Tuesday, February 27, 2007

மட்டக்களப்பு எறிகணை வீச்சில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர்கள் காயம்.

மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்கா விமானப்படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதுவர் பியோ மரியானி ஆகியோர் எறிகணையின் சிதறல்களால் சிறுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் இடம்பெற்றது.
ஏறத்தாழ 15 தூதுவர்களும் ஏனைய உயரதிகாரிகளும் மட்டக்களப்பு நகருக்கு பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் உலங்குவானூர்தியை விட்டு இறங்க முற்பட்ட வேளை எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சரை ஏற்றிச் சென்ற 2 உலங்குவானூர்திகள் மட்டக்களப்பில் வெபர் விளையாட்டரங்கில் தரையிறக்கிய போது நடத்தப்பட்ட 122 மி.மீ ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து 2 உலங்குவானூர்திகள் மயிரிழையில் தப்பியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காயமடைந்த அமெரிக்க தூதுவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இத்தாலிய தூதுவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 2 சிறிலங்கா விமானப் படையினரும், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் 2 சிறப்பு அதிரடிப்படையினரும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் ஏழு பேர் பயணம் செய்த ஹெலிகொப்டரை இலக்கு வைத்து மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆட்லறி தாக்குதலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இத்தாலிய தூதுவர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அமைச்சரும், தூதுவர்களும் பயணம் செய்த ஹெலிகொப்டர் மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய வேளை இவ் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே எமது செய்தியாளருக்கு தெரிவித்தார்.

இத் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேரும், பொலிஸார் மூன்று பேர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தில் காமயடைந்த தூதுவர்கள் இருவரிற்கு காயங்கள் ஏதும் பெரிதாக இல்லையெனவும், பொலிஸார் மாத்திரம் படுகாமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டரில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர் உட்பட ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கான தூதுவர்களும் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் முப்படையினதும் உயரதிகாளின் கூட்டமொன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

-Virakesari-

Anonymous said...

Doctors remove shrapnel from Italian ambassador's head

The Associated Press
Published: February 27, 2007

COLOMBO, Sri Lanka: A small piece of shrapnel was removed from Italian Ambassador Pio Mariani's head after he was injured in a mortar attack on a helicopter that was carrying him, a doctor said Tuesday.
Dr. K. Muruganandan of Batticaloa government hospital said the diplomat had sustained a "small injury to the head" and that the shrapnel was successfully removed. Mariani was briefly kept under observation and then discharged from the hospital, Muruganandan said.

Anonymous said...

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23-3 வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.

மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் சிறு காயமடைந்தள்ளதாக தெரியவந்துள்ளது.சிறீலங்கா காவல்துறையினர் தரப்பில் ஏழு காவல்துறையினரும்.