Monday, February 05, 2007

பொதுமக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்திற்கு கவலை.

இலங்கையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்களினால் பொதுமக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்த தமது அவதானத்தை பிரான்ஸ் ஜனாதிபதி ஜக் சிராக் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் 59 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துத் செய்தியில், மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களினால் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் அரசின் அவதானத்தை வெளியிட்டுள்ளதோடு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் மீள ஆரம்பிக்கப் படவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஜக் சிராக் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியின் விபரம் பின்வருமாறு;

இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் தேசிய தினத்தை கொண்டாடும் உங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல்வேறு மனிதாபிமான பிரச்சினைகளுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையை இரு கூறாக்க முயற்சிக்கும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வாழ்த்த என்னை அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
நன்றி>தமிழ்வின்.

No comments: