Wednesday, February 07, 2007

உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகளை அனுப்புமாறு அரசு கேட்டுக்கொண்ட போதும் ஜேர்மன் மறுத்துவிட்டது.

உதவி வழங்கும் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகள் அனுப்புமாறு அரசாங்கம் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவரை கேட்ட போதும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போன்று உயர்மட்ட ராஜதந்திரிகளை அனுப்ப முடியாது என ஜேர்மன் தூதுவர் பதிலளித்ததாக ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்க சபையில் தெரிவித்தார்.
அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையின் மீது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையில் உடன் படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் அரசாங்கம் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு தேவையில்லை போன்று தெரிகின்றது. அரசியல் நோக்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் இதுவரை என்ன அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அமைச்சர்களே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.

கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அரசாங்கம் இவை குறித்து கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்து இந்தியாவும் ஜப்பானும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது. அப்படியானால் ஏன் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் ஜேர்மன் உதவிகளை நிறுத்தியுள்ளமையினால் ஜேர்மன் நாட்டின் தூதுவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது வீரவிலவில் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அனைத்தும் முடிவடைந்து விட்டது. உலகிலேயே மிக பெரிய அமைச்சரவை எமது நாட்டில் உள்ளது அரசாங்கத்திற்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறலாம் ஆனால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
நன்றி>லங்காசிறீ.

No comments: