தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறியிருப்பதாவது:
தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதி தழைத்திட விரும்பிச் செயற்பட்ட நம் போன்றாரிடமும், நோர்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும், ஆற்றலாளரும், அன்பின் உருவமாகத் திகழ்ந்தவரும், இறுதியாக இமைக் கதவுகள் மூடும் வரையில் ஈழத்தின் சுயமரியாதை சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவருமான என்னரும் நண்பர் பாலசிங்கம்.
அவரது மறைவுச் செய்தியைப் பலகாலம் அவருடன் பழகிய என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புத் துணைவியாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி>புதினம்.
Friday, December 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமிழகத்தலைவரின் அனுதாபம் எம்மை ஆறுதல் படுத்துகிறது.
செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அவரை இழந்து தவிக்கும் அனைத்து இதயங்களுக்கும் எனது ஆறுதல்.
எம்.கே.குமார்
Post a Comment