இன்று நாட்டில் உள்ள யுத்த சூழல் பற்றி எந்த ஒரு திருப்தியான முடிவும் தெரியவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு கூறிக்கொண்டு வருகிறது. ஆனால், முடிவுக்கு வந்தபாடில்லை. வார்த்தைகளால்தான் யுத்தத்துக்கு முடிவு வருகிறது.
இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்கான அணுகுமுறைகள் கையாளப்படவேண்டும்.
இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வேர்த் பெந்தோட்டையில் மொறகொட என்ற இடத்தில் இடம்பெற்ற சர்வதேச பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
ஜேர்மன் தூதுவர் தமது உரையில் கூறியதாவது;
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் ஜேர்மன் எப்போதுமே ஆதரவு அளிக்கும். இந்த யுத்தத்தினால் வடக்கில் அப்பாவி மக்கள் அல்லல்படுவதையிட்டு நாம் மிகவும் கவலையுடன் நோக்குகின்றோம். யுத்தத்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
இந்தப்பாடசாலையை ஜேர்மனியில் வாழும் கொடைவள்ளல் ஒருவர் கட்டித்தந்துள்ளார். ஜேர்மனியில் உள்ள கொடை வள்ளல்கள் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்.
ஜேர்மன் நாடு இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவைக் கொண்டுள்ளது. அந்த உறவு வளரவேண்டும். ஜேர்மன் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறது. பல இலங்கையர்கள் ஜேர்மனில் வாழ்கின்றனர்.
இவ்வாறான சர்வதேச பாடசாலைகள் நாடு முழுவதும் அமைய வேண்டும் என்றார்.
கைத்தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் குமார் வெல்கம தமது உரையில்; சர்வதேச பாடசாலைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், இதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை வளம்பெறும் என்றார் ஜேர்மன், ஆங்கில மொழிகளை மாணவர்கள் கற்பதற்கு இப்பாடசாலை வழிவகுக்கிறது என்றார்.
நன்றி>தினக்குரல்.
Friday, February 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment