Sunday, December 17, 2006

தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது!!!

-முதல்வர் கருணாநிதி-

விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

"துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசினேன்.

இதுவரை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், இனி, நடக்கப்போவது நல்லவையாக இருக்க வேண்டும் என்று சோனியாவிடம் கூறினேன்.

எத்தனை துயரம் வாட்டி வதைத்தாலும், அதை மறந்துவிட்டு, மனித நேயத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இப் பிரச்சினை தொடர்பாக சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதம், இப் பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண எல்லோரையும் துணையாக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

-தினமணி
http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

2 comments:

வெற்றி said...

இதே பல்லவியை இவர் இன்னும் எவ்வளவு காலம் பாடிக்கொண்டிருக்கப் போகிறார்?!

மறைந்த முதல்வர் MGR அவர்களைப் போல் விளம்பரம் இல்லாமல் தமிழர்களின் பிரச்சனையில் உளப்பூர்வமாக செயற்படுவாரா?

இன்று மறைந்த முதல்வர் MGR அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்... எமது போதாத காலம் அவர் இல்லாதது.

Anonymous said...

இப்படி பிரித்துப் பார்ப்படை தயவு செய்து நிறுத்துங்கள். அன்றுஎம் ஜி ஆர் கலஞரின் அமைதியில்லாமல் செய்திறுக்கமாட்டார்என்பதை நினைத்துப்பாருங்கள். இங்கு அரசியல் தெரிந்தவர்களுக்கு இது தெரியும் புரியும்!