Wednesday, March 28, 2007

வான்புலிகள் தாக்குதல்: இந்திய தயாரிப்பு ராடார்கள் மீது குற்றம் சாட்டுகிறது சிறிலங்கா!!!

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ராடார்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அவதானிக்க முடியவில்லை என்று சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.


கொழும்பிலிருந்து இன்று புதன்கிழமை வெளியான ஆங்கில ஊடகமான தி ஐலேண்ட் நாளிதழின் முதல் பக்கத்தில் அதன் செய்தியாளர் சமிந்த்ர பெர்னாண்டோ எழுதியுள்ளதாவது:

பண்டாரநாயக்க அனைத்துலக வான் நிலையத்துக்கு அருகாமை வரை வானூர்திகள் வந்ததை இந்தியாவால் வழங்கப்பட்டிருந்த ராடார்களால் அவதானிக்க முடியவில்லை. சிறிலங்கா வான் படையில் இணைக்கப்பட்டிருக்கும் இந்திய ராடார்களானவை இயங்குவதில் சிக்கல் உள்ளன. தாக்குதல் நேரத்தின் போது அது இயங்கவில்லை. அதே நேரத்தில் அனைத்துலக பயணிகள் வானூர்தி நிலையத்தில் உள்ள ராடாரானது ஊடுருவியோரை அவதானித்துள்ளது. அது மிகவும் தாமதமானது. ஏனெனில் அந்தத் தளத்திலிருது 3 கிலோ மீற்றர் தொலைவில் ஊடுருவல்காரர்கள் இருந்தனர்.

ஊடுருவியோரை சிறிலங்கா வான் படையின் ராடார் அவதானித்திருந்தால் திங்கட்கிழமை நிகழ்வானது வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ராடார் இயங்காமல் போன விடயம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை கொண்டு சென்றுள்ளது.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து 3 டி உயர்ரக ராடார்களை கொள்வனவு செய்ய விரும்பினார். ஆனால் அப்போதைய சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இவ்விடயத்தில் தலையிட்டு, கொழும்பின் பாதுகாப்புக்காக ராடார்களை வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்கவும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

இது விடயமாக தற்போதைய இந்தியத் தூதுவரான அலோக் பிரசாத்தை சந்தித்துப் பேச சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

7 comments:

Anonymous said...

வாங்குவது ஓசியில் இதில் தரத்தை எதிர்பாக்குதாம் தரம்கெட்ட சிறீலங்கா?

"ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று சொன்னானாம்."

Anonymous said...

நண்றியுள்ளது நாய் அந்த நாயை விட கேவலமானது சிங்களம். ஆனல் இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டுதான் இருக்கவேண்டும், அல்லது அடுதவன் வந்து உள்ளே புகுந்துவிடுவான்.

நாய் ஊண்ணிக்கு இரத்தம் கொடுக்கிறது அது என்ன விரும்பியா கொடுக்கிறது?

ஜோ/Joe said...

இப்படி வேலை செய்யாத ராடார்களை இந்தியா தொடர்ந்து கொடுத்து ---க்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

Anonymous said...

//இப்படி வேலை செய்யாத ராடார்களை இந்தியா தொடர்ந்து கொடுத்து ---க்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். !//
ஹா ஹா ஹா

குழலி / Kuzhali said...

//இப்படி வேலை செய்யாத ராடார்களை இந்தியா தொடர்ந்து கொடுத்து ---க்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
//
:-))))))))))))

கானா பிரபா said...

//ஜோ / Joe said...

இப்படி வேலை செய்யாத ராடார்களை இந்தியா தொடர்ந்து கொடுத்து ---க்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். //

க்கும் கிறேன் ;-)))

நண்பன் said...

சமீபத்தில் நக்கீரன் இதழில் படித்தது - அவர்கள் 'switch on' செய்யவே இல்லை என்று.

மேலும் ஒரு ராணுவ நிபுணர் சொல்கிறார் - விடுதலைப் புலிகள் உபயோகப்படுத்தும் விமானத்தை - ராடாரில் பிடிக்க முடியாது - அதன் உடலமைப்பு - ஒரு சிறிய காரைப் போன்றது. மேலும் இது தாழ்வாகப் பறக்கக் கூடியது. வேகமும் கம்மி - அதனால், ராடாரில் இதனைப் பிடிக்க முடியாது.

அப்படியானால் என்ன செய்வது. வெறும் கண்களால் - இரவானால், night vision goggle அணிந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

என்றாலும் யாராவது சிங்கள ராணுவத்திற்கு - switch on செய்ய வேண்டும் என்ற தொழில் நுட்பத்தையும், ராணுவ ரகசியத்தையும் சொல்லிக் கொடுங்களேன் - பாவம்!!!

அன்புடன்
நண்பன்