Saturday, December 02, 2006

கொழும்பு குண்டு வெடிப்பின் பின்னனி.

சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதார்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது.

இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று.

எனினும், பாரம்பரியமாகவும், ஏற்கனவே தமது அதிகார வர்க்கத்தினரால் வெற்றிடங்கள் இடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கு தேவையான எழுத்துக்களையிட்டு, புலிகள் மீது ஸ்ரீலங்கா அரசு உட்பட உலகக்கனவானும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட மௌனமாக இந்தத் தாக்குதலை புலிகள் செய்திருப்பார்கள் என்று முணுமுணுப்பது இங்கு தெரிகிறது.

எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்களின் தகவலின்படி, இந்தத் தாக்குதல் சர்வதேச புலனாய்வு மற்றும் உள்ளார் இராணுவ அரச அதிகாரிகள் ஆகியோரின் திட்டமிட்ட ஒரு உளவு ரீதியிலான தாக்குதலாகவே கருதக்கூடியதாகவுள்ளது.

புலிகள்தான் தாக்குதலைச் செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால், குறி தப்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால், இன்றைய தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவித சிராய்வுகளும் இன்றி தப்பியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மிக முக்கிய இலக்குகள் இருக்கும் பட்சத்தில் இந்த மென்மையான இலக்கு மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதே இந்தப் பத்தியை எழுதுபவரின் எண்ணம்.

புலிகளின் நகர்வுகளை நோக்குமிடத்து, அவர்கள் தொலை நோக்கான பார்வையுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இதற்குச் சான்றாக விடுதலைப் புலிகளின் வருடாந்த கொள்கை விளக்க உரை அமைந்துள்ளது. இந்த விளக்கவுரையை அமைதியாகவும,; ஆழமாகவும் ஒருவர் படித்து நோக்கினால் - அவர்கள் தமது இலக்கு நோக்கி நகரும் விதங்கள் கடந்த காலப் பாதையிலிருந்து வேறுபட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இந்தத் தாக்குதல் போன்ற, காலத்தை விரயமாக்கும் தாக்குதல்களிலிருந்தும் இலக்குகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் சற்று விலகி, வித்தியாசமான அதுவும் சர்வதேசமே வியக்கும் வகையிலான சில நகர்வுகளையே மேற்கொள்வர்.

இந்த வியத்தகு தாக்குதலுக்கான ஒரு முன்னோடிப் பயிற்சித் தாக்குதல்களே அண்மைய நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், மூதூர் பகுதியிலும், கடற்பிரதேசங்களிலும் நடத்தப்பட்டவை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மை.

இனி, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை உற்று நோக்கின், இது ஒரு உயர் பாதுகாப்பு வலயப் பகுதி - பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மிகவும் நுண்ணிய கண்காணிப்பு வலயமாக ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சகத்தினால் பிரகடனப்பட்டுள்ளது.

‘அரலியக மடிரய’ (Araliyagaha Madiraya – Temple Trees), பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய தூதுவரலாயங்களைக் கொண்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அரசுக்கான உலக ஆதரவினைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் தூதுவர் மீதும் இதே பிரதேசமொன்றில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முச்சக்கர வாகனம் பயன்படுத்தப்படிருப்பதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் கூறியதை இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்;.

இப்போதும் முச்சக்கர வண்டியிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்ததத் தாக்கதல் மூலம், தற்கொலைத் தாக்குதல் என்ற பதத்தினை ஊடகங்கள் மூலம் கசியவிட்டு, பயங்கராவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு மீண்டும் முனைந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால், தனியரசுக்கான போராட்டம் தொடரப்படவுள்ளதாக வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையினையடுத்து, கொழும்பு நகரின் பாதுகாப்ப ஏற்பாடுகள் பாக்கிஸ்தான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உதவியுடன் நவீன தொழில்நுட்ப ரீதியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வகையில், பாதுகாப்புச் செயலாளரின் வாகனப் பயணத்தின்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்தவொரு வாகனமும் இந்தப்பாதையில் சென்றிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அரிது!.

இராணுவத் தொடர்வண்டிகள் செல்லும்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் முச்சக்கர வாகனம் (Auto) இந்தப் பகுதியில் சென்றிருப்பது பெரும் சந்தேகத்தை தருகின்றது.

ஏனெனில், அண்மைய நாட்களில் முச்சக்கர வண்டிகளிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்திகளை வெளியிட்ட்ட வண்ணம் இருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

சர்வதேச ரீதியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான மனிதவுரிமை விடயத்திலும், வடக்கிற்கான தரைப்பாதையை திறந்துவிடுவது குறித்து, பல்வேறு அமைப்புக்கள் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த அழுத்தங்களை திசை திருப்புவதற்கும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுந்துள்ள நிலையினை சிதைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதித் தாக்குதல் இதுவென்பது கண்கூடு.

எனவே, கொழும்பில் மேற்கொள்ளப்படும் மென்மையான இலக்குகள் மீதான தாக்குதல்களின் பழி விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டால் ஆச்சரியபபடுவதற்கு ஒன்றுமில்லை.

http://www.nerudal.com/content/view/3332/38/

No comments: