Tuesday, February 20, 2007

புகலிட வார்த்தக ஸ்தாபனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

கனடா ரொரன்ரோவை தளமாக கொண்டியங்கும் ரொரன்ரோவின் பிரமாண்ட வணிப நிறுவனமான "ஏசியன்ஸ்" எதிர்வரும் ஜனவரி 16 ம் திகதி முதல் சிறிலங்கா பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்கின்றது.
தமது வாடிக்கையாளர்களுக்கு இது பற்றி அறிவித்துள்ள "ஏசியன்ஸ்", இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யபட்ட ஆடை, வகைள் எதிர்வரும் தை மாதம் 16ம் திகதி முதல் எங்கள் ஸ்தாபனத்தில் விற்பனை செய்யடமாட்டாது அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

முயற்கொம்மாக இருந்த இந்த புறக்கணிப்பு நடவடிக்கைக்குள் துணிந்து "ஏசியன்ஸ்" இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஏனைய தமிழ் வணிப நிறுவனங்களும், கையிருப்பில் உள்ள சிறிலங்காப்பொருட்கள் தீர்ந்த பின் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்கப்பட்டுள்ளது,

வார்த்தகர்கள் மட்டுமன்றி, தமது வாடிக்கையாளர்களும், இதை உணர்ந்து செயற்ப்பட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை உணர்ந்து செயற்பட்டால் நிச்சயம் பாரிய மாற்றம் ஒன்றை உருவாக்கு முடியும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த உரிமைக்குரல் நிகழ்வின் போது சமாதானத்திற்கான கனடிய தமிழர் என்ற அமைப்பால் இக்கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>யாழ்.காம்.

1 comment:

Anonymous said...

ஏஸியன் நிறுவனம் சிறீலங்காவின் பொருட்களை புறக்கணிப்பதை போன்று, எமது அனைத்து தமிழ் நிறுவனங்களும் இதை முன்மாதிரியாகக்க் கொள்ளுமா?