நெதர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எவரையும் எதிர்வரும் ஜூலை வரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற நெதர்லாந்து அரசின் அமைச்சரவை மாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் யுத்த நிலைமைகள் மீண்டும் தோன்றியுள்ளதாலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நெதர்லாந்து அமைச்சரவை தெரிவித்துள்ளது..
முக்கியமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வன்முறைகளினால் தமிழ் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை நெதர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள தமிழர்கள் எவரையும் திருப்பி அனுப்புவதில்லையெனவும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் எந்தவிதமான கடுமையான முடிவுகளும் எதிர்வரும் மாதங்களில் எடுக்கப்படமாட்டாது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது..
http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
Saturday, March 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment