Monday, February 26, 2007

சிறீலங்காவிற்கு, இந்தியாவின் இரண்டாவது யுத்தக்கப்பல் நன்கொடை.



கொழும்பில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையின்படி இந்தியா தனது மற்றொரு போர்கப்பல் ஒன்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுதொடர்பில் இந்தியாவின் தேசியப்பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் இக்கப்பலானது நன்கொடையாகவோ அல்லது நீண்ட தவணை (லீஸ்) அடிப்படையிலோ சிறீலங்கா இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் அதாவது 2000ம் ஆண்டளவில் வழங்கப்பட்ட சயுரா ஆழ்கடல் யுத்தகப்பலை ஒத்த ‘வராக’ என்ற பெயருடைய கலம் இந்தியாவால் வழங்கியிருப்பதாக அறியமுடிகிறது.

இந்த யுத்தக்கப்பலானது ‘சயுரா’ என்ற கப்பலுக்கு பிரதியீடாக தற்போது செயற்பட்டு வருவதாகவும் (சயூரா திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால்) இது சிறீலங்கா கடற்படையின் மூன்றாவது பெரிய கப்பலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வழங்கிய கப்பலொன்றும் இம்மூன்றில் ஒன்றாகும்.

இதேவேளை சயுரா யுத்தக்கப்பலின் மீள்நிர்மாண வேலை சிறீலங்காவிற்கு இலவசமா செய்து கொடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை வராக கப்பலானது 22 நொட்ஸ் மைல் வேகத்தில் 8500 கடல்மைல் வரை ஒருதடவையில் பிரயாணம் செய்யக்கூடியதும் 75 மீற்றர் நீளமுடையதும் 11 அதிகாரிகள் உட்பட 100 கடற்படையினரை கொண்ட யுத்தக்கப்பலாகும்.
நன்றி>பதிவு.

No comments: