சிறீலங்காவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த இராணுவக் கண்காட்சியில் இன்று மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 விசேட அதிரடிப்படையினர் உட்பட 18 பேர் காயமடைந்ததாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 2 அதிரடிப்படை வீரர்கள், 2 புத்தபிக்குகள், 4 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 18 பேர் காயமைடைந்துள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதிரடிப்படையினரின் பகுதிக்குள்ளேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுவதுடன். விபத்தே இதற்கான காரணம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் நாளில் இருந்து 6 ஆம் நாள்வரை இந்த இராணுவக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் பின்னர் இது பெப்ரவரி 9 ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ மேலாதிக்க கனவை வளர்ப்பதும், தமது படையினருக்கு புதிதாக ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதுமே அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கண்காட்சியின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment