Sunday, December 03, 2006

மகிந்தவுடன் படமெடுக்க மறுத்த, பாரதப் பிரதமர்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்தபோது, அவருடன் படமெடுக்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார்.

அரச மாளிகையில் மகிந்தவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நிழற்படங்களோ, ஒளிப்படங்களோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என மன்மோகன் சிங் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்திருந்ததாக அறியப்படுகிறது.

சிறிலங்காவின் போக்கிலும் அதன் தற்போதைய நிலைமையிலும் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதையே இது காட்டுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இரு தலைவர்களினது சந்திப்பின்போது சம்பிரதாயபூர்வமான படங்களை எடுக்க அனுமதிக்காது, தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்பதற்கும் அத்தாட்சி. வழமையாக இரு தலைவர்களது சந்திப்பின்போது வெளியிடப்படும் கூட்டறிக்கையும் இந்தச் சந்திப்பில் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

2 comments:

மஞ்சூர் ராசா said...

மிக முக்கிய செய்தி.

இந்தியாவின் சிறு மாற்றம் கூட இலங்கையில் பெரியதொரு மாற்றம் உருவாக காரணமாக இருக்கும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

குழுமம்:http://groups.google.com/group/muththamiz

Jayaprabhakar said...

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

மன்னிக்கவும் ஈழபாரதி. இது அப்பட்டமான பொய். கருணாநிதி என்று ஈழ தமிழருக்காக குரல் கொடுத்தார்? சட்டசபையிலேயே, அவர் ஒப்பு கொண்டார், ஈழ விடயத்தில் மத்திய அரசு எதை செய்தாலும் தனக்கு சம்மதம் என. அதன் காரணமாகத் தான், தமிழகத்தில் இலங்கை காவலர்கும், வான் படையினருக்கும் தமிழ் மண்ணிலேயே பயிற்சி தர சம்மதிதுள்ளார். தமிழ் M.P களை சந்திக்கவே மறுத்து, அவர்கள், இவருக்கு விண்ணப்பிக்கவே இல்லை என ஒரு நம்பவும் முடியாத பொய் சொன்ன இந்த கருணா(நிதி)யா, மத்திய அரசுக்கு அழுத்தம் தர போகிறார்.

ஈழ விடயத்தில் என்றுமே வைகோ ஒருவர் தான் டில்லி சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை, பலமுறை சந்திதுள்ளார். அவர் மனதில் வைகோ ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு தான், இலங்கை ஹிட்லருடன் சரியாக ஒட்டாமல், வெறும் பெயர் அளவில் ஒரு பேச்சு.

இந்தியாவில் மன்மோகன் சிங் அவர்களை போன்று ஒரு சிலர் தான், புலிகளை ஆதரிக்க தயாராக உள்ளனர். ஆனால், இவரிடம் அதற்கான பலம் இல்லை. இந்திய அரசின் அதிகார மையம் நம்பிக்கை துரோகியும், முன்னால் பிரதமருமான ராஜீவின் மனைவி, சோனியா அம்மையாரிடம் தான் உள்ளது, என்பதையும் நாம் மறந்துவிட கூடாது.