Monday, March 26, 2007

சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: ரூ12 பில்லின், பங்குச் சந்தை சரிந்தது!!!

சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு ரூ12 பில்லின், பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக வானூர்தி நிலையமான கட்டுநாயக்காவை நோக்கி வந்த மற்றும் அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து வானூர்திகளும் பல மணிநேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும், நிலைமை முழுமையாக வழமைக்கு திரும்ப மேலதிகமாக 24-36 மணி நேரம் எடுக்கும் எனவும், சிறிலங்கா வானூர்திப் போக்குவரத்து நிறைவேற்று அதிகாரியான பீற்றர் கில் தெரிவித்துள்ளார்.

இப்படியான தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்களும், தாமும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ராடார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு மிகவும் சாதூர்யமாக அதிஉயர் பாதுகாப்புக் கொண்ட வான்படைத் தளத்திற்குள் நுழைந்த தமிழீழ வான்படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்திவிட்டு அவர்களின் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிச் சென்றது சிறிலங்காவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் படையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இத்தாக்குதலும், அதற்கு அனைத்துலக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும், பங்குச் சந்தையில் மாத்திரமின்றி ஏற்கனவே சீரழிந்து போயுள்ள சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
நன்றி>புதினம்.

No comments: