இலங்கை இனப் பிரச்னைக்கு தனி ஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கனிமொழி பேசியதாவது:
இலங்கை தமிழர் பிரச்னைக்கு இங்கு உட்கார்ந்து கொண்டு யாரும் தீர்வு கண்டு விட முடியாது. இப்பிரச்னைக்கு தனிஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு.
உலகில் எல்லா நாடுகளும் தங்கள் இன மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்கின்றன. இலங்கை தமிழர்களத் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச் சொல்லும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றார் கனிமொழி.
நன்றி>புதினம்.
Friday, December 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இவ்வளவு அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்த பிறகு தமிழர்களைச் சிங்கள இனவாதிகளுடனும் வெறிபிடித்த புத்த பிக்குகளுடனும் சேர்ந்துவாழ் என்று எப்படிச்சொல்ல முடியும்?அடிமைகளாக வாழுங்கள் என்று சொல்ல வேண்டியது தானே.இதைப் புரிந்துகொண்ட பெண் மனதை வாழ்த்துகிறேன்.மற்றவர்களும் இதைப்புரிந்து கொள்ளும் நிலை சிங்களவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிிருக்கிறது.ஒரு அரசு தனது மக்களையே கொன்று குவித்துவிட்டு உங்கள் நல்லதற்குத்தான் செய்கிறோம் என்ற வேடிக்கை வேறு எங்காவது நடக்கிறதா?
உண்மை நிலையை உலகுக்கு
உரைத்த தைரியத் தையலே வாழ்க!
கருணை கனிமொழியே வாழ்க!! வாழ்க!!!
Post a Comment