Thursday, February 22, 2007

போராளிகளை தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை செய்த இந்திய கடற்படை.

வெடிமருந்துகள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்த விவகாரம், கடலோர காவல்படைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசிக்காமல், துறைமுகத்தில் புலிகளின் படகை எட்டு நாட்கள் நிறுத்தி வைத்தது குறித்து கடலோர காவல் படையினரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய, இலங்கை கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த "ஸ்ரீ ராமஜெயம்' என்ற படகை, இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர்.

அப்படகு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமானது. அப்படகில் ஏராளமான சமையல் பொருட்களுடன், ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் இருந்தன. இதுதவிர கையெறி குண்டுகள், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் "பெல்ட் பாம்,' எட்டு பேரல்கள் கொண்ட திரவ ரசாயனங்கள் இருந்தன.பிடித்த படகையும், அப்படகில் இருந்த ஐந்து பேரையும் கடலோர காவல்படையினர் சென்னைக்கு கொண்டு வந்தனர். படகை எந்தப் பகுதியில் பிடித்தாலும், அப்பகுதியில் உள்ள போலீசாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைப்பது தான் வழக்கம்.இந்த முறை, கடலோர காவல்படையினர் சற்று மாறுபட்ட நடவடிக்கையில் இறங்கினர். புலிகளின் படகையும், ஐந்து விடுதலைப் புலிகளையும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

புலிகளின் படகில் இருந்த பொருட்கள் கடலூரில் இறக்கப்பட இருந்ததாக பத்திரிகையாளர்களிடம் கடலோர காவல்படையினர் தெரிவித்து விட்டனர்."கடலூருக்கு "பெல்ட் பாம்' எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது? அது பெரும் விசாரணைக்கு உரியது' என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்ததும், தமிழக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பிடிபட்ட புலிகளை விசாரித்த போது "நாங்கள் தமிழகத்துக்கு வரவில்லை. எங்களை இந்திய கடல் எல்லைக்கு அப்பால் தான் கடலோர காவல் படையினர் பிடித்தனர்' என்று கூறினர். ஆனால், தமிழக போலீசார் அவர்கள் கூறியதை நம்பவில்லை. "உங்கள் படகில் எதற்காக "பெல்ட் பாம்' எடுத்து வந்தீர்கள்?' என்று துருவித் துருவி விசாரித்தனர். "நாங்கள் எடுத்து வந்த "பெல்ட் பாம்' பற்றியே கேட்கிறீர்கள். அதை விட அதிர்ச்சியான தகவல் இருக்கிறது. நாங்கள் வந்த படகே, "சூசைட் போட்' தான். அந்த படகின் சுவர்களில் டி.என்.டி., வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை "டைம் டிவைசர்' வைத்து படகையே வெடிக்கச் செய்ய முடியும். இலங்கை கடற்படையின் கப்பல்களை தாக்கவே, அப்படகு வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று கூறியதும் தமிழக போலீசாருக்கு துõக்கி வாரிப் போட்டது.

அடுத்து சில நிமிடங்களில், மத்திய உள்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடற்படையின் வெடிகுண்டு நிபுணர்கள் படை களம் இறங்கியது. அப்படகில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.அப்படகை நடுக்கடலில் வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே புலிகளின் படகு வெடிக்க வைத்து துõள் துõளாக்கப்பட்டது. இந்த விவகாரம் கடலோர காவல்படைக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.புலிகளின் அபாயகரமான படகை, கடலோர காவல் படையினர் எதற்காக சென்னை துறைமுகத்தில் எட்டு நாட்களாக நிறுத்தி வைத்திருந்தனர் என்று விசாரணை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வெடிமருந்துகள் அடங்கிய படகை, முழுவதுமாக சோதிக்கவும் இல்லை. அப்படகை பற்றி எந்தவித தகவலும் தெரிந்து கொள்ளாமல், துறைமுகத்துக்கு எடுத்து வந்தது தவறு என்று கூறப்படுகிறது.அடுத்து அப்படகில் இருந்த வெடிமருந்துகளையும், "பெல்ட்பாம்' போன்றவற்றை துறைமுகத்தில் இருந்தபடியே கடலோர காவல்படையினர் துõக்கி காண்பித்தது இரண்டாவது தவறு. அந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், துறைமுகமே சர்வ நாசமாகி இருக்கும். இதை கடலோர காவல்படையின் ஐ.ஜி., எப்படி அனுமதித்தார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்படகில் துறைமுகத்தில் நிறுத்தியதும், வெடிமருந்து நிபுணர்கள் குழுவினரை அனுப்பி சோதனையிடாதது ஏன் என்றும் கடலோர காவல் படையினரை விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...:புலிகளின் படகை பிடித்த கடலோர காவல் படையினர் நடந்து கொண்ட விஷயமும் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது. அப்படகில் இருந்தவர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையான முறையில் கடலோர காவல்படையினர் நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது. பிடிபட்டவர்களை இந்திய கப்பலில் உள்ள சமையல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரோட்டா செய்வதற்கு வைக்கப்பட்டுள்ள தோசைக்கல்லில் படுக்க வைத்து விசாரித்துள்ளனர். இரவு நேரத்தில் சூடான தோசைக்கல்லில் படுக்க வைத்து விசாரணை நடத்தியது தொடர்பாகவும் கடலோர காவல்படையினரிடம் விசாரிக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>dinamalar.com

2 comments:

Anonymous said...

Can you turn off the music in your blog. Which annoys while reading your valuable articles?

ஈழபாரதி said...

வணக்கம் அனானி ஒலிப்பேழையை நிறுத்தும் வசதி அதிலேயே இருக்கிறது. தேவையெனில் நிங்களாகவே நிறுத்தலாம்.