மட்டக்களப்புச் சம்பவம் வெளிப்படுத்தும் உண்மைகள் - காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.
மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் உட்பட சில அதிகாரிகளை ஏற்றிவந்த ஹெலிக்கொப்டர் நேற்றுக் காலை தரை இறங்கிய சமயம் நேர்ந்த அனர்த்தம் பலத்த சர்ச்சையையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தை ஒட்டி, காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் தமிழீழ விடு தலைப் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.
இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியிருக் கின்றார்கள் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக்கொள்ளத் தவறவில்லை.
இவ்விவகாரத்தை ஒட்டி விடுதலைப்புலி களும், இலங்கை அரசுத் தரப்பும் மாறி மாறி ஒரு வர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பெரும் இராஜதந்திர சர்ச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
இந்தச் சம்பவத்தின் விளைவு இராஜதந்திர ரீதி யிலும், போரியல் நடவடிக்கைப் போக்கிலும் எத் தகைய பெறுபேறுகளை அல்லது பிரதிபலன் களையோ, பாதிப்புக்களையோ தரப்புகளுக்கு ஏற்படுத்தப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஆனால் இந்தச் சம்பவம் சில அடிப்படை உண் மைகளைத் தெளிவுபடுத்தத் தவறவில்லை என் பதையும் நாம் நோக்கவேண்டும்.
கிழக்கின் பெரும் பகுதியை விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டோம், அவர்களைத் தொப்பிகலைக் காட்டுக்கு அப்பால் விரட்டியடித்துவிட்டோம் என்றெல்லாம் தென்னி லங்கை மார்தட்டி வரும் பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
அதுவும் மட்டக்களப்பு நகரை அண்டி விமா னப்படையின் பிரதான தளத்தின் மூல மையப் பிர தேசமான விமான ஓடுபாதைப் பகுதி மற்றும் மட் டக்களப்பு நகரின் மையத்தில் உயர் பாதுகாப்பு பிர தேசத்தில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கு ஆகியவற்றை குறிதவறாது இலக்குவைத்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது 122 எம். எம். ரக ஷெல்கள் என இராணுவ வட்டா ரத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை, கரடியனாறு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அண்டிய சில பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டிலேயே இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன.
புலிகளின் மைய நிலையமான வன்னிப் பெரு நிலப்பரப்புடன் பாதுகாப்பான தரைவழிப் பாதையோ, கடல்வழித் தொடர்போ அற்ற நிலையிலும் இப் பிராந்தியத்தில் கணிசமான பிரதேசம் இவ்வாறு புலி களால் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும் நிலை யில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்டி ருக்கக்கூடிய 122எம்.எம். மோட்டார் ஷெல்களின் பொதுவான அதிகூடிய வீச்செல்லை 17 கிலோ மீற்றராகும். அப்படியானால், கொக்கட்டிச்சோலை யில் இருந்தோ அல்லது அதை அண்டிய பிரதேசம் ஒன்றிலிருந்தோ மட்டக்களப்பு விமானத் தளத்தின் மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தியிருக்கக்கூடும்.
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் முடிவு கட்டி, அதன் மூலம் இனப்பிரச்சினையை அடக்கி, ஒடுக்கும் எண்ணம் கொண்டிருக்கும் தென்பகுதித் தீவிரப் போக்காளர்களுக்கு இச்சம்பவம் ஒரு செய் தியை எடுத்தியம்பத் தவறவில்லை.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் சில தினங்களுக்கு முன்னர் தெளிவு படுத்திய செய்திதான் அது.
கேள்வி:கேள்வி:சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்ட தென்னிலங்கை, இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு சாத்தியம் என உணர்கிறது. ஆனால் நான் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. தமிழ் சமூ கத்தின் நியாயமான ஆதங்கங்களைக் கவனத்தில் கொள்ளும் சமாந்தர அரசியல் தந்திரோபாயம் இல் லாமல் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.
கேள்வி:கேள்வி:இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என நாம் நம்பவில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன் படுத்தித் தாக்குவதில் புலிகளுக்குக் குறிப்பிடத் தக்க வலிமை உண்டு. அதை நாம் குறைத்து மதிப் பிட்டு விடக்கூடாது.கேள்வி இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் சில தினங் களுக்கு முன்னர் கூறியவை, நிஜமாகவே அவரது கண் முன்னால் ஏனையோருக்கு ருசுப்படுத்தப் பட்டி ருக்கின்றன.
பயங்கரவாத முறையில் அல்லாமல், அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப் படை யின் மையத்தளத்தின் மீது இராணுவ இலக்கு மீது மரபு ரீதியான யுத்தத் தாக்குதல் நடவடிக்கை முறை மூலம் தமது வலிமையை இச்சந்தர்ப்பத்தில் புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
பிரதேசங்களைப் புதிது புதிதாகக் கைப்பற்றி, வழமை நிலையை ஏற்படுத்தி வருகிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு தென்னிலங்கை போடும் படத்தின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை சர்வதேச சமூகம் நேரில் கண்டறிவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருப்பதை யும் நாம் அவதானிக்கலாம்.
பல முக்கிய நாடுகள், தமது இராஜதந்திரிகள் தங்களது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்துக்கொண்டு உண்மை நிலையை மதிப்பீடு செய்ய இது ஒரு வாய்ப்பையும் தந்திருக்கின்றது.
பெறுமதியும், மதிப்பும், கௌரவமும், கீர்த்தி யும் கொண்ட இராஜதந்திரிகளின் உயிர்களுக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்துமிக்க இந்தச் சம்பவம் இடம்பெற்றமை சகலரையும் பொறுத்தவரை துரதிஷ்டவசமானதே.
ஆனாலும் களநிலையின் யதார்த்தத்தை மெய்யுண்மை நிலையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை அது தந்திருப்பதும் மறுக்கக் கூடியதல்ல.
நன்றி>லங்காசிறீ.
Wednesday, February 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment