
திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகாம்களில் இருந்து இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிமுதல் மேற்கொண்டனர்.
ஈச்சிலம்பற்றுப்பகுதியில் இரண்டரை கிலோமீற்றர் தொலைவு வரை ஆக்கிரமித்த இப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
இத்தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து மாலையளவில் படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர்.
இதில் படைத்தரப்பில் இரண்டு அதிகாரிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கல்லாறு படைத்தளத்திலிருந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த ஆட்டிலெறிப் பீரங்கி ஒன்றும் விடுதலைப் புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.
படையினரின் 5 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்டுள்ளன.
இம் முறியடிப்புத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை.
நன்றி>புதினம்.
1 comment:
தொடர்ந்து ஈழச் செய்திகளைத் தந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய ஊடகங்களின் செய்திகளின் மறுவடிவம் இணைய ஊடகத்தில் கிடைப்பது மனநிறைவைத் தருகிறது.
நன்றி. வாழ்த்துக்கள்
Post a Comment