Tuesday, February 13, 2007

மாசித்திங்கள் 22 இன்பின்னர் இலங்கையில் மாற்றம் வருமா?

மாசித்திங்கள் 22 உடன் இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜந்து வருடத்தை நிறைவு செய்கிறது.

அதற்கு முன்னர் அதை இரத்து செய்யசொல்லி, பிக்குகள் கொழும்பில் உண்ணாவிரதமும், ஜேவிபியினர் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.

தமிழர்தரப்போ ஜந்துவருடபூர்த்தியின் பின் தமிழர்க்கு சாதகமான நிலை ஒன்று சர்வதேசரீதியில் தோன்றுமென எதிர்பாக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் என்ன?

உலகத்தமிழரின் கருத்து அறியும் கருத்துக்கணிப்பு இது. உங்கள் கருத்து என்ன?

11 comments:

கொழுவி said...

தமிழர்தரப்போ ஜந்துவருடபூர்த்தியின் பின் தமிழர்க்கு சாதகமான நிலை ஒன்று சர்வதேசரீதியில் தோன்றுமென எதிர்பாக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் என்ன?

அப்பிடித் தமிழர்கள் எதிர்பார்த்தால் அவர்களை விட சூனியங்கள் யாருமில்லை. இதென்ன..? 5 வருடப் பட்டப்படிப்பா..? முடிந்ததும் சான்றிதழ் கொடுக்க..

ஈழபாரதி said...

சான்றிதழ் என்றில்லை, எங்கு பார்த்தாலும் இது பற்றிய பேச்சுகளும் ஆய்வுகளும்தான் தற்போது நடைபெறுகிறது, எமது வானொலிகளிலும்,தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் இது பற்றி பேசுபவர்களும், ஆய்வு செய்பவர்களும். வேலைவெட்டி அற்றவர்கள் அல்ல. படித்தவர்கள் பட்டம்பெற்றவர்கள். அதற்கேற்ற வாறுதான் கொழும்பிலும் தற்போதய சிங்களத்தின் போக்கு காணப்படுகிறது. பெரிதாக மாற்றம் வராவிடிலும் ஏதோ வரப்போகிறது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். அதுபற்றிய கருத்து அறிவதே இதன் நோக்கம்.

Anonymous said...

பெப்ரவரி இல்லயாம்.. ஏப்ரல் தானாம் ஈழம் கிடைக்குமென்று சொல்றாங்கள்.

Anonymous said...

Anonymous said...
பெப்ரவரி இல்லயாம்.. ஏப்ரல் தானாம் ஈழம் கிடைக்குமென்று சொல்றாங்கள்.

அதில் உனக்கென்னப்பு பொறாமை. ஆர் டக்கிளஸ் சொன்னவரோ:-)

வசந்தன்(Vasanthan) said...

//தமிழர்தரப்போ ஜந்துவருடபூர்த்தியின் பின் தமிழர்க்கு சாதகமான நிலை ஒன்று சர்வதேசரீதியில் தோன்றுமென எதிர்பாக்கிறார்கள்.//

இந்தக் கூற்றின்படி நான் தமிழர் தரப்பில்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஏன் அமெரிக்கா ஆசை காட்டுகிறது இது யோசிக்கவேண்டியவிடயம்.

20 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படவுமில்லை. புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை சொல்லிலும் செயலிலும் கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க முடியும். புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொள்ளுதல் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் நீதி நியாயம் என்பனவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி ஹெலனா ரற்றோர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வையே அமெரிக்கா விரும்புகின்றது.

மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

இது மிகவும் முக்கியமான விடயமாகும். அத்துடன் பாதுகாப்புப் படைகள் தமது நன்னடத்தையை வெளிக்காட்டுவதுடன் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஒரு தரப்பாவது உடன்படிக்கையிலிருந்து விலகுகின்றோம் என்று கூறும்வரை உடன்படிக்கை அமுலில் இருக்கும். ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தங்களை கொண்டுவரலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு தடையாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகின்றது. நடைமுறையில் இருக்கின்ற மோதல்களை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்புக்களும் சில கடினமான விருப்பு வெறுப்புகளுக்கு முகம்கொடுத்தால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடித்தளத்தை இடமுடியும். நோர்வேயின் சமாதான பங்களிப்பை அமெரிக்கா ஆதரிக்கின்றது. இரு தரப்பினரும் மோதல்களை நிறுத்தவேண்டும்.
நன்றி : Tamilwin.com

Anonymous said...

Lieber Kozuvi,

Es is lange her, daß wir uns unterhalten haben. Wie geht es Ihnen und Ihrer Familie?

Mit freundlichen Grüßen,
Dondu N.Raghavan

Anonymous said...

Dondu! Bist du DUMM oder was?
warum schribst du personal brief?
Dumme Sau!!

Anonymous said...

Anonymous said...
Dondu! Bist du DUMM oder was?
warum schribst du personal brief?
Dumme Sau!!

அனானி அது ஒன்றுமல்ல கொழுவியின் எஜமான் விசுவாசத்துக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் பாராட்டுக்கள். டோண்டு சாரின் கருத்துக்கள் பற்றி தன்னிடம் எதுவிதமான கருத்துக்களும் இல்லை என்று கூறி, அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தமையால் அவர்போகுமிடமெல்லம் தேடித்தேடி இவரை நலம் விசாரிக்கிறார். அதாவது இருவருக்கும் கொழுவுப்பட்டுட்டுது:-))