Monday, February 19, 2007

தமிழ் ஒளி குகநாதனின் மோசடியும் இந்தியாவிற்குள் கோவை நந்தன் மூலம் ஊடுருவ முற்படும் ஈ.பி.டி.பியும்.

ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ் ஒளி(DAN தொலக்காட்சி) என்கிற தொ(ல்)லைக்காட்சி ,இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இந்தத் தொலைக்காட்சிக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இந்த நிலையில், தங்களிடம் பல லட்சக் கணக்கான ரூபாகளை வசூலித்துக் கொண்டு, தங்களுக்கு குகநாதன் நாமம் போட்டு விட்டார் என்று இந்தியாவின் பல தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள்.

படங்களும் பாடல் காட்சிகளும் உரிய அனுமதி பெறாமல் திருட்டு தனமாக குகநாதனால் ஒளிபரப்பப்பபடுவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை சட்டரீதியாக குகநாதன் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளில் இறங்கின. தாங்கள் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை குகநாதன் கும்பல் தொடர்ந்து சட்ட விரோதமாகத் திரையிட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜ் டி.வி. நிர்வாகம் சென்னை மாநகர போலீஸில் புகார் செய்தது. கொப்பிரைட் விதிமுறைகளை மீறி படங்களைத் திரையிட்டதாக தமிழக காவல்துறையினர் குகநாதன் கும்பல் மீது 2006_ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, குகநாதன் கும்பலின் பங்குதாரர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த குலாம் என்பவர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். தங்கள் மீது இப்படியரு நடவடிக்கை அதிரடியாகப் பாயும் என்று எதிர்பாராத குகநாதன் கும்பல் கதிகலங்கிப் போனது.

இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, 25.11.2006ல் வசூல்ராஜா குகநாதனின் பெயரால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படடிருந்தது .அதில் வணிகப் போட்டியினை எதிர்கொள்ளும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மீதான வழக்கு முடிந்து மறுபடியும் ஒளிபரப்பு தொடங்கும் வரை நீங்கள் எங்கள் விநியோகஸ்தர்களாகத் தொடர்ந்து இருந்து ஒத்துழைப்பைத் தரப் போகிறீர்களா? இல்லை, உங்களின் விநியோக உரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட விரும்புகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் உள்ள பல கோடி தமிழ்மக்களிடையே தனது வங்குரோத்து அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளாரும் சிறீலங்காவின் ஆஸ்தான அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா குகநாதன் ஊடாக முதலிட இருப்பதாகவும் இதற்கு முன்னேற்பாடாக பலகோடி ரூபாவை முற்பணமாக வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இந்தியாவிற்கு செல்வதற்கு தடைவிதிகபட்டுள்ள குகநாதன் தற்போது இந்தியாவில் தங்கி இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு தனது பினாமியான கோவை நந்தனை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது.

தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் கோவை நந்தன் யாழ் குடாநாட்டுக்கான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து ஈ.பி.டி.பியினரின் கப்பலில் எற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. ஈ.பி.டி.பியினரின் வர்த்தகத்தையும் குகநாதன் ஊடாக தொலைக்காச்சியையும் மீள ஆரம்பது தொடர்பான வேலைகளையும் கோவை நந்தன் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சுமூகசேவைகள் அமைச்சின் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லண்டனில் பிரித்தானிய அரசாங்கத்தால் அடித்து மூடப்பட்ட ரிபிசி வானொலியை இணைந்து நடாத்துவதற்கும் குகநாதன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. கோவை நந்தன் ஆரம்பகாலத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து செயற்பட்டு பின்னர் பிரான்ஸ்நாட்டுக்கு வந்து வானொலி ஒண்றில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>சூரியன்.காம்.

4 comments:

Anonymous said...

எமது சமுதாயத்தின் முட்களை இனம்கண்டு கொள்வோம்.

Anonymous said...

DAN TVயின் மோசடி??!!

குமுதம்-ரிப்போர்டர் ஏட்டில் வெளிவந்த கட்டுரை)


ஓராண்டிற்கு முன்னால் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒளிபரப்பான ‘டான் தமிழ் ஒளி’ என்கிற சாட்டிலைட் சேனல், தமிழ்த்தொலைக்காட்சி உலகை ஒரு கலக்குக் கலக்கியது. இந்த சேனலுக்குக் கிடைத்த வரவேற்பால், டான் மியூசிக், டான் சினிமா என்ற புதிய சேனல்கள் அதிரடியாக முளைத்தன.

இப்படி ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல்கள், இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது.

இந்த நிலையில், ‘எங்களிடம் பல லட்ச ரூபாய்களை வசூலித்துக் கொண்டு, எங்களுக்கு நாமம் போட்டு விட்டது டான் டி.வி. நிர்வாகம்,’ என்று புலம்பிக் கொண்டு திரிகிறார்கள் தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள்.

‘டிஷ்’ ஏசியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடட்’ என்ற விரிவாக்கம் கொண்ட டான் டி.வி., பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம். இது தமிழர்களுக்காக ‘டான் தமிழ் ஒளி’ என்ற சாட்டிலைட் சேனலை, 1997 முதல் தொடங்கி நடத்தி வருகிறது. அயல்நாட்டுத் தமிழர்கள் மத்தியில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருந்த டான் டி.வி.யின் கவனம், தமிழ்நாட்டின் மீது திரும்பியது. இந்தியாவிற்குள்ளிருந்து ஒளிபரப்பும் அனுமதியை இதனால் உடனடியாகப் பெற முடியாத காரணத்தால், பிரான்ஸிலிருந்தே இதன் ஒளிபரப்பு தொடங்கியது.

ராஜ் டி.வி.யில் மிக முக்கியப் பொறுப்பை வகித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கபிலன் என்பவர், இந்தியாவில் டான் டி.வி. குழுமத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாண்டிச்சேரியில் நிர்வாக அலுவலகத்தையும், சென்னை அசோக் நகரில் செயல் அலுவலகத்தையும் கொண்டு, கடந்த 2005 நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் டான் டி.வி.யின் தமிழ் ஒளி தன்னுடைய சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது.

இலங்கைத் தமிழில் கதைத்து, தமிழ் சினிமாக்களின் பாடல்களையும், காட்சிகளையும் டான் டி.வி.’ ஒளிபரப்பிய விதம், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. செய்திகள் ஒளிபரப்பாகின. மேலும் தூர்தர்ஷன், ராஜ் டி.வி., ஜெயா டி.வி. போன்றவற்றில் ஒளிபரப்பாகி ஹிட்டான தொடர்களை மறு ஒளிபரப்பச் செய்ய, டான் டி.வி. ஏற்பாடு செய்தது. ‘பழைய தமிழ்ப்படங்கள் அனைத்தையும் விரைவில் நீங்கள் காணலாம்’ என்று அறிவிப்பையும் அது வெளியிட்டது.

இதனையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முன்னணி கேபிள் ஆபரேட்டர்களும் டான் டி.வி.யின் தமிழ் சேனல்களை முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பினர்.

தமிழகத்தில் தமிழ் ஒளி சேனலுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, டான் மியூசிக், டான் சினிமா என்ற இரு புதிய சேனல்களையும் டான் டி.வி. நிர்வாகம் தொடங்கியது.

இந்த நிலையில்தான், தன் மூன்று சேனல்களையும் கட்டண சேனல்களாக மாற்றியது டான். கேபிள் ஆபரேட்டர்கள் டான் டி.வி.யின் ஒளிபரப்பைக் காட்டுவதாக இருந்தால், அதற்கான சிக்னல் டி கோடர் கருவிகளை வாங்குவதோடு, ஒளிபரப்புக்கான சந்தாவையும் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விநியோகஸ்தர்களை டான் டி.வி. நிறுவனம் நியமனம் செய்தது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ‘நான்’, ‘நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு டான் டி.வி. ஒளிபரப்பு விநியோக உரிமையைப் பலரும் பெற்றனர். டெபாசிட் தொகையாக அவர்களிடமிருந்து ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து, ஐந்து லட்சம் வரையில் வசூலிக்கப்பட்டது.

தமிழக மக்கள் மத்தியில் டான் டி.வி. பிரபலமடைந்து தங்களுக்கு வணிக ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய பிறகுதான், பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் விழித்துக் கொண்டன. தமிழ்த் திரைப்படங்களை சின்னத்திரையில் வெளியிடும் உரிமையை சன் டி.வி.யும், ராஜ் டி.வி.யும் மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட படங்களின் காட்சிகளும் படங்களும் தமிழ் ஒளியில் ஒளிபரப்பாவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை அதிர்ந்தன. சட்டரீதியாக டான் டி.வி. மீது நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளில் இறங்கின.

தாங்கள் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை டான் டி.வி. தொடர்ந்து சட்ட விரோதமாகத் திரையிட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜ் டி.வி. நிர்வாகம் சென்னை மாநகர போலீஸில் புகார் செய்தது. காப்பிரைட் விதிமுறைகளை மீறி படங்களைத் திரையிட்டதாக போலீஸார் டான் டி.வி. மீது 2006_ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, டான் டி.வி.யின் பார்ட்னர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த குலாம் என்பவர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். தங்கள் மீது இப்படியரு நடவடிக்கை அதிரடியாகப் பாயும் என்று எதிர்பாராத டான் டி.வி. நிர்வாகம் கதிகலங்கிப் போனது.

டான் டி.வி.யை ஒளிபரப்பிய கேபிள் ஆபரேட்டர்களுக்கோ வேறு மாதிரியான நெருக்கடிகள் உண்டாகின. ‘டான் டி.வி.யை ஒளிபரப்பினால் இனி எங்களுடைய சேனல்களை ஒளிபரப்ப அனுமதி தரமாட்டோம்’ என்று பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் நெருக்கடி கொடுத்தன.

இதனால் வேறு வழியின்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் டான் டி.வி.யை ஒளிபரப்புவதை நிறுத்தினர். இந்தியாவில் அமர்க்களமாகத் தொடங்கிய டான் டி.வி.யின் ஒளிபரப்பு, 2006_ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் முடிவிற்கு வந்தது. தமிழகம், பாண்டியில் இயங்கிய டான் டி.வி.யின் அலுவலகங்களும் பூட்டப்பட்டு விட்டன. டான் டி.வி.யின் துணைத்தலைவரான கபிலன் உள்ளிட்ட அதன் நிர்வாகி கள் தலைமறைவாகி விட்டனர்.

இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, 25.11.2006_ல் டான் டி.வி.யின் தலைவரான குகநாதனின் பெயரால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘வணிகப் போட்டியினை எதிர்கொள்ளும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மீதான வழக்கு முடிந்து மறுபடியும் ஒளிபரப்பு தொடங்கும் வரை நீங்கள் எங்கள் விநியோகஸ்தர்களாகத் தொடர்ந்து இருந்து ஒத்துழைப்பைத் தரப் போகிறீர்களா? இல்லை, உங்களின் விநியோக உரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட விரும்புகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், டான் டி.வி.யின் விநியோகஸ்தர்களாக நீடிக்க யாரும் விரும்பவில்லை. தங்களுடைய டெபாசிட் தொகையைத் திரும்பத் தரும்படி அவர்கள் பிரான்ஸிலிருக்கும் டான் டி.வி.யின் நிர்வாக அலுவலகத்திற்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை. பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் சிலரைச் சந்தித்தோம்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுனில்குமார் என்ற விநியோகஸ்தர், ‘‘டான் டி.வி.யோட துணைத் தலைவர் கபிலனைத்தான் எங்களுக்குத் தெரியும். அவரிடம்தான் டெபாசிட் தொகையான ஐந்து லட்ச ரூபாயைக் கொடுத்தேன். டான் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட பிறகு, ஆறுமாதம் கழித்து டெபாசிட்டை திரும்பத் தருவதாகக் கடிதம் வந்தது. ஆனால், பணம் வரவில்லை. எங்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம். இது குறித்து தமிழக முதல்வரிடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார் கொடுக்க உள்ளோம். இந்தியா முழுவதும் நடந்த மிகப்பெரிய மோசடி இது!’’ என்று குமுறினார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு, கோவையைச் சேர்ந்த ஜெய்லா ஆகியோரிடம் பேசினோம். அவர்களும் கபிலனையே குறை சொன்னார்கள். ‘‘எங்களிடம் தகவல் சொல்லாமல், நிறுவனத்தை மூடிவிட்டு ஓடியது மிகப்பெரிய ஏமாற்று வேலை. தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட பேர் இவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டிலிருக்கும் டான் டி.வி. நிறுவனத்திடமிருந்து எங்களின் பணத்தைப் பெற்றுத்தர தமிழக முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

‘‘வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் டான் டி.வி.யின் பெயரால் டிராப்ட்டாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. பணமாக அதை நாங்கள் வசூலிக்காததால் தப்பித்தோம். இல்லையென்றால், நாங்களும் இந்த மோசடிப் புகாரில் சிக்கியிருப்போம்!’’ என்றார் டான் டி.வி.யின் முன்னாள் ஊழியர் ஒருவர்.


http://webeelam.com/DANTV.htm

Anonymous said...

இது போன்ற புல்லுரிகளை இனம் காணவைத்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

இது போன்ற புல்லுரிகளை இனம் காணவைத்தமைக்கு நன்றிகள்.