Monday, February 19, 2007

தேசிய நாட்டுப்பற்றுள்ள இயக்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்ய அவசர கோரிக்கை.

தேசிய நாட்டுப்பற்றுள்ள இயக்கம் எதிர்வரும் 22ம் திகதிக்கு முன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விட்டு விலக கோரி சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸவிற்கு அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

ஜே.வி.பியின் பாராளுமன்ற குழுத்தலைவரும் மற்றும் தேசிய நாட்டுப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவருமான விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

போர்நிறுத்தத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதனை அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கு அளவிடமுயாத சேதத்தினை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலன்கருதி தேசிய நாட்டுப்பற்றுள்ள இயக்கம் அரசை போர்நிறுத்த ஒப்பந்தத்தை விட்டு விலகும்படி இறுதிநேரகோரிக்கையாக முன்வைக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: