


சிறிலங்கா அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பின் வாகரைக்கு சென்றிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வரவேற்று ஆசி வழங்கிய இந்து மதகுரு ஒருவர் சிறீலங்கா இராணுவ புலனாய்வு உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் 60 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லையா பரமேஸ்வரக் குருக்களை வெளியே அழைத்த அடையாளம் தெரியாத நபர்கள் அவருடன் 10 நிமிடங்கள் வரை உரையாடிய பின்னர் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்டவரின் உடலில் ரி-56 ரக துப்பாக்கிச் சன்னங்கள் ஏழு காணப்பட்டதாகவும் ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சாவின் வாகரை விஜயத்தின் போது இவர் பலாத்காரமாக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>லங்கசிறீ.
No comments:
Post a Comment