந்தித்து இதுதான் எங்கள் மாநில நலனுக்காக நாங்கள் போட்டிருக்கும் திட்டம் இதில் கையெழுத்திடுங்கள் என்றார். அவரும் கையெழுத்திட்டார் பிரச்சனை தீர்ந்தது.

மேற்குவங்க மக்களின் நலனை பேணும் உரிமை ஜோதிபாசுவுக்கு உண்டு. அவர் அதை நிலைநாட்டினார். நம்மோட முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சனையில் டில்லியின் முடிவுதான் என் முடிவு என்கிறார். நான் எடுக்கிற முடிவை டில்லி செயல்படுத்த வேண்டும் என்றல்லவா முதல்வர் கருணாநிதி சொல்ல வேண்டும். டில்லி என்ன சொல்கிறதோ அதை நான் கேட்கிறேன் என்று சொல்லும் போதே நீங்கள் உங்களின் அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டீர்கள
என்றுதானே அர்த்தம். நீங்கள் உங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததன் விளைவு டில்லி உங்களின் அதிகாரத்தை மதிக்க மறுக்கிறது.

சிவசங்கர்மேனன் இலங்கைக்கு போவதற்கு முன்னால உங்களைப் பார்த்தால்தானே மரியாதை. போய் பார்த்விட்டு வந்து ஒரு சுருக்கமான தகவலை உங்களுக்கு சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். எல்லா காலத்திலும் கலைஞருக்கு ஈழத்தமிழரின் பிரச்சனை சோற்றுக்கு ஊறுகாய் தொடுகிற மாதிரிதான். தேவைப்படும் போது தொடுவார்.

கலைஞரே ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு வரலாற்று கடமை என்ற ஒன்று இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்து உலக நாடுகள் சோவியத் ரஷ்யாவின் தலைமையில் ஒரு அணியாகவும், அமெரிக்காவின் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்த போது நாங்கள் இந்த பக்கமும் இல்லை, உங்கள் பக்கமும் இல்லை என்று மூன்றாவது அணியொன்றை உருவாக்கினார் நேரு.

அது "அணிசேரா நாடுகள்" என்றானது. இந்த உலகம் மூன்றாவது உலகப்போரை சந்திக்காமல் போனதற்கு நேரு உருவாக்கிய அணிசேரா நாடுகள் அமைப்பும் அதன் கொள்கையும் மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வரலாற்றுக்கடமை நேருவை சாரும். அது போல நேருவின் மறைவுக்கு பிறகு காமராஜருக்கு ஒரு வரலாற்று கடமை இருந்தது. முடிந்தால் காமராஜரே பிரதமராக ஆயிருக்க முடியும். ஆனால் நேருவுக்கு பிறகு சாஸ்திரியையும் அவருக்கு பிறகு இந்திரா காந்தியையும் ஜனநாயக வழியில் அமைதியான முறையின் இவர்களை பிரதமராக்கி இன்றைக்கும் வரலாற்றில் நிற்கிறார் காமராஜர். அதுபோல கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத்தமிழர்கள் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள். அந்த போராட்டத்திற்கு உறுதுணயாக இருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் உதவினால் வரலாறு உங்களை வாழ்த்தும். ஒதுங்கி நின்றால் ஒரு தமிழ் தலைமுறையின் பழியை சுமக்க நேரிடும். அது அழியாத பழியாக இருக்கும்.

இப்போது இந்திய அரசு இலங்கைக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறதே? இன்னொரு பக்கம் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் டேராடூனில் நடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டை துவங்கி வைக்கிறாரே?

இந்தியா அனுப்புகிற பொருட்கள் ஒரு போதும் ஈழத்தமிழருக்கு போய் சேராது. ஏற்கனவே சுனாமி வந்து அங்கு தமிழர்கள் பேரழிவை சந்தித்த போது உலக நாடுகள் ஏராளமான நிதிகளை கொடுத்தது. அந்த நிதிகளோ உதவிகளோ துளியும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

அதுபோல இதுவும் போய்ச் சேராது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம்தான் இந்தியா உதவ வேண்டும். இந்திய அரசு ஈழத்தமிழருக்கு கொடுக்க வேண்டியதில்லை. தமிழக மக்களே ஈழத்தமிழருக்கு அள்ளிக்கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமான முயற்சியையும் கலைஞர்தான் செய்ய வேண்டும். ஆனால் 26 ஆம் தேதி ஆசிய மேயர்கள் மாநாட்டை துவங்கி வைக்க இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.

ஆசியாவில் இந்த மேயர் மாநாட்டை தொடங்கிவைக்க வேறெந்த தலைவரும் கிடைக்கவில்லயா? தென் ஆப்ரிக்காவில் ஸ்மெட்ஸ் என்கிற தலைவர் நிறவெறி பிடித்தவர் என்பதால் அவருடன் கைகுலுக்க மறுத்தார் நேரு. அவருடைய வாரிசுகளான இந்திய ஆட்சியாளர்கள் இனவெறி பிடித்த ரத்த கறைபடிந்த கையோடு இந்தியாவுக்கு வருகிற ராஜபக்சவுக்கு கைகுலுக்கி சிகப்பு கம்பளம் விரிப்பது தமிழர்களுக்கு செய்கிற துரோகம் என்று நினக்கிறேன். ஆகவே தமிழகத்திலிருந்து அந்த மாநாட்டுக்கு போகிற மேயர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டும். அல்லது அந்த மாநாட்டை புறக்கணித்து மானத்தை காப்பாற்ற வேண்டும்.

ஈழப்பிரச்சனையை ராஜீவ் கொலைக்கு முன் ராஜீவ் கொலைக்கு பின் என்று பிரித்து பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே?

ராஜீவை மையப்படுத்தி ஈழத்தமிழரின் பிரச்சனையை அணுகுவது போன்ற வேறு முட்டாள்தனம் இருக்க முடியாது. இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? அதற்கு பிறகு என்ன நடந்தது என்றுதான் பார்க்க வேண்டும். இலங்கை இனப் பிரச்சனையை பொறுத்த வரையில் இந்திராவின் அணுகுமுறை சிங்கள இனவெறியை கண்டிப்பதாக இருந்தது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்தது. இரண்டாவது தனது பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்நிய ஊடுருவலை அனுமதிக்கவில்ல. ஆனால் இன்று இந்தியாவின் தெற்கு எல்லை ஆபத்தான பகுதியாக மாறி வருகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள அமெரிக்காவின் ஏஜெண்டுகள்தான் ஈழத்தமிழரின் பிரச்சனையை இவ்விதமாக திசை திருப்புகிறார்கள்.

நளினியின் விடுதலை பற்றிய கோரிக்கைகள் என்னவானது?

அவர்களது மட்டுமல்ல ஆயுள்தண்டனை பெற்று தண்டனைக் காலத்தை முடித்தவர்கள் அனைவரையுமே விடுதலை செய்யத்தான் கோருகிறோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ முறையிட்டால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. சிலருக்கு இது வாய்க்கிறது சிலருக்கு வாய்க்காமல் போகிறது.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டும் ஆயுள் தண்டனையின் காலம் எவ்வளவு என்கிற வாதம் இந்தியாவில் ஒரு சர்ச்சையாக இன்று நடக்கிறது. என்னுடைய வாதம் முதலாவது மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுக்க உள்ள 127 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. புத்தரும், மஹாவீரரும். காந்தியும் பிறந்த நாட்டில் மரண தண்டனை இன்னும் இருக்கிறது.

மரண தண்டனை விதிப்பதால் நடபெறும் கொலைகளை தடுத்துவிட முடியாது என்பதை புள்ளி விபரங்கள் நமக்கு காட்டுகின்றன. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஆயுள் தண்டனை காலமும் எத்தனை ஆண்டுகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

சிறைக்கைதிகளின் நடத்தை பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு ஒன்றிருக்கிறது. ஒரு ஆயுள் தண்டனை கைதி பத்து ஆண்டுகள் நன்நடத்தையாக இருந்தால் அந்த குழு அவருக்காக பரிந்துரைத்தால் கைதி விடுதலை செய்யப்படுவார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த குழு கூடவே இல்லை. தமிழக சிறைகளில் இருபது ஆண்டுகளாக இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகளும் இருக்கிறார்கள்.

சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற வேண்டும் என்று சொல்கிறது மணிமேகலைக் காப்பியம். ஆந்திராவில் சட்டம் இருக்கிறது. முதல் மூன்று மாதம் கைதி ஒழுங்காக நடந்து கொண்டால் ஆண்டு தோறும் ஒரு மாதம் விடுப்பு கொடுத்து கைதியை குடும்பத்தோடு இருக்க அனுமதிப்பார்கள்.

வருடத்தில் ஒரு மாதம் இப்படி இருந்து கொண்டு பத்து வருடம் ஆனதும் தானாகவே அவர் விடுதலயாகி விடுவார். இப்படி விடுதலை ஆகிறவர்கள் கொடுஞ்செயல் எதையும் புரிந்ததாக சொல்ல முடியாது. நானும் சிறையில் இருந்திருக்கிறேன். தான் செய்த குற்றத்தை எண்ணி எண்ணி வருந்துபவர்களாகவே கைதிகள் இருக்கிறார்கள். தான் செய்த கொலையால் கொலையானவரின் குடும்பம் எவளவு சிரமப்படுகிறதோ அது போல தனது குடும்பமும் சிரமப்படுவதை நினைத்து வருந்துகிறார்கள்.

நான் பல ஆயுள் தண்டனை கைதிகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாராவது அடித்தால் கூட அவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள். காரணம் சிறை அவர்களை மாற்றியிருக்கிறது அவர்கள் மனந்திருந்தியிருக்கிறார்கள
. இப்படி மனந்திருந்தியவர்கள சிறையில் வைத்திருப்பது அவர்களை மீண்டும் உஷ்ணப்படுத்தும் செயல். ஆனால் பதினைந்தாண்டுகள் நளினி சிறையில் இருந்துவிட்டார். ஆனால் மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் வசதி நளினிக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு சிறையில் இருக்கும் இரு வேறு கைதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவது நியாயமாகாது.

தமிழகத்தில் உருப்படியான ஒரு எதிர்க்கட்சி இல்லாமல் போனது பல்வேறு பிரச்சனகளுக்கும் காரணமாகிறதா? எதிர்க்கட்சியின் இடம் நிரப்பப்படுமா?

அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறதே தவிர அது தன்னுடைய உண்மயான ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். சென்று முறையாக தன் கடமையை செய்ய வேண்டும். ஆளும் கட்சியான திமுகவும் தோழமை கட்சிகளையே எதிர்க்கட்சிகளாக பார்க்கிறது.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவின் தோழமை கட்சியினரே பாதிக்கப்பட்டார்கள் தாக்கப்பட்டார்கள். சென்னயில் சி.பி.எம் கட்சியை சேர்ந்த தேவி என்கிற பெண்மணி படுமோசமாக தாக்கப்பட்டார். முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நடந்த ஒழுங்கீனங்களை எல்லா கட்சியினரும் கண்டிக்கிறார்கள். பத்திரிகைகளும் கண்டிக்கின்றன. இதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார் என்றால் இவரது மதிப்பு உயர்ந்திருக்கும். இதை விமர்சித்த பழுத்த நாடாளுமன்ற உறுப்பினரான இரா.செழியனை தரம்தாழ்ந்த முறையில் விமர்சிக்கிறார். இது அவர் வகிக்கிற பதவிக்கு அழகல்ல. இத்தனைக்கும் செழியன் அவரது முன்னாள் தோழன். முன்னாள் தோழனிடம் முதல்வரே இப்படி நடந்து கொண்டால் கட்சி தொண்டர்கள் எப்படி நடந்து கொள்வார்கள். இந்தியாவின் மூத்த முதல்வர், செழியனைப் பற்றி சொல்லி இருக்கிற வார்த்தைகள் எனக்கு வேதனையை ஏற்படுத்கிறது.

1963ல் பாராளுமன்றத்தில் டாக்டர் லோகியா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். லோகியா முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு போனதும் செய்த முதல் வேலை இதுதான். நம்பிக்கயில்லா தீர்மானம் கொண்டு வந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பேசினார். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை லோகியா சொன்னார். அந்த மூன்று மணிநேரமும் நேரு அமைதியாக அவரது பேச்சைக் கேட்டார்.

கடைசியில் வாதங்கள் முடிந்த பிறகு லோகியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்ன நேரு "இருபது ஆண்டுகளுக்கு பிறகு லோகியாவின் பேச்சைக் கேட்கிறேன்.அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பது எனக்கு தெரிகிறது" என்று மட்டும் பதில் சொன்னார். வேறு எதுவும் பேசவில்லை. இருபது வருடமாகிறது இன்னும் நீங்கள் வளரவில்ல என்பதை நாகரீகமாக சொன்னார் நேரு.

அதே போல கலைஞரின் தலைவரான அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.விநாயகம் அண்ணாவை பார்த்து சொன்னார் "Mr Annadurai your days are Numbered" என்று சொன்னார். அனவரும் விநாயகம் மீது கோபப்பட்டார்கள் அவர் அப்படி சொல்லியிருக்கக்கூடாது காரணம் அண்ணா அப்போது உடல் நலம் குன்றியிருந்தார். விநாயகத்தின் பேச்சு அண்ணாவின் உயிருக்கும் பொருந்தும் பதவிக்கும் பொருந்தும் படியான இரண்டு பொருளோடு இருந்தது. அனவரும் கோபப்பட்ட போது அண்ணா விநாயகத்துக்கு சொன்னார். ''Yes my friend vinayakam, but my steps are measured’’ இதுதான் பண்பாடு. இதுமாதிரி பழக்க வழக்கங்கள்தான் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உதவும்.

விஜயகாந்தின் வளர்ச்சியை பற்றி என்ன நினக்கிறீர்கள்? அவர் தேறிவிட்டார் ஆனால் ஆட்சியை பிடிப்பாரா?

திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் செல்வாக்கு இழந்து வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சியினரும் ஒரு தொகுதிக்கு ஒரு கோடிக்கு மேல் செலவு செய்தார்கள். இரண்டு கட்சிகளுக்குமே கூட்டணி இருந்தது. ஆனாலும் கூட திமுக தொண்ணூறு இடங்களிலும் அதிமுக அறுபது இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இரண்டு பேரின் செல்வாக்கும் சரிந்து கொண்டிருப்பதை சட்டமன்ற தேர்தல் காட்டுகிறது.

இருவரின் மீதும் வளர்ந்து வந்திருக்கிற அதிருப்தியை விஜயகாந்த் அறுவடை செய்திருக்கிறார். ஒரு நல்ல மூன்றாவது அணி உருவாகுமானால் நிலைமை வேறுவிதமாக மாறும். மற்றபடி தமிழகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கிற தமிழர்களை பாதிக்கிற தேசிய பிரச்சனைகள் பற்றிய அவரது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜயகாந்த் இன்னும் வெளியிடவில்லை. வெளியிட்டால் அது பற்றி பேசலாம். அதுதான் அவருடைய நிரந்தரமான வளர்சிக்கு துணையாக இருக்கும் இல்லை பிரமாண்டமாக வளர்ந்த பிறகு கூட விழலுக்கு இறைத்த நீராக போகவும் வாய்பிருக்கிறது.

முன் எல்லா காலத்தையும் விட இலவச திட்டங்களும் கவர்ச்சிகரமான சலுகைகளும் இன்னும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறதே?

நமது மக்களை இன்னும் இலவசங்களை நாடி ஒடும் பிச்சைக்காரர்களாக மாற்றக்கூடாது. அரசாங்கத்தின் வேலை அதுவல்ல. அரசாங்கம் தனது குடிமக்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வியையும் அழித்தால் அவரவர் தேவையை அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் இலவச திட்டங்களாலோ காசு கொடுத்தோ மக்கள ஒட்டுப்போடும் மந்தைகளாக இனியும் நடத்த முடியாது என்று கடந்த தேர்தலில் நிரூபித்துவிட்டார்கள். இரண்டு சாராரும் காசு கொடுத்தார்கள் இரண்டு பக்கமும் மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஒட்டு யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்குத்தான் போட்டார்கள். பெரும்பாலான மக்களை இனி இலவச திட்டங்களால் ஏமாற்ற முடியாது.

நன்றி: ஆனந்த விகடன்
நேர்காணல்: டி.அருள்எழிலன்

ஐ,நா விடம் அனைத்துலக யூறிகள்சபையின் (ICJ) அவசரகோரிக்க.

ஐக்கிய நாடுகளிடம் அனைத்துலக யூறிகள் சபை இன்று ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகளின் அமைப்பிடம் விடுத்த கடுமையான வேண்டுகோளில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படும் இந் நிலைமையை வெகு உன்னிப்பாக அவதானித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான மனிதஉரிமைகள் ஆணைக்குழு ஒன்றை இலங்கையில் நிறுவும்படியான தங்களின் கடுமையான நிலைப்பாட்டை மீளவலியுறுத்தியுமுள்ளது.

இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மனிதஉரிமை மற்றும், மனிதாபிமான பேரவலம் குறித்தும் கட்டுப்பாடற்ற படைகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் (ICJ) பெரும் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் அமைப்பு வாளாதிருக்க முடியாது. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையிலும் சர்வதேச சட்டங்கள் மீறப்படாததை உறுதிப்படுத்தும் அதேசமயம் தண்டனைகள் பற்றிய பயம் எதுவுமற்ற சூழலில் மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபடும் தரப்புகளை முறியடிக்கும் வகையிலும் ஐ.நா மனிதஉரிமைகள் அமைப்பு உடன் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கடந்த கூட்டத்தொடரின் பின்னர் பொதுமககள் மீதான கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் (ICJ), பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுதல், காணாமல்போதல், சித்திரவதைக்குட்படுத்தப்படல், வலிந்த தூண்டுதலாலான இடப்பெயர்வுகள், குழந்தைகள் படையில் சேர்க்கப்படுதல் போன்ற போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக விசனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 10ல் கொழும்பில் இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நடராசா ரவிராஜின் திட்டமிட்ட கோரப்படுகொலையால் அதிர்ச்சியடைந்திருக்கும் இவ் அமைப்பு ஒரு ஆண்டு காலத்தில் இவருக்கு முன் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராஐசிங்கம் படுகொலை பற்றிய விசாரணைகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை எனறு விசனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகள் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அனைத்துலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்தவிதிமுறைகளை (இராணுவமற்ற பொதுமக்கள் இலக்குகள் தொடர்பில் தெளிவான வேறுபாடுகளை விளங்கி செயற்படுதல்) மதிக்காது செயற்படுவதால் வாகரையில் நவம்பர் 8இல் 40க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் 100க்கு அதிகமானோர் காயங்களுக்கும் உள்ளானது போன்றும் அவலங்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருக்கும் இவ் அமைப்பு இதுதொடர்பில் கடுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளின் அவசியம் பற்றியும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவசாதனங்களையும் போராளிகளையும் பொதுமக்களுக்கு அண்மித்த இடங்களில் வைத்திருக்காததை உறுதிப்படுத்தும்படி விடுதலைப்புலிகளையும் (ICJ) கோரியுள்ளது.
நன்றி>பதிவு.

தமிழீழமானாலும், மாற்றுதீர்வானாலும் மகிழ்சி- கருணாநிதி.

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் புதுடில்லியில் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவது தொடர்பில் தான் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்:

இலங்கையில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டின் மனித உரிமையை முழுமையாக நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அக்குழு, இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை மன்றம் தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளும் மனிதாபிமான சட்டங்களும் மிக மோசமாக மீறப்படுவதை நிறுத்துவதிலும் மேலும் சிதைவுறாமல் தடுப்பதிலும் மனித உரிமை மன்றம் ஆக்கபூர்வமான பணியைச் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்று அது கூறியுள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது, சித்திரவதைப்படுத்தப்படுவது போன்ற கொடுமைகளுடன் மக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவது, சிறார்களை பலவந்தப்படுத்தி படையில் சேர்க்கப்படுவது குறித்து தொடர்ந்து அறிக்கைகளைத் தாம் பெற்று வருவதாக தெரிவித்த குழு, இவை யுத்தகால குற்றங்கள் எனவும் சாடியது.

பொதுமக்களையும் இராணுவ இலக்குகளையும் பிரித்து பார்க்க வேண்டிய அடிப்படையைக் கூட மதிக்காமல் சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை நடத்துகின்றன. இதனால் இராணுவத் தாக்குதல்களின்போது அநாவசியமான உயிர்ச்சேதக்களும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் நிகழ்கின்றன.

பாகுபாடற்ற, முறையான, கடுமையான விசாரணைகள் செய்யப்படவேண்டும். உதாரணமாக கடந்த 8 ஆம் நாள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்குழு கேட்டுள்ளது.

முன்னைய வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய அரச தலைவர் விசாரணைக் குழுவை அறிவித்த பின்னர் மனித உரிமைகளை நசுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன என்பதையும் அக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

விசாரணையோடு அனைத்துக் குழுக்களாலும் மனித உரிமைகள் சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் மேலும் நிகழாமல் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவசியம் என அது வலியுறுத்தியுள்ளது.

இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் உரையின்போது, ஐ.நா உறுப்பு நாட்டின் பிரதிநிதி ஒருவர், இலங்கையில் சீரழிந்து வரும் மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் செயல்பாடு குறித்தும், தண்டனை அளிக்கும் உரிமை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய பின்லாந்து நாட்டுப் பிரதிநிதி, இலங்கையில் மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பெரும் கவலை கொண்டுள்ளது என்றார்.
அண்மையில் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறினார் சுவிற்சர்லாந்துப் பிரதிநிதி.

அரசாங்கத்தின் விசாரணைக் குழுவை வெறும் பொதுத் தொடர்பு பயிற்சி என்று கூறி, அதனை மனித உரிமைக் குழு நிராகரித்தது.

இன்றைய நிலையில் இராணுவத்தினதோ, காவல்துறையினதோ மனநிலை எந்த வகையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மனித உரிமை மீறல்கள் குறித்து எவ்விதமான ஆழமான விசாரணைகளையும் நடக்காமல் தடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை எனத் தாம் அறிய வந்திருப்பதாக ஆசிய மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ஆட்கடத்தல், காணமல்போதல், கொலை செய்யப்படுதல் போன்றவை குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்திருப்பது, ஒரு பொதுத் தொடர்பு பயிற்சி மட்டுமே. தீவிர விசாரணை எதுவும் இல்லை என்றது.

இலங்கையில் அனைத்து சட்டவிதிமுறைகளும் முடங்கிக் கிடக்கின்றன என்றும் குழு கூறியது.
இவ்வேளையில் கனடா, பிரிட்டனுக்கான ஐ.நா பிரிதிநிகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்துக் கவலை தெரிவித்தனர்.
நன்றி>புதினம்.

Wednesday, November 29, 2006

யாழ். பல்கலைக்கழகத்தை மூடியது சிறிலங்கா அரசு:என்ரிவி.

தமிழ் மக்களின் கல்விப் பாதையை சிறிலங்கா அரசு மூடிவிட்டது. நாளுக்கு நாள் இலங்கை நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று இந்திய தொலைக்காட்சியான என்டிரிவி செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்புக் தளம் என சிறிலங்கா அரசினால் முத்திரை குத்தப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்று வந்த என்டிரிவி தொலைக்காட்சி நிறுவனம் அங்குள்ள நிலைமை குறித்து சோகமான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் ஓகஸ்ட் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது. ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி, மக்களுக்கான கல்விப் பாதையை அடைத்து விட்டார்கள். கிளிநோச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழி இல்லாமல் அரசாங்கம் செய்து விட்டது.

விடுதலைப் புலிகளின் முக்கிய ஆட்சேர்ப்புக் களமாக பல்கலைக்கழகம் திகழ்கிறது என அரசாங்கம் நம்புவதால், ஓகஸ்ட் 11 ஆம் திகதி மீண்டும் தாக்குதல்கள் உக்கிரமடைந்ததில் இருந்து, 1,300 மாணவர்கள் பல்கலைக்கழகம் வருவதை நிறுத்திவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து 6,000 மாணவர்களை விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பில் சேர்த்து பயிற்சி அளிக்கப்போகிறார்கள் என எங்களுக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் ஏ-9 பாதை மூடப்பட்டது என்றார் சிறிலங்கா அரசின் சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன.
யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.சந்திரசிறியும் பல்கலைக்கழகத்தை ஆபத்தான பகுதியாகக் கருதுகிறார்.

பல்கலைக்கழகத்தைச் சோதனையிட்ட போது குண்டுகள், செய்மதி தொலைபேசிகள், விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்கள் போன்றவற்றைக் கைப்பற்றினோம். பல்கலைக்கழகத்தில் தீவிர விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது நிலைமை வேறாக இருந்தது. தீவிர விடுதலைப் புலி என சொல்லப்படுவர் கூட காமிராவுக்கு முகத்தைக் காட்டப் பயப்படுகிறார். அண்மையில் இராணுவத்தால் ஒரு மாணவர் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள். அடுத்தது தாங்களோ என்று அச்சப்படுகிறார்கள்.

இங்கு உண்மை செத்து விட்டது. உண்மை பேசுபவர் குறிவைக்கப்படுகிறார். அதனால்தான் நாங்கள் உண்மையைப் பேசவோ காமிராவுக்கு முகத்தைக் காட்டவோ பயப்படுகிறோம் என்கிறார் ஒரு மாணவர்.

அரசாங்கத்தின் கருத்தை மறுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல், பல்கலைக்கழகத்தில் மொத்தம் இருப்பதே 5,300 மாணவர்கள்தான். அப்படியிருக்க 6,000 மாணவர்களை எங்கிருந்து பிடிப்பது என்றார்.
மேலும் இந்த மாணவர்கள் 75 விழுக்காட்டினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இயக்கத்தில் சேர்வதாக இருந்தால் அங்கேயே சேர்ந்திருப்பார்கள். இயக்கத்தில் சேர இங்கு வரவேண்டிய தேவை இல்லை என்று மேலும் கூறினார்.
நோர்வேயிலிருந்து அவுஸ்திரேலியா வரை உலகெங்கும் பரவி வாழும் ஒரு சமூகத்தின், அதன் மக்கள் தொகை பாதியாகக் குறைந்த விட்ட நிலையில் இந்த மாணவர்கள் தனித்து நிற்கிறார்கள்.
இவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது பற்றிப் பேசுகிறார்கள். சிங்களப் பகுதிக்கும் தமிழ்ப் பகுதிக்கும் உள்ள பிளவு பற்றிப் பேசுகிறார்கள். தனித்தமிழீழம் என்ற தங்களது இலக்கில் உறுதியாக இருக்கிறார்கள்

தமிழீழம் என்பது விடுதலைப் புலிகள் இயக்கத கூறியதல்ல. தந்தை செல்வநாயகத்தால் 1977 இல் கூறப்பட்டது. எங்கள் கோரிக்கையானது- தேவையானது. எங்களுக்கென்று ஒரு தாய்நாட்டை நாங்கள் கேட்கிறோம். எங்களது போராட்டத்தில் விடுதலைப் புலிகளும் பங்கெடுத்துள்ளனர் என்றார் ஒரு மாணவர்.

மேலும் இவர்கள் தங்களைத் தனிச்சிறபபு மிக்கவர்களாகக் கருதுகிறார்கள். போரால் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் படித்த சமூகம் - தனித்தமிழ் நாடு என்ற கனவை அடைவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கை வகிக்கும் சமூகம் எனக் கருதுகிறார்கள் என்று தெரிவிக்கிறது என்டிரிவியின் கட்டுரை.
நன்றி>புதினம்.

அமெரிக்காவில் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படுமா?

விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தொடர்பில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்துள்ளார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது.

இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல், ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
நன்றி< பதிவு.

Tuesday, November 28, 2006

மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்கவேண்டும்-திருமாவளவன்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வரவேற்றதற்கு இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தொல். திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும்போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வந்தார். அவரை இந்திய அரசு வரவேற்றது.
இது எட்டுக் கோடி தமிழர்களையும் அவமானப்படுத்திய செயலாகும். மேலும் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் அவரை வரவேற்றது தமிழர்களை அவமானப்படுத்திய செயல் ஆகும்.

இந்த செயலுக்கு தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் கடற்படையில் கூட்டுப்படை உருவாக்கப் போவதாக தெரிகிறது. அப்படி ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு செய்து கொண்டால் கடுமையான போராட்டத்தை இந்திய அரசு சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
நன்றி>புதினம்.

Monday, November 27, 2006

பிரபாகரனுக்கு கொரியாவில் வேலைவாய்பு? மேர்வின் சில்வா!!!

நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

சிங்களவர் மத்தியில் என்றுமே வைராக்கியம் இல்லை. தமிழ், சிங்கள மக்களிடையே இருந்த உறவுகள் இன்று விரிந்துசென்றுள்ளன. நாம் வரலாற்றை தெரிந்து வைத்திருக்கவில்லை. துட்டகைமுனு என்ன செய்தார் என்பதைகூட நாம் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஒருவருட காலத்திற்குள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் சபையில் தெரிவிக்கின்றார். ஆனால், பிரேமதாச முதல் எத்தனை பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாவரும் கிளிநொச்சியிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ வைத்து கொலை செய்யப்படவில்லை. மஹிந்த சிந்தனையில் இனபேதத்திற்கு இடமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். தொழில் உறவு அமைச்சில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பிள்ளை கிடைக்கும் முன்னர் சோமாவதியா, ஞானப்பாலவா என பெயர் சூட்ட முடியாது.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் பொறுமை காக்கவேண்டும். வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் என்ற சொல்லை நிறுத்திவிட்டு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும். எமது அமைச்சில் ஊழல் இடம்பெற்றதாக கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அமைச்சரும் நானும் வீட்டுக்கு போவதற்கு தயாராக இருக்கின்றோம். அது குறித்து விசாரணை செய்வதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு இருக்கின்றது என்பதனை நினைவுபடுத்த இருக்கின்றேன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றிரவு பிறந்த குழந்தைபோல பேசுகின்றார். ஆயுதம் எடுத்தது யார்? துவக்குச்சூட்டுக்கு ஆட்லறி மூலமே பதில் வழங்குவோம். அடித்தால் திருப்பி அடிக்காத சிங்களவன் தன் இனத்தின் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். சிங்களவனுக்கு என்றுமே முதுகில் காயமிருக்காது. அவனுக்கு நெஞ்சிலேயே காயம் இருக்கும். நான் அடிக்கமாட்டேன். அடித்தால் அவர் பூதவுடல் வைக்கும் மலர்ச்சாலையிலேயே இருக்கவேண்டிவரும்.
நன்றி>லங்கசிறீ.

தமிழருக்காக கருணாநிதி, மகள் கனிமொழி உண்ணாவிரதம்.


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று உண்ணாவிரதம் நடந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி மகளும், கவிஞருமான கனிமொழி தலைமை தாங்கினார். கவிஞர் வைரமுத்து உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எழுத்தாளர்கள், கவிஞர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல தமிழர்கள் வேதனைபட்டால் அவர்களுக்காக நாங்களும் வேதனைபடுவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தை நான் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் நான் தொடங்கி வைக்க வில்லை.

5-6-1956-ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றம் முன்பு ஈழத்தமிழர்கள் உண்ணா விரதம் தொடங்கினார்கள். இலங்கையில் சிங்களம் ஆட்சி மொழி என்பதை கண்டித்து அப்போது போராட்டத்தை தொடங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் தாய்மொழியை முதலில் அழியுங்கள் என்பார்கள். அது போல்தான் தமிழின படுகொலையை கண்டித்து முதலில் தாய்மொழி தமிழ் மீது தொடங்கியது.

1956-ல் தொடங்கிய போராட்டம் அன்று முதல் இன்று வரை அரை நூற்றாண்டு காலமாக எண்ணற்ற போராட்டங்கள் சிங்கள அரசுக்கு எதிராக நடந்து இருந்தது. அதில் இந்த போராட்டமும் ஒன்று. இதை நான், தொடங்கி வைக்கவில்லை. யாழ்ப்பாணம் வாகரையில் தமிழர்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்று சிங்கள அரசே அறிவித்துள்ளது.

இலங்கையில் ரத்த கம்பளத்தில் நடக்கும் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அவருக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்திய அரசை கேட்கிறேன். இது நியாயமாப இலங்கை அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேக்கு மரியாதை தரலாம். ஆனால் அந்த பதவிக்குரிய வேலையை அவர் செய்கிறாரா? செய்யவில்லையே எனவேதான் கண்டிக்கிறோம்.

இதுவரை 18,412 மாவீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தமிழ் ஈழ போராட்டத்தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மாவீரர்கள் கல்லறை மீது புல்டோசர்கள் வைத்து உழுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்படும் தமிழர்களின் சடலங்களை மீண்டும் தூக்கில் தொங்க விடுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள மாவீரர் கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது.

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக ரத்த கண்ணீர் வடிக்கிறேன். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறந்துவிடவேண்டும். இலங்கை அரசிடம் கேள்வி கேட்கிறேன். அங்கு நடப்பது யுத்தமா? அல்லது இன படுகொலையா? எம்.பி.க்கள், எழுத்தாளர்கள், அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்படு கிறார்கள். இந்த சம்பவங்களுக்கு எந்த எப்.ஐ.ஆரும் இல்லை. அதுபற்றி கேட்டால் அடையாளம் தெரியாத துப்பாக்கியாளர்கள் கொல்லப்பட்டதாக அரசு சொல்கிறது. அந்த துப்பாக்கியாளர்கள் யார்? அவர்களுக்கு துப்பாகி கொடுத்தது யார்? இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வாடுகின்ற தமிழர்களில் ஈழத்தமிழர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் கலைஞர்தான். அவர் அரசின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார். பூனை வாயில் சிக்கிய மீன் குழம்பாகாது. அது போல் இந்தியா வழங்கும் நிவாரண பொருட்களை சிங்கள அரசிடம் கொடுத்தால் தமிழர்களிடம் செல்லாது. ராஜபக்சேவின் பசப்பு வார்த்தைகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம். தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ உடனடி நடவடிக்கை தேவை. மடிந்து வரும் தமிழர்களை காக்க தனி தமிழ், ஈழம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவிஞர் கனிமொழி பேசியதாவது:-

அரசியல் கட்சிகள்தான் சமுதாய பிரச்சினைக்கு போராட வேண்டும் என்பதல்ல சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்களும் போராட வேண்டும்.

எனது இனம், எனது சமுதாயம் ஒதுக்கப்படும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை தேவையில்லை. இலங்கையில் அரை நூற்றாண்டாக தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. அதை பார்த்து நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அரசே கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையை கண்டித்துதான் இந்த போராட்டம் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., கவிஞர் அறிவுமதி, ஞானக் கூத்தன், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், விஜயா தாயன்பன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, நடிகை ஸ்ரீபிரியா, சேப் பாக்கம் வி.சி.மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சத்யராஜ் போராட்டத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். மாலையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில் வெளியிடப்பட்ட கோரிக்கை வருமாறு:-

* யாழ்ப்பாண நெடுஞ்சாலையை உடனே திறக்க வேண்டும்.

* தமிழர்கள் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும்

* இந்தியா வழங்கும் உணவு பொருட்களை யாழ்ப்பாண தமிழர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

* தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்த இலங்கை அதிகாரியிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும்.

* இலங்கை அரசோடு எந்த ராணுவஒப்பந்தமும் செய்யக்கூடாது.
நன்றி>லங்காசிறீ.

தமிழீழத் தனியரசுதான் தீர்வு-தேசியத் தலைவர் பிரபாகரன்.


தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்- தமிழ்நாட்டு ஆதரவு தொடர வேண்டும்: தேசியத் தலைவர் பிரபாகரன்.

அமைதி போதித்த நாடுகள் தங்களது மௌனத்திற்குள் தம் மனச்சாட்சியினைப் புதைத்திருக்கும் வேளையில் தமிழர் தாயகத்தின் மீது பாரிய அவலம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. பிரதான பாதைகளை மூடி தமிழ் மக்களை அவர்களது சொந்த நிலத்திலேயே சிறையிட்டு வைத்திருக்கின்றது சிங்கள அரசு. அம்மக்களது நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, இதன் மூலம் அவர்களது சமூக வாழ்வினைக் கட்டுப்படுத்தி அவர்களது சுதந்திரத்தினை இல்லாமற்செய்து அவர்களை அதற்குள் கொடுமைப்படுத்தி வருகின்றது. சிங்கள அரசாங்கம் தமிழர் தாயகத்தினைத் துண்டாடி, இராணுவ முகாம்களை அமைத்து, முட்கம்பிகள் மூலம் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, அதனையொரு மாபெரும் மனித வதைமுகாமாக மாற்றியிருக்கின்றது.

சிங்கள அரசாங்கம் இராணுவ மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு முனைகளிலும் எம்மக்கள்மீது போரினைத் திணித்திருக்கின்றது. முன்னொருபோதுமே நிகழ்ந்திராத வகையில் எங்களது மக்கள் அவர்களது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்: எண்ணுக்கணக்கற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், அடித்துத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல், பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் கொடுமைகள், படுகொலைகள், காணாமற் போதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் என்பன தங்குதடையின்றி நடந்துகொண்டிருக்கின்றன. மறுமுனையில் எமது மக்கள் பொருளாதாரத் தடை, உணவு, மருத்துவம், போக்குவரத்து மற்றும் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்குமான தடை ஆகியவற்றுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தநிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள், மற்றும் பொறுமையுடன் அமைதி காத்த ஐந்து ஆண்டுகள் ஆகியவற்றிற்குப் பின்னரும் சமாதானத்தின் பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டவில்லை. தாங்கமுடியாத சுமைகளை எம் மக்கள் அவர்களது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, பிணிகளுடனும், பசியுடனும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களது மக்களுக்கு உணவையும் மருந்தையும் மறுத்து, அவர்களைப் பட்டினிச் சாவு நிலைக்குகள் கொண்டுசெல்லும் சிங்கள அரசாங்கம் எமது மக்களுக்கு இரக்கத்தினைக் காட்டி அவர்களது அரசியல் உரிமைகள் வழங்கும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனமேயன்றி, வேறொன்றுமல்ல.

அறிவியலில் ஏற்பட்டுவரும் அதீத வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட உலகப் பார்வையும் புதிய யுகத்திற்குள் மனித இனத்தினைக் கொண்டுசெல்கின்றது. அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சிந்தனையும், கருத்துக்களும், சித்தாந்தங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகி, சமூகப் புறநிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆயினும், சிங்கள தேசத்திலோ அதன் சிந்தனைகள், சித்தாந்தங்களிலும் சரி, அல்லது அதன் சமூக உலகிலும் சரி எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சிங்கள தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திப்பதற்கு மறுத்துக்கொண்டிருக்கின்றது.

சிங்கள தேசம் அதன் பண்டைய இதிகாசமான மகாவம்சக் கருத்துக்களின் தவறான பிரயோகங்களால் தொடர்ந்தும் வழிதவறிச்சென்று, அதனால் உருவாக்கப்பட்ட பேரினவாத கருத்துக்களுக்குள் மூழ்கிக்கிடக்கின்றது. இந்தப் பொறிக்குள் இருந்த தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல், சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளை அதன் பிரதான தேசிய சித்தாந்தமாகப் பின்பற்றி வருகின்றது. இந்தப் போதனைகள் அதன் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், இன்னும் ஏன் அதன் ஊடகங்களிலும் கூடப் பரவியிருக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளின் இந்த ஆதிக்கம் அதன் மாணவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என்போரை அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக சிந்திக்கவிடாமல் செய்திருக்கின்றது. துரதிஸ்டவசமாக தமிழர்களின் தேசியப் பிரச்சினையினை நாகரீகமான முறையில் தீர்ப்பதற்கு சிங்களத் தலைவர்கள் உண்மையான முயற்சிகள் எடுப்பதை இது தடுத்துவருகின்றது.

எமது விடுதலை அமைப்பும் சரி, எமது மக்களும் சரி ஒருபோதுமே போரை விரும்பியதில்லை. எமது மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அமைதிவழி அணுகுமுறையினையே எப்போதும் விரும்பினோம். அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் எப்போதும் தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் ஆரம்பித்து ஜெனீவா வரை பல்வேறு தடவைகள், பல்வேறு நேரங்களில், பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணையோடும், சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்தோடும் பல்வேறு நாட்டுத் தலைநகரங்களில் நடைபெற்றுவரும் தற்போதைய அமைதி முயற்சிகள் முற்றிலும் வித்தியாசமானவை.

ஒக்ரோபர் 31, 2000 இல் அப்போதைய நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் வன்னிக்கு விஜயம் செய்து, எங்களைச் சந்தித்ததுடன் இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகியது. முற்றிலும் வித்தியாசமான காலகட்டத்தில், வித்தியாசமான வரலாற்றுச் சூழலில், வித்தியாசமான வடிவத்தில் வித்தியாசமான பாதையில் இந்த அமைதிப் பயணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சமாதானத்தை நோக்கிய முயற்சிகள், சிங்கள அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப்போர் என இரண்டு முனைகளில் இது நகர்ந்துகொண்டிருக்கின்றது.
நாங்கள் அமைதி காத்த ஆறு ஆண்டுகளில், எங்களது முயற்சிகளில் நாங்கள் நேர்மையாகச் செயற்பட்டோம். உண்மையில், அமைதி முயற்சிகளை நாங்களே ஆரம்பித்தோம்.

ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தினைப் பிரகடனப்படுத்தி அமைதி முயற்சிகளுக்கான வலுவான அடித்தளத்தினை நாங்கள் அமைத்தோம். அமைதிப் பேச்சுக்களுக்கு நாம் எவ்வித நிபந்தனைகளையோ காலக்கெடுக்களையோ விதிக்கவில்லை. இந்த முயற்சிகளை பலவீனமான நிலையிலிருந்துகொண்டு நாங்கள் மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பினையும், இயக்கச்சி-ஆனையிறவு இராணுவக் கூட்டுப்படைத் தளத்தினையும் நாங்கள் மீளக் கைப்பற்றினோம். சிங்கள இராணுவத்தின் அக்கினிக் சுவாலை படைநடவடிக்கையினை நாங்கள் தோற்கடித்தோம். எங்களது போராட்ட வரலாற்றில் பாரிய இராணுவ சாதனைகளை நாங்கள் ஈட்டினோம். இந்தப் பலமான நிலையில் இருந்துகொண்டுதான் நாங்கள் இந்தச் சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம்.

தென்னிலங்கையின் நிலைமையோ முற்றிலும் மாறானதாக இருந்தது. அடுத்தடுத்துத் தோல்விகளை எதிர்கொண்ட தென்னிலங்கை போரை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தினை இழந்துகொண்டிருந்தது. இராணுவத்தின் முதுகெலும்பு முறிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் சிங்கள தேசம் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டது. அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு வந்த இந்த ஐந்து ஆண்டுகளில், விக்கிரமசிங்க, பண்டாரநாயக்கா, ராஜபக்ச என மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் கூண்டில் அடைக்கப்பட்ட அமைதிப் புறாவினை ஒரு கூண்டுக்குள் இருந்து மற்றொன்றுக்கு மாற்றியதேயொழிய சுதந்திரமாகப் பறந்துசெல்ல அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கூண்டில் அடைக்கப்பட்டு பலமுறை குத்தப்பட்ட அமைதிப் புறா தற்போது தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றது.

விக்கிரமசிங்கவுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபின்னர் அவரது அரசாங்கத்துடன் ஆறு மாதங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். முன்னைய சிங்கள அரசுகள் அனைத்தையும் போலவே, விக்கிரமசிங்க அரசாங்கமும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களையும், பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளையும் நடைமுறைப்படுத்தாமல் நேரத்தினை இழுத்தடித்து வந்தது. மக்களது வாழ்விடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவதற்கு அதன் இராணுவம் மறுத்தது, அப்பெரிய நிலப்பரப்புக்களை இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, எமது மக்களிடம் அவர்களது நிலத்தினைத் திருப்பிக் கொடுப்பதற்கு நிரந்தரமாக மறுத்தது. போர் நெருக்கடியினைக் குறைத்து, இயல்பு நிலையினைக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட உபகுழுவும் செயலிழந்து போனது. மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உபகுழுவும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளால் பலமிழந்துபோனது.

எமது மக்களது மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மறுத்த விக்கிரசிங்க அரசாங்கம் எமது அமைப்பினை உலகின் அரங்கில் ஓரங்கட்டுவதற்கு இரகசியமான முறையில் செயற்பட்டது. தமிழர் தாயத்தில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னரே தென்னிலங்கையில் செலவுசெய்வதற்கான நிதியினைப் பெற்றக்கொள்வதற்கென நன்கொடையாளர் மாநாடுகளை அது நடாத்தியது. வோசிங்டனில் நடாத்தப்பட்ட நன்கொடையாளர் மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யத் தவறிய விக்கிரமசிங்க அரசாங்கம் எமது அமைப்பை ஓரங்கட்டி, அவமானப்படுத்தியது. இதன்காரணமாக ரோக்கியோ மாநாட்டினைத் தவிர்ப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். விக்கிரமசிங்க அரசாங்கம் இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சர்வதேச பாதுகாப்பு வலைக்குள் எமது விடுதலை அமைப்பினைச் சிக்கவைத்து, எங்களை அழிப்பதற்கு அது சதி செய்தது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது, தென்னிலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குமாரதுங்கா அரசாங்கம் கடிவாளத்தினை எடுத்துக்கொண்டது. எங்களது வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்துவதற்கு மறுத்த அதேவேளையில், அவரது அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி எம்மீது நிழல் யுத்தத்தினைத் தீவிரப்படுத்தியது. இந்தத் துணை இராணுவக் குழுக்களால் தமிழர் தாயகம் வன்முறைக் குருதிக் களமாக மாறியது.

கல்விமான்கள், அரசியல்த் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களுக்கு அமைவாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது போராளிகள் மேற்கொண்டு வந்த அரசியற் பணிகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதன்காரணமாக எமது மக்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொடூரப் பிடியில் தனித்து விடப்பட்டார்கள். இறுதியில் சுனாமி புனர்வாழ்விற்கென அது கையொப்பமிட்ட பொதுக்கட்டமைப்பினைக்கூட சந்திரிக்கா அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. சிங்கள பேரினவாத போதனைகளுக்குள் இருந்து வெளிவரமுடியாத உச்ச நீதிமன்றம் ஒற்றையாட்சி அரசியலமைப்பினைக் காரணங்காட்டி, முற்றிலும் மனிதாபிமானம் நோக்கங்கொண்ட இந்த உடன்படிக்கையினை நிராகரித்தது.

இந்த நேரத்தில்தான் சிங்கள தேசம் தங்களது புதிய ஜனாதிபதியாக ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது. கடந்த காலச் சிங்களத் தலைவர்களைப் போலவே இவரும் இராணுவ வழித் தீர்விலேயே நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கடந்த மாவீரர் தின அறிக்கையில் நாம் விடுத்திருந்த இறுதி வேண்டுகோளை அவர் நிராகரித்தார். மாறாக, எமது இயக்கத்தினை அழிக்கும் நோக்கோடு ஒரு வளத்தில் போரை முடுக்கி விட்டிருக்கும் அவர், மறுவளத்தில் அமைதிவழித் தீர்வினைக் காண்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார். போரும் சமாதானமும் என்ற இந்த அணுகுமுறை அடிப்படையில் தவறானது. எந்த அமைப்புடன் பேசித் தீர்வு காணவேண்டுமோ அந்த விடுதலை அமைப்பினை ஓரங்கட்டி அழித்துவிட்டு தீர்வினைக் காண்பது என்பது சாத்தியமற்றது. இது சிங்களத் தலைவர்களின் முட்டாள்தனமேயாகும்.

தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது.

ராஜபக்ச அரசின் தாக்குதல்கள் தரை, கடல், வான்தாக்குதல்கள் வரை விரிவடைந்துள்ளன. ராஜபக்ச அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களுக்கு அவை விரும்பியவாறு யாரையும் கொல்வதற்குரிய சுதந்திரத்தினை வழங்கியிருக்கின்றது. தூரநோக்குடன் மாவிலாறில் இருந்தும் சம்ப+ரில் இருந்தும் நாம் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கல்களை சிங்கள இராணுவம் தவறாக மதிப்பிட்டது. தமிழர் நிலப்பரப்புக்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு பெருமளவு ஆயுத பலத்தினைப் பயன்படுத்தி பாரிய வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தது. இதனால் தமிழர் நிலம் இரத்தபூமியாக மாறியது.

இந்நிலையில்தான் சிங்கள அரசிற்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்குத் தீர்மானித்தோம். கிளாலி மற்றும் முகமாலைய+டாக முன்னேற முயன்ற சிங்களப் படைகள்மீது எமது படைகள் மின்னல் வேகத்தாக்குதல்களை நடாத்தின. கடுமையான இழப்புக்களைச் சந்தித்த எதிரி, தனது படை நடவடிக்கையினைத் தற்காலிகமாகக் கைவிடவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இருப்பினும், தனது இராணுவத் திட்டங்களை சிங்கள அரசு கைவிடவில்லை. தனது இராணுவ வழியினையே அது தொடர்ந்தும் பின்பற்றுகின்றது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ்மக்களை இன அழிப்புச் செய்துவருகின்ற அதேவேளையில், இந்த இன அழிப்பிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற எமது இயக்கத்தினைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து வருகின்றது. எமது இயக்கத்தின்; மீது அவப்பெயரினை ஏற்படுத்துவதற்கான மோசமான பிரச்சாரத்தினை அது கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது. எமது மக்களது ஏகோபித்த எதிர்ப்பினையும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபனையினையும் உதாசீனப்படுத்திவிட்டு, ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களுக்குச் இசைந்து எமது அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. எங்களை விரும்பத்தகாததோராகவும், வேண்டத்தகாதோராகவும் அவர்கள் ஒதுக்கி ஓரங்கட்டினர்.
நீதி, நியாயங்களைப் பற்றிச் சிந்திக்காது அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசுடன் எமக்கிருந்த சம பங்காளி மற்றும் படைவலுச் சமநிலையினை இது கடுமையாகப் பாதித்தது. சிங்கள அரசு கடும்போக்கினைக் கடைப்பிடிக்க இது ஊக்கப்படுத்தியது. இது இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினைப் பலவீனப்படுத்தியதுடன், சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது. சமாதான முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில நாடுகள், சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனஅழிப்புத் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியது மட்டுமன்றி, சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு ஆதரவாக இராணுவ மற்றும் நிதியுதவிகளையும் செய்துவருகின்றது. இந்த புறநிலைகள்தான் ராஜபக்ச அரசாங்கம் தமிழர் நிலங்கள் மீது முழுத் திமிருடன் தனது கொடூரமான படை நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தினைக் கொடுக்கின்றன.

தனது இராணுவப் போக்கில் நம்பிக்கை கொண்டிருப்பதன் காரணமாக ராஜபக்ச அரசு சமாதானப் பேச்சுக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சமாதான முயற்சிகளில் அதற்குள்ள அக்கறையின்மை காரணமாக இரண்டு ஜெனீவாப் பேச்சுக்களும் ஆக்கப+ர்வமானதாக அமையவில்லை. முதலாம் கட்டப் பேச்சுக்களில் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் கூட்டுச்சேர்ந்து செயற்படுவதை ஆதாரங்களோடும் புள்ளிவிபரங்களோடும் சம்பவக் கோர்வைகளோடும் பேச்சுமேசையில் சமர்ப்பித்தோம். இச்சான்றுகளை மறுக்கமுடியாத சிறிலங்கா அரசு ஒட்டுக் குழுக்களை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றி யுத்த நிறுத்த சரத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டது. எவ்வாறெனினும் முதலாவது ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் ஒரேயொரு மாற்றம் மட்டுமே ஏற்பட்டது. அரச மற்றும் ஒட்டுப்படைப் பயங்கரவாதம் தமிழர் தாயகத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டது.

இரண்டாவது ஜெனீவாப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன. எமது மக்கள் எதிர்நோக்கிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு இப்பேச்சுக்களில் முன்னுரிமை கொடுத்த நாம் யு-9 பாதை திறக்கப்பட வேண்டும் எனவும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மேலாக தனது இராணுவ நலன்களை முன்னிலைப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்தது.

இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இரங்க மறுத்த சிங்கள அரசாங்கம் தானே திட்டமிட்டு, ஏற்படுத்திய மனிதாபிமானப் பிரச்சினையினைக்கு ஒருபோதுமே தனது நிலையில் இருந்து மாறப்போவது கிடையாது. ஒரே நேரத்தில் போரும் செய்வோம் அமைதிப் பேச்சுக்களையும் நடத்துவோம் எனக் குதர்க்கம் பேசுவோர் பேச்சுக்குழுவில் இருக்கும்போது எப்படி அமைதிப் பேச்சுக்கள் முன்னகரும்? எப்படி நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்? எப்படிச் சமாதானம் வரும்?

தன்னை ஒரு அமைதிப் புறாவாகக் காட்டிக்கொள்வதற்காக சனாதிபதி ராஜபக்ச போலியான ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டினை அரங்கேற்றினார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க முடியாமல், கவனம் திசை திரும்பும் வரை நேரத்தினை இழுத்தடிக்க விரும்பினால் விசாரணைக் குழுக்களையோ, பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களையோ அமைத்தல் அல்லது அனைத்துக் கட்சி மாநாடுகள் அல்லது வட்ட மேசை மாநாடு என்பவற்றைக் கூட்டுதல் என்பனவே சிங்களத் தலைவர்கள் காலங்காலமாக மேற்கொண்டுவரும் பெயர்போன அரசியற் பாரம்பரியமாகும். இதனைத் தான் தற்போது ராஜபக்சவும் செய்துகொண்டிருக்கின்றார். தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காணுமாறு நாங்கள் விடுத்த அழைப்பினை நிராகரித்து, அனைத்துக் கட்சி மாநாடு என்ற போர்வைக்குள் அவர் பதுங்கிக்கொண்டுள்ளார். இருட்டறையொன்றுக்குள் கறுப்புப் ப+னையினைத் தேடியலைவதைப் போல, கடந்த பத்து மாதங்களாக இந்த அனைத்துக் கட்சிக்குழு தமிழர் பிரச்சினையினைத் தேடிக்கொண்டிருக்கின்றது.

அனைத்துக் கட்சி மாநாடு தோற்றுப் போனதும், சனாதிபதி ராஜபக்ச இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற தனது அடுத்த துருப்புச் சீட்டினைக் கையிலெடுத்திருக்கின்றார். தென்னிலங்கை மீது ஆட்சி செய்யும் பலத்தினைக் கொண்டிருக்கின்ற இந்த இருபெரும் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளே. தமிழர்கள் மீது இனஅழிப்பினை மேற்கொள்வதில் ஒன்றையொன்று போட்டிபோட்டு முந்திக்கொள்ளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக உருவாகியிருக்கும் கட்சிகளே இவை. அமைதிவழித் தீர்வினைக் காணுமாறு சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால், சரிந்துசெல்லும் பொருளாதார நிலைமையினால், அரசியல் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் ஏற்படும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக ராஜபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக சந்தர்ப்பவாத நகர்வே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேர்மையான நோக்கம் எதுவுமே கிடையாது. இந்த இரண்டு கட்சிகளும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கப்போவதில்லை. மேற்கூறிய விடயங்களுடன் நின்றுவிடாது, உலகினை ஏமாற்றுவதற்காக ராஜபக்ச அரசு அனைத்துக் கட்சி மாநாட்டினைச் சாகவிடாது நடாத்துவதில் தொடர்ந்தும் அக்கறையினைக் காட்டும்.

எனது அன்பான மக்களே,
நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்.
தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.

இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
நன்றி>புதினம்.

Sri Lanka rebel chief says independent state only option.

27 Nov 2006 12:48:24 GMT
Source: Reuters

Background
Sri Lanka conflict
More
COLOMBO, Nov 27 (Reuters) - The Tamil Tigers declared on Monday they now saw no other option than to push for an independent state in what analysts said was notice to Sri Lanka's government that a new chapter in the long civil war will deepen.
"The uncompromising stance of Sinhala chauvinism has left us with no other option but an independent state for the people of Tamil Eelam," shadowy Tiger leader Velupillai Prabhakaran said in an annual address emailed by the rebels to Reuters.
"We therefore ask the international community and the countries of the world that respect justice to recognise our freedom struggle," he added. The Tigers had been pushing for a separate homeland for minority Tamils within Sri Lanka, which President Mahinda Rajapakse has ruled out.
The two-decade civil war has killed more than 67,000 civilians, troops and rebel fighters since 1983, some 3,000 of those this year alone.

AlertNet news is provided by

http://www.alertnet.org/thenews/newsdesk/COL297645.htm

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே!!!


மேஜர்.ஜீவகன்(கடற்புலி)
(பாலசுந்தரம் ரவிச்சுந்தரம், வல்வெட்டிதுறை)
முளையாக:- 20.04.1971, விதையாக:-09.11.2001

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே, இப்புனிதநாளில் கண்ணீர் மலர்தூவி, உமக்கு எமது வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். உமது லட்சியம் தமிழர் தம் விடுதலையாம், அந்த நெருப்பினை நெஞ்சினில் சுமந்து, நீ நடந்த பாதையிலே நடந்து, எம் தேசியத்தலைவரின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறோம்.

இவர்கள்,

அம்மா, அண்ணா, அக்கா,தங்கை,அத்தான்மார்,அண்ணி,மருமக்கள்.

Sunday, November 26, 2006

மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.


இதுவரை வீரமரணம் அடைந்த எமது காவல் தெய்வங்களுக்கு, எமது வீர வணக்கங்கள்.

சர்வதேசமே எதிர்பார்க்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை.

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும்.

தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும்.

அதனைத்தொடர்ந்து 6.07 மணிக்கு சுடரேற்றப்படும்.

ஐந்து ஆண்டு சமாதான காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எந்த ஒரு சரத்தையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில்
கடந்த ஆண்டு மகிந்த அரச தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உரிய கால அவகாசம் கொடுத்து உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளாது போனால் எமது விடுதலைப் போராட்டத்தை தொடங்க நேரிடும் என்று எச்சரித்திருந்த நிலையில்

யாழிலும் வாகரையிலும் 6 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில்

சர்வதேச சமூகத்தின் குற்றவாளிக் கூண்டில் சிறிலங்கா நிறுத்தப்பட்டுள்ள நிலையில்-
சர்வதேச சமூகத்தை மட்டுமே நம்பி அமைதிப் பேச்சுக்களில் தமிழர் தரப்பு பங்கேற்றும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில்

இனியும் எதுவுமே செய்ய முடியாத நிலையில்

தென்னிலங்கையும் சர்வதேச இராஜதந்திரிகளும் நாளை தேசியத் தலைவர் ஆற்றவுள்ள உரை குறித்த ஆருடங்களையும் கட்டுரைகளையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வதேசம் இப்போது காத்திருக்கிறது.
நன்றி>புதினம்.

இன்றுடன் ராஜபக்சாவுக்குகான காலஅவகாசம் முடிகிறது.

-ஜுனியர் விகடனுக்கு தமிழ்செல்வன் பேட்டி-

இலங்கையில் இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை ஏடான ஜுனியர் விகடனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: நீங்கள் நடத்தப்போகிற மாவீரர் தினத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான உச்சகட்டப் போர் அறிவிப்பு இருக்கும் என்பதை மனதில் கொண்டு தான் சிறிலங்கா அரசு ஏ-9 பாதையைத் திறந்தது என்று சொல்லப்படுகிறதே?

பதில்: நாங்கள் இந்தப் பிரச்சனையை வேறு மாதிரியாகப் பார்க்கிறோம். நீங்கள் சொன்ன காரணங்களுக்காக சிறிலங்கா அரசு அந்தப் பாதையைத் திறக்கவில்லை. அந்தப் பாதை திறக்கப்பட்ட நாளன்று அமெரிக்கத் தலைநகர் வாசிங்ரனில், இலங்கையின் புனர்வாழ்வுக்கு நிதி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடங்கியது. இதில், ஏன் ஏ-9 பாதையை மூடிவிட்டு, பட்டினிச் சாவுகளுக்கு வழி திறக்கிறீர்கள்? என்ற கேள்வியைத்தான் சிறிலங்கா அரசிடம் அவர்கள் முதலில் கேட்பதாக இருந்தார்கள். இதற்குப் பதில் சொல்ல சிறிலங்கா அரசிடம் எந்தக் காரணமும் இல்லை.

பாதுகாப்பு, போரைத் தடுக்க என சிறிலங்கா அரசு தனக்குத்தானே சொல்லிக் கொண்டு ஊர், உலகத்தை ஏமாற்றிய விடயங்கள், அந்த மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் எடுபடாது. அதனால்தான் பெயரளவுக்கு அந்தப் பாதையைத் திறந்து விட்டது. இப்போதும் அந்தப் பாதை முழுவதுமாகத் திறந்து விடப்பட்டுள்ளது என்றுதான் சர்வதேச சமூகம் நினைக்கிறது.
ஆனால், உண்மையில் உணவுப் பொருட்களை ஏற்றிய ஒன்று அல்லது இரண்டு வாகனங்களை மட்டுமே அந்தப் பாதை வழியாக அரசு அனுமதித்தது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், உணவுப் பொருட்களை ஏற்றிய ஒரே ஒரு லொறியை மட்டுமே அனுமதித்தது.

இந்த லொறி வாகரைக்கு போனது. அங்கோ இரண்டு வாரங்களாக எந்த உணவும் கிடைக்காமல் அறுபதாயிரம் பேர் பட்டினிச்சாவை நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு லொறியில் வந்த உணவு போதுமா? இவர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் முழுவதும் ஆறு லட்சம் பேர் உணவு, மருந்துப் பொருட்கள் இல்லாமல் கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, ஏ-9 பாதை முறைப்படியும் திறக்கப்படவில்லை.

ஏற்கெனவே நாங்களும், சிறிலங்கா அரசும் செய்து கொண்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏ-9 பாதையை மூடுவது, திறப்பது குறித்த விவரங்கள், அறிவிப்புகள் செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாகவோ, போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வாயிலாகவோதான் கையாளப்பட வேண்டும். ஆனால், இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் சிறிலங்கா அரசு எந்த அறிவிப்பும் தரவில்லை. எங்களுக்கே ஊடகங்களைப் பார்த்துதான் விடயம் தெரிந்தது.

கேள்வி: உலக நாடுகள் மதிக்கும் இடத்தில் இருக்கும் சிறிலங்கா அரசுடன் நீங்கள் தொடர்ந்து மோதுவது, போருக்கு அரசுதான் காரணம் என்று சொல்வது போன்றவற்றை எப்படி ஏற்பது?
பதில்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் சம்மதித்த பிறகும், போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகும் போரை நீட்டித்துக்கொண்டிருந்தது, சிறிலங்கா அரசின் படைகள்தான். இதைப் பல உதாரணங்கள் மூலம் சர்வதேச அமைப்புக்களுக்கு சொல்லியிருக்கிறோம்.

ராஜபக்ச, பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இந்த ஒருவருட காலத்தில் நீங்கள் சொல்வது போல் உலக நாடுகள் மதிக்கும் இடத்தில் சிறிலங்கா இருந்திருந்தால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை மக்கள் ஏன் புலம்பெயர வேண்டும்?
1,154 பேர் சிறிலங்கா அரசாலும், துணை இராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் மிகக் கொடுமையான பட்டினிச் சாவுகள் 1952 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவின் தான்சானியாவில் ஏற்பட்டது.

யாழ். பகுதியிலும் அதைப்போல் சாவுகள் அரங்கேறப் போவதை சர்வதேச அமைப்புக்கள் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ராஜபக்ச ஏ-9 பாதையை மூடி அப்பகுதியில் குண்டு வீசாமல், விமானத் தாக்குதல் நடத்தாமல் தமிழர்கள் பட்டினியால் செத்து மடியட்டும் என்று முடிவு செய்திருப்பதை எப்படி நல்ல விடயம் என்று சொல்ல முடியும்? தனது இராணுவத்தில் இளம் சிறார்களை ராஜபக்சவின் அரசு வலுக்கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டிருப்பதை ஐ.நா. சபையே சுட்டிக்காட்டி அரசுக்கு நோட்டீசும் அனுப்பியிருக்கிறதே. இதெல்லாம் இலங்கையில் நல்லாட்சி நடைபெறுவதற்கு அடையாளங்களா? இந்த யதார்த்தங்களைப் பார்த்துதான் தமிழகத் தலைவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள்களை விடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

கேள்வி: மாவீரர் தினத்தில் உங்கள் தலைவர் உரையில் அனல் தெறிக்கும் என்ற பேச்சிருக்கிறதே?

பதில்: ஈழ விடுதலைக்காக மாண்ட வீரர்களின் நினைவாக நாங்கள் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சிதான் மாவீரர் தினம். இலங்கையில் இப்போதே போர்ச் சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சூழல் நிலவுவதைத்தான் சிறிலங்கா இராணுவம் விரும்புகிறது. இதுகுறித்த விவரமான அறிவிப்புகள் எங்கள் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையில் இருக்கும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

சிங்களப் படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும்.

-பாஸ்டன் குளோப் இதழ் எச்சரிக்கை-

தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம் வருமாறு:

இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது.

இருதரப்பிலும் இரத்தகளறியை ஏற்படுத்திய இந்த யுத்தமானது 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோது முடிவுக்கு வந்தது. அதே நேரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் ஆயுதங்களைக் கையளிப்பதால் தமிழர்களுக்கு இந்தியா ஆயுதம் அளிக்கும்போது இலங்கையின் உள்நாட்டு யுத்தமானது தெற்காசியாவின் இரு முதன்மையாக பகைமை நாடுகளிடையேயான நிழல் யுத்தமாக மாற்றமடையும்.

ஆகையால் இலங்கைத் தீவின் உள்நாட்டு யுத்தத்துக்கு அரசியல் வழியில் தீர்வு காண அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சரை புஷ் நிர்வாகம் கடந்த வாரம் அனுப்பி வைத்தது.
கடந்த சூலை மாத பயணத்தின் போது, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவதை முதன்மையாக கருதுவதாக தெரிவித்திருந்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சிறுபான்மை இன தமிழர்கள், தங்களது சொந்தத் தாயகத்தில் சுயாட்சி அரசாங்கத்தைப் பெறுவது அவசியம் என நம்புகிறது. இராணுவ வழித் தீர்வைவிட இந்துத் தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் அமைதியாக இணைந்து வாழ இத்தகைய ஒரு நிச்சயமற்ற திட்டமானது ஒரு அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்.

ஆனால் பெளச்சரின் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பயணமானது சில உறுதியான செயற்பாடுகளுக்கான நடைமுறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழ்ப் புலிகள் இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் தமிழ்ப் புலிகளுடன் தொடர்பேற்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இம்மாத இறுதியில் தமிழ்ப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள அமைதிப் பேச்சுக்களுக்கு முழு மனதுடன் புஷ் நிர்வாகம் பின்நிற்க வேண்டும்.

நிரந்தமான அமைதியில் வாசிங்டனின் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்த கூட்டாட்சி அமைப்பு கொண்ட இலங்கையில் தமிழர்களுக்கான சுய அரசாங்கமும் மனித உரிமைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசாங்கத்தின் (சிறிலங்கா) இராணுவத்தை வடபகுதியில் உள்ள தமிழர் பிரதேசங்களிலிருந்து விலகச் செய்வது அவசியமானதாகும். மனிதாபிமான ரீதியாக செயற்படுவதாக கூறும் சிறிலங்கா அரசாங்கமானது, நாட்டின் இதர பகுதிகளுடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் பாதையை திறக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதின் மூலமாகத்தான் இலங்கையில் அமைதி ஏற்படும். ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கான தளங்களாக தமிழர்களுக்கான நீதியும் அமைதியும் இருப்பதால் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமானதாக அது அமையும் என்று பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி>தென்செய்தி.

Saturday, November 25, 2006

தேசியத்தலைவரின் 52வது அகவையை வாழ்த்துவோம்.



பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்.

பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவரே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார்.

வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டு மண்ணிழந்து மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும்.

அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு ரஷ்சியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்?

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான், வரலாறு எனது வழிகாட்டி, எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார்.

திருக்குறளில் குறிப்பிட்டது போல "கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை" அதாவது, வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை, கவச எதிர்ப்புப்படை, என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள், கரும்புலிகள், வான்புலிகள், என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார்.

தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம். இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்படை, விமானப்படைத் தளங்களாலும், தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன்.

இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார்.

இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார். “பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை, அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு, அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார். எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரி எதிர்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி.

இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்ட இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.

இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது.

இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை.

அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது.
-யாரோ-

தமிழக போராட்டங்கள் உடலுக்கு புத்துணர்வை தருகின்றது!!!

தனது இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடத்தும் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய பயணம் மேற்கொள்ளும் முன்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது:

35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல ஊர்வலங்களையும் முழக்கங்களையும் முன்நின்று நடத்தியிருக்கிறேன். இந்த ஊர்வலங்கள் ஒருவகையில் உண்மையிலேயே சில வேளைகளில் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருகின்றன.
ஆகவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஊர்வலங்களில் கலந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் இலங்கையின் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய-சிறிலங்கா பொது கடற்பரப்பில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களை தடுப்பது குறித்தும் இந்தியப் பிரதமரிடம் பேச உள்ளேன்.
இருதரப்பு கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையால் இருநாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இந்திய மீனவர்களின் படகுகளை இலக்கு வைத்து கடத்திச் செல்லும் புலிகள் அவற்றை கடத்தலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

புலிகளும் அரசாங்கப் படைகளும் மீனவர்களைத் தாக்குவதாக இருநாட்டு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீனவர்களைத் தாக்கவில்லை என்று இராணுவம் மறுத்துள்ளது. மீனவர்களை பயன்படுத்தி கடற்படைக்கு எதிராக புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
வடக்கு-கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். இந்தியாவில் எதிர்வினை நடக்கும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை புலிகள் மேற்கொள்கின்றனர்.

தென்னிந்தியாவில் அகதிகள் பிரச்சனையை பாரிய விடயமாக்க புலிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இருநாடுகளுக்கு இடையே இந்த விடயத்தில் புரிதல் உள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் மத்தியிலிருந்து வர்த்தகர்கள் நிறுவனங்களை மூட வேண்டும் என்று புலிகள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் இராணுவத்தின் முயற்சியில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை. விநியோகத்தில்தான் பிரச்சனை உள்ளது.

இந்தியா எமது அண்டை நாடு மட்டும் அல்ல. நட்பு நாடும் கூட. 7 ஆயிரம் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது என்றார் மகிந்த ராஜபக்ச.
நன்றி>புதினம்.

சிறிலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானம் ஒத்திவைப்பு.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஐ.நாவின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஓன்றியத்தால் கொண்டுவரப்படவிருந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுப்படுத்துவதற்கும் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மார்ச் மாதம் வரை சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றிய தலைமை பொறுப்பை வகிக்கும் பின்லாந்து தான் இந்த தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பிக்க முயற்சித்து வருகிறது.

கடந்த செப்ரெம்பர் மாதம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற, பின்லாந்து முயன்றபோது சில ஆசிய நாடுகளும், அரபு நாடுகளின் கூட்டமைப்பும் சிறிலங்கா அரசுக்கு சார்பாக இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையால் அன்று இந்த தீர்மானம் பிற்போடப்பட்டிருந்தது.

படுகொலைகள், காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தமக்கு சிறிது கால அவகாசம் தரும்படி அண்மையில் சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Friday, November 24, 2006

தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க இந்தியா கோரும.

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா கோரும் என இந்துஆசிய சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படலாம் என இந்திய அரசியல் தரப்புக்களை கோடிட்டு அச்சேவை தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க போவதில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி இந்திய தலைவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் போது அதில் தமிழீழ விடுதலைப்புலிகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது ஏனைய தமிழ் அமைப்புகளையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கை இதில் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினையை இந்தியாவின் எண்ணப்படி தீர்ப்பதற்கு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் செல்லலாம் எனவே அது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்ற முடிவை இந்திய தரப்பு கொண்டுள்ளதாகவும் நாரயண்சாமி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

Thursday, November 23, 2006

உயிர்கள் மலிந்துள்ள யாழில் பொருட்களின் விலைஅதிகரிப்பு!

யாழ் குடாநாட்டில் முகமாலை ஏ9 பாதை மூடப்பட்ட பின்னர், தமிழ் மக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.
கொழும்பிற்கும் யாழ்நகரிற்கும் இடையிலான விலை வித்தியாசத்திதைக் கீழே பாருங்கள்.

கொழும்புவிலை யாழ் விலை
அரிசி 1 கிலோ 40.00 250.00

மா 1 கிலோ 38.00 200.00

சீனி 1 கிலோ 60.00 450.00

பால் மா (குழந்தைகள்) 163.00 500.00

தேங்காய் 1 18.00 100.00

தேங்காய் எண்ணெய்.1 லீ 100.00 500.00

செத்தல் மிளகாய். 1கிலோ 220.00 500.00

புளி 60.00 200.00

உள்ளி 1 கிலோ 110.00 2000.00(இரண்டாயிரம்)

மல்லி 1 கிலோ 110.00 600.00

தேயிலை 1 கிலோ 400.00 900.00

முட்டை 1 7.50சதம் 40.00

சவற்காரம் 20.00 75.00

பனடோல் 1.50சதம் இல்லை(அனாசின் போன்ற பீவர் மாத்திரை)

பெற்றோல் 1 லீற்றர் 92.00 650.00

டீசல் 1 லீற்றர் 60.00 150.00

ம.எண.ணெய் 48.00 190.00

தீப்பெட்டி 2.50 சதம் 40.00

பிஸ்கட் இல்லை

நுளம்புத்திரி 35.00 இல்லை(கொசுவத்திசுருள்)

குத்தரிசி 40.00 250.00

மீன்ரின் 110.00 250.00

குட்டையைக் குழப்பியவர்கள் மீண்டும்....? இங்கிலாந்து!!!

பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல்
வேறுபாட்டையும், குறிப்பாக சிங்களத்தின் உளவியலையும் புரிந்துகொள்ளாது தீர்வினைத் தந்ததாக எண்ணிக்கொண்டு, மிகச்சிறந்த சனநாயக அரசமுறையை, அதற்குரிய அரசியல் அமைப்பைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் பிரித்தானியப் பிரதிநிதி சோல்பெரி அவர்கள் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்துச் சென்றார்.

மேற்கூறியவாறு வரலாற்றையும், வாழ்வியல் வேறுபாட்டையும், சிங்களத்தின் உளவியலையும் கவனிக்கத்தவறிய அத்தீர்வுத்திட்டத்தால் கடந்த 58 வருட காலத்தில் 24 வருடங்கள் “அவசரகால நிலமையின் கீழ் ஆட்சி நடைபெற்றதும், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதும், 8 இலட்சம் தமிழர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியதும் 1956 – 1983 ற்கு இடைப்பட்ட காலத்தில் பெரும் அளவிலான தமிழின அழிப்புக்கள் 5 தடவைகள் நிகழ்ந்ததும் போன்ற இன்னோரென்ன பல … ஒரு புறமும்,
தமிழ் இனத்தை மேலும் சிறுபான்மையாக்கி அதன் குரலை அடக்கியொடுக்கத் தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றத்தினை முன்னெடுத்துத் தமிழர் தாயகத்தை ஐந்து துண்டுகளாக்க இன்னோர் புறத்தில் நடவடிக்கையும்,

பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சோல்பெரி அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு இருந்த பாதுகாப்பை உதாசீனம் செய்து (சரத்து 29) சட்டங்களை இயற்றியதுடன் 1972ல் அந்த அரசியல் யாப்பையே அகற்றியதன் மூலம் சட்டத்தின் போர்வையையும், சனநாயத்தின் போர்வையையும் போர்த்துக்கொண்டு மேலும் இன அடக்குமுறையையும் அழிப்பு முறையையும் இன்றுவரை செய்து வருவது மேலும் ஒரு புறமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய பல இனஅழிப்பு நிகழ்வுகளை இலங்கைத்தீவில் சனநாயக அரசு என்ற போர்வையில் சர்வதேசத்தின் ஆதரவுடன் இன்றுவரை சிங்களம் றிறைவேற்றவும் இலங்கைத்தீவில் சுதந்திரமான நாட்டையும், அரசையும் கொண்டிருந்த தமிழினம் நிரந்தரமாக ஆழப்படும் இனமாகவும் சிங்களம் ஆழும் இனமாகவும் மாறக்கூடியதாகவும் பிரித்தானியா தந்த அரசியல் அமைப்பு முறை இருந்துள்ளது என்பதுடன் அதுவே இன்றைய சிக்கலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதனையும் இன்றைய பிரித்தானிய பிரதிநிதிகள் அறிந்து கொள்ளவேண்டும்.

பிரித்தானிய பிரதிநிதிகள் அறிந்துகொள்ள வேண்டிய இன்னோர் பக்கமும் உண்டு. 1948ல் பத்து இலட்சம் இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமையைப் பறித்தது, 1956ல் தனிச்சிங்களச்சட்டம், 1972ல் குடியரசு (புதிய அரசியல் யாப்பு) போன்ற அரசியல் யாப்பி;ற்குப் புறம்பான சட்டங்களை இயற்றும் வல்லமை கொண்டது சிங்கள அரசு என்பதனையும் கொண்டு மனதிற் கொள்ளல் வேண்டும்.

சிங்களத்தின் மேற்கூறிய சகல நடவடிக்கைகளின் போதெல்லாம் தமிழர் பிரதிநிதிகள் சனநாயக வழியில் நடத்திய போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் எதுவித பயனும் அழிக்காத நிலையில் 1970 ஆனியில் சிங்களவர் கொழும்பு நவரங்காலில் கூடியது போன்று. 1977 வைகாசி மாதம் தமிழர் வட்டுக்கோட்டையில் கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக “தமிழீழத் தனிஅரசை” அமைக்க 1977ல் பொதுத்தேர்தலில் தமிழ்மக்களிடம் வாக்குக்கேட்டு 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆதரவைப் பெற்று “தமிழீழ அரசை” அமைப்பதற்காக மக்களின் ஆணையைப் பெற்றுள்ளனர்.

இப்பிரகடனத்தில் தமிழீழக்குடியரசு, தமிழீழ நிலப்பரப்பு, தமிழீழக்குடிகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
மக்களின் இச்சனநாயகத் தீர்வின் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இன்று தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் தாம் ஏற்றுள்ளதை பலமுறை உலகிற்கு ஈழத்தமிழ் மக்கள் காட்டியுள்ளனர், இருப்பினும் குறிப்பாக 2004 சித்திரை மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதனைத்தமிழர் கூட்டணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வைத்து தமிழ்மக்களின் ஆணைக்கு விட்டனர் அதிலும் 90 வீதத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர்.
எனவே சனநாயகத்தை மதிக்கும் மேற்குலகம் 1977ல் தமிழீழத்திற்காகத் தமிழர்கள் சனநாயக வழியில் தெரிவித்த தமது உடன்பாட்டையும், 2004ல் அதன் அரசாக விடுதலைப்புலிகளையும், தலைவராக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனை ஏற்றுக் கொண்டுள்ளதையும் விளங்கிக் கொள்ளல் அவசியமாகிறது.

எனவே இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தை நோக்கும் எவரும் இலங்கையில் இரண்டு நாடு, இரண்டு அரசு இருந்தன என்பதையும்,
1977லும், 2004லும் தமிழ் மக்கள் சனநாயகவழியில் தெரிவித்த தமது ஆணையைப் புறந்தள்ளிவிட்டு ஆராய்வதோ, முன்னெடுப்பதோ ஒருபோதும் நிரந்தரத்தீர்வைத் தராது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஈழத்தமிழர் இறைமைக்கான போராட்டம் இன்று சர்வதேச மயமாகிவிட்ட நிலையில் எமது மக்களின் சனநாயக வழித் தீர்மானத்தை (1977லும், 2004லும் மக்கள் அளித்த தீர்ப்பை) உலகிற்குப் பிரகடனப்படுத்தும் பொறுப்பு விடுதலைப்புலிகளிடம் உண்டு.

இலங்கைத்தீவில் கடந்த 50 வருடத்தில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கொலை செய்யப்பட்டமை, பல ஆயிரக்கணக்னான வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டமை, பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்செயலிற்கு ஆளாக்கப்பட்டமை போன்ற பலவகைப்பட்ட இன அழிப்புகளுக்கு எதிராக எவரையும் தண்டிக்காத ஒரு அரசு எவ்வாறு தமிழ்மக்களையும் தமது குடிமக்களாகப் பார்க்கும்? அவ்வாறான பார்வை இருந்திருப்பின் மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறித்தது முதற்கொண்டு தமிழ் இனத்தினத்திற்கு எதிரான பல சட்டங்களை எவ்வாறு இயற்றும்? 1970 – 1972ல் குடியரசுக்கான யாப்பை எழுதும்போது தமிழர் பிரதிநிதிகள் கொடுத்த ஒரு திருத்தத்தைத் தானும் ஏற்கவில்லையே!

சிங்களத்தின் வெறும் வார்த்தைகள் தமிழர் வாழ்வியலைத் தராது என்பதை உணர்ந்தே தமிழர் ஆயதப்போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனை வன்முறை என்று பார்க்கும் உலகநாடுகள் சிங்கள அரசு தமிழினத்தின் மீது இன்றுவரை மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளையும் எவ்வாறு பார்க்கிறது?
நன்றி>மட்டக்களப்பு ஈழ நாதம்.

அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

அரசாங்கம் குற்றச்சாட்டு!!!

ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறுதாம் கோரியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூட்டத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் அரசாங்கப் படையினரின் ஒத்துழைப்புடன் சிறுவர்கள் பலவந்தமாக குறிப்பிட்ட ஒருஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டு படையணிகளுக்குச் சேர்க்கப்படுவது குறித்து காரசாரமான அறிக்கையொன்றினை அலன் றொக் தனது இலங்கை விஜயத்தின் போது வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் அரசாங்க படைகள் சிறுவர்களைக் கடத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஆயுதக்குழுவிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கடத்தல்களில் நேரடியாக ஈடுபடுவதாகவும்கூட இவர் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது இந்தக்குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு தன்னிடம் வலுவான ஆதாரம் உள்ளதாகவும் அவர் ஆணித்தரமாக தெரிவித்திருந்தார். படையினர் மீது அவர் சுமத்திய இந்தக் குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம். இந்தக்குற்றச் சாட்டுகள் தொடர்பாக அவரால் நிரூபிக்க முடியுமானால் அந்த ஆதாரங்களை எம்மிடம் சமர்ப்பிக்கும்படி நாம் கோரியிருந்தோம். ஆயினும் இதுவரைக்கும் அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் எதையும் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை. பொய்க்குற்றச்சாட்டுகளையே அவர் சுமத்தியுள்ளார் என்பதை இதிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியும்.

தன்னிடம் நம்பத்தகுந்த வலுவான ஆதாரங்கள் உள்ளது எனக்கூறினார் அவர். நாம் இப்பொழுது கேட்கிறோம் எங்கே அந்த நம்பத்தகுந்த வலுவான ஆதாரங்கள். அப்படி ஏதாவது அவரிடம் இருந்தால் எம்மிடம் அவற்றை கையளித்திருக்கலாம். படையினரைக் களங்கப்படுதும் நோக்கத்திலேயே அவர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அலன் றொக் கனடாவில் சுகாதார அமைச்சராக முன்னர் பதவி வகித்த போது விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என்னும் போர்வையில் அங்குள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டுள்ளார்.இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கனடிய புலனாய்வுப் பொலிஸார் இவரை எச்சரித்தும்கூட இவர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவரது பின்புலம் இவ்வாறு இருக்கும் போது இவர் மீதான நம்பகத்தன்மை எவ்வாறு இருக்க முடியும்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பதில் பேச்சாளராக செயற்படும் ஹெலன் ஒலஃப்டொடீர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக செயற்படுவதோடு நாடகங்களுக்கு திரைக்கதை எழுதுவதைப் போன்று புலிகளுக்குச் சார்பான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்.

யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை மட்டும் கண்காணிக்க நியமிக்கப் பட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பதில் பேச்சாளராக தற்சமயம் செயற்படும் ஹெலன் ஒலஃப்டொடீர் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் புலிகளுக்கு பக்கச் சார்பான அறிக்கையிடல்களை மேற்கொள்வதோடு கண்காணிப்புக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறிச் செயற்படுகின்றார். யுத்த நிறுத்த ஒப்பந்த்தை ஏதாவது ஒரு தரப்பு மீறும்போது அந்த மீறல்கள் குறித்து அறிக்கையிட மட்டுமே கண்காணிப்புக்குழுவிற்கு அதிகாரங்கள் உள்ளது. ஆனால் இன்று ஹெலன் அவரின் அதிகாரல்களை மீறிச் செயற்படுகின்றார்.

தொலைக்காட்சி நாடகங்களுக்கு திரைக்கதை அமைப்பவர்கள் போன்று எழுந்தமானமாக தனது அறிக்கைகளையும் பேச்சுக்களையும் புலிகளுக்கு சார்பாகவே தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். கண்காணிப்புக் குழவினருடன் எமக்கு முன்னரும் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தன. முன்னர் கண்காணிப்புக்குழுவின் தலைவராக உல்ப் ஹென்றிக்ஸன் பணியாற்றிய போதும் அவரும் இவ்வாறே பல அறிக்கைகளை முன்வைத்தார். ஆயினும் இவ்வாறான பிரச்சினை எழுந்த போது அவரை நாம் அழைத்துப் பேசி இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டோம்.
நன்றி>வீரகேசரி.

Wednesday, November 22, 2006

இந்தியா இரட்டை வேடமிடுகிறது- : மூத்த ஊடகவியலாளர் சோலை.

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் இரட்டை வேடமிடுகிறது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டு துணை போகக்கூடாது என்று தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சோலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மூத்த ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான சோலை (வயது 75) குமுதம் குழுமத்தின் றிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் எழுதியுள்ள கட்டுரை:

"இலங்கை இனச் சிக்கலில் தனது நிலையை மைய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று முதல்வர் கலைஞர் தெரிவித்தார். பிரதமரைச் சந்திக்க மைய அமைச்சர் டி.ஆர். பாலுவையும் அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலைஞருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 5,200 மெட்ரிக் தொன் அரிசியும், 1,500 மெட்ரிக் தொன் சர்க்கரையும் (சீனி) 300 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை தமிழகம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது. ஈழத் தமிழர்களைத் தங்கள் உடன்பிறப்புக்களாகக் கருதும் தமிழ் மக்கள் மகிழ்ந்து போனார்கள். ஆனால், அதன் பின்னணியை அவர்கள் திரும்பிப் பார்க்க மறந்து விட்டார்கள்.

கொழும்பு - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை கடந்த ஐந்து மாதங்களாக, சிங்கள அரசு மூடிவிட்டது. அதனால், ஈழத்தில் குந்தியிருக்கின்ற ஒரு லட்சம் சிங்களத்துருப்புகளுக்கு, உணவுப் பொருள் செல்ல வழியில்லை. இந்தியாவிலிருந்து தமிழகக் கடற்கரையிலிருந்து உணவு செல்வதுதான் எளிது.

எனவே, இந்த உணவுப் பொருள்களை அனுப்பி உதவும்படி, சிங்கள அரசு இம்மாதத் தொடக்கத்தில் இந்தியாவைக் கேட்டுக் கொண்டது.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தியாளர், நக்மா மல்லிக் இம்மாதம் 6 ஆம் தேதியன்று கொழும்பில் கூறியதை அப்படியே தருகிறோம்.

"இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய இந்தியா சம்மதித்துள்ளது. இந்திய அரசு நேரடியாக ஈடுபடாமல், தனியார் வர்த்தகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தியாவிலிருந்து பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி செய்யத் தடை இருக்கிறது. இந்தத் தடை, இலங்கைக்கு உதவும் பொருட்டு விலக்கிக் கொள்ளப்படும். எனினும் சரக்குக் கப்பல்களின் பற்றாக்குறையால், இந்த ஏற்றுமதி தாமதமாகிறது!" இப்படி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

இதில் முன்னேற்றம் என்ன தெரியுமா? இந்தியாவிலிருந்து இலங்கையின் தனியார் வர்த்தகர்கள் வாங்குவதாக இருந்தது. தனியார் விற்பனை செய்வதை, மைய அரசு அனுமதிப்பதாக இருந்தது. கலைஞர் விடுத்த அறிக்கை, மைய அரசிற்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகி விட்டது. இனி சிங்கள அரசின் கோரிக்கையை ஏற்று, உணவுப் பொருள்களை இந்திய அரசே ஏற்றுமதி செய்யும் அல்லது அதற்கு வழி வகுக்கும்.

பசியாலும் பட்டினியாலும் செத்து மடியும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதாக இருந்தால், பிரதமர் மன்மோகன் சிங் என்ன செய்திருக்க வேண்டும்? "மூடிக் கிடக்கும் யாழ்ப்பாண சாலையைத் திறந்து விடு" என்று சிங்கள அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போது சிங்கள அரசின் கோரிக்கையை ஏற்று, உணவுப் பொருள்களை அனுப்புவதன் மூலம், யாழ்ப்பாணச் சாலை மூடப்பட்டதை நியாயப்படுத்துகிறார்களா?

யாழ்ப்பாணம் சாலை மூடப்பட்டதை எத்தனையோ நாடுகள் கண்டித்துவிட்டன. எத்தனையோ மனிதாபிமான அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால், இன்றுவரை இந்திய அரசு வாயே திறக்கவில்லை.

அண்மையில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கொழும்பு சென்றார். அளவளாவினார். "யாழ்ப்பாணச் சாலையைத் திறந்து விடுங்கள்" என்று வற்புறுத்துவதற்காகத்தான் அவர் கொழும்பிற்குப் பயணித்தார் என்று, நமது பேதை மனம் கற்பனை செய்தது.

கொழும்பிலிருந்து டெல்லி திரும்பினார். மத்திய அமைச்சரவை கூடியது. கூட்டத்தின் முடிவை சிதம்பரமே அறிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு கேட்கும் மைசூர் பருப்பும் பாசிப் பயறும் தொன் கணக்கில் (தடைநீக்கி) அனுப்பப்படும் என்று அறிவித்தார்.
தமிழ் நெஞ்சங்கள் அதிர்ந்து போயின. மனிதாபிமானத்தைத் தூக்கிலிட்டு, யாழ்ப்பாணச் சாலையை மூடிவிட்ட சிங்கள இனவாத அரசிற்கு, மனிதாபிமான அடிப்படையில் பருப்பு அனுப்புவது என்ற முடிவு விமர்சனத்திற்குள்ளானது. எனவே, நிதி அமைச்சகம் அடுத்த நாள் ஒரு வித்தார விளக்கம் தந்தது. மைய அரசு அனுப்பாது. தனியார் அனுப்புவார்கள் என்றது. யார் அனுப்பினால் என்ன? சிங்கள அரசின் கோரிக்கையை மைய அரசு ஏற்றுக் கொண்டது.
யாழ்ப்பாணத்திற்கென்று இந்திய அரசு அனுப்பும் உணவுப் பொருள்கள் எங்கே போய் இறங்கும்? ஈழத்தில் சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் போய் இறங்கும். மைய அரசு தெரிவித்திருக்கிறது.

இப்போது இருக்கின்ற நடைமுறை என்ன? யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கப்படும் உணவுப் பொருள்களில், 80 சதவிகிதத்தை சிங்கள ராணுவம் எடுத்துக் கொள்கிறது. ஆமாம். ஒரு லட்சம் துருப்புக்களுக்கு 80 சதவிகித உணவுப் பொருள்கள். ஐந்தரை லட்சம் மக்கள்தொகை கொண்ட யாழ்ப்பாணத்திற்கு 20 சதவிகித உணவுப் பொருள்கள்.

வேடிக்கையான_வேதனையான பங்கீடு. இதுதான் சிங்கள அரசின் நியாயம். எனவே, அங்கே ஒரு கிலோ அரிசி, 235 ரூபாய். ஒரு தீப்பெட்டி, 250 ரூபாய்.

இந்த உண்மை விரைவில் வெட்ட வெளிச்சமாகும். இது தெரியாமல், ஏதோ யாழ்ப்பாண மக்களுக்குத்தான் இந்திய அரசு உணவுப் பொருள்களை அனுப்புகிறது என்று நம்பி, அதனைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.
இலங்கையில் ஈழப் பரப்பில்தான், ஆழிப்பேரலைகளின் அழிவுகள் அதிகம். எனவே, சர்வதேச சமுதாயம் சுனாமி நிவாரண உதவி அளிக்க முன்வந்தது. ஆனால் சர்வதேச சமுதாயம் அனுப்பிய உதவியில், ஒரே ஒரு பொட்டலம் கூட, ஈழம் வந்து சேரவில்லை.

ஜனதா விமுக்திப் பெரமுன (ஜே.வி.பி) என்ற சிங்கள இனவாதக் கட்சி அதனைத் தடுத்துவிட்டது. ஈழத்திற்கு அனுப்பினால் ஆட்சி கவிழும் என்று அச்சுறுத்தியது. கலவரங்களைத் தூண்டக் காத்திருந்தது.

அந்தக் கட்சி, ராஜபக்சேக்களின் தோழமைக் கட்சி. அந்தக் கட்சியும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியும் அவரைத் தங்கள் கைதியாக வைத்திருக்கின்றன. அவருடைய சிம்மாசனம் நிலைக்க அந்த இனவாதக் கட்சிகளின் ஆதரவு அவருக்குத் தேவை. இந்தியாவை ஏகாதிபத்திய நாடாகச் சித்திரிப்பது அந்தக் கட்சிகளின் அரசியல். உலகம் அளித்த உதவியையே ஈழத்திற்கு வழங்க மறுத்தவர்கள், எப்படி இந்தியப் பொருள்களை மட்டும் அப்படியே யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவார்கள்?

இலங்கை இனச் சிக்கலில் இந்திய அரசு தமது நிலைமையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதல்வர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உணர்வுதான் ஆறு கோடித் தமிழ் மக்களின் உணர்வு. அதுவே உலகத் தமிழர்களின் வேண்டுகோள்.
வாஜ்பாய் பிரதமராக இருக்கும்வரை, சிங்கள அரசிற்கு ஆயுதங்கள் அளிக்க மறுத்தார். இராணுவ உடன்பாடு காண மறுத்தார். தமிழகத்தின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்தார். அந்த வகையில், அவர் உயர்ந்த மனிதர். மனிதாபிமானி, அரசியல் ஞானி என்பதனை மெய்ப்பித்தார்.

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது. ஏற்கெனவே நடைபோட்ட பாதையிலிருந்து எல்லா வழிகளிலும் இந்தியா நழுவத் தொடங்கியது. ஈழப் பிரச்னையிலும் இடறி விழுந்தது. சிங்கள இனவாத அரசிற்கு டெல்லியில் மரியாதை கூடியது. அதன் பிரதிநிதிகள் ஏதோ மாமியார் வீட்டிற்கு வந்து செல்வது போல் வந்து செல்கிறார்கள்.

ஈழத்தை மயான பூமியாக்க, எந்த ஆயுதத்தையும் இந்தியா சிங்கள அரசிற்கு அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பிரதமரைக் கேட்டுக் கொண்டனர். சரி என்று அவரும் சொன்னார். பிரணாப் முகர்ஜியும் சொன்னார். நமக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி.

இப்போது இந்தியக் கடற்படைத்தளபதி அருண்பிரகாஷ், அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

''இலங்கையின் இறையான்மை, பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன. எனவே, சிங்களக் கடற்படைக்கு ராடார்கள், தளவாடங்கள், துப்பாக்கிகள் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்'' என்கிறார். அந்த முடிவு செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் அவர்களே, இதுதான் மன்மோகன் சிங் அரசின் ஈழத்துக் கொள்கை. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஈழத்து மக்களுக்கு விடிவு ஏற்படவில்லையென்றால், அங்கே தமிழ் இனமே அழியும். தயவு செய்து நீங்கள் அதற்குத் துணைபோய் விடாதீர்கள் என்று தனது கட்டுரையில் சோலை தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.