சென்னை, மார்ச் 14- ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலி களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் உறுதுணையாக இருப்பர் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கம் அளித்தார்.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் ராதாமன்றத்தில் 6-3-2007 அன்று இரவு ``ஈழத் தமிழர்களின் இன்றைய பிரச்-சினை என்ன?’’ என்ற தலைப்-பில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
சீனி ஒரு மூட்டை பத்தா-யிரம் ரூபாய். ஒரு கிலோ நூற்றி அய்ம்பது ரூபாய். 2006+ஆம் ஆண்டு டிசம்பர் 31, ஆம் தேதிக்குள் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்தியாவிடம் இலங்கை அரசு கூறியிருந்தது. மத்திய அரசு கேட்க வேண்டாமா? இதுவரை மத்திய அரசு அப்படி நடந்ததா? மத்திய அரசு இதைக் கேட்க வேண்டாமா?
எனவே, தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் இதை ஒவ்வொரு தெருமுனைக் கூட்டங்களிலும் எங்கு பார்த்-தாலும் இந்த கேள்வியை எழுப்ப வேணடும் (பலத்த கைதட்டல்).
அருகிலுள்ள நாடான இலங்கையிலே போர் நடந்தால் அதன் தாக்கம் நம்மைப் பாதிக்கத்தானே செய்யும்.
`கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு’கடலில் வந்தது, கடத்தினார்கள் கடத்தல்காரர்கள் என்று பிரமாதப்படுத்துகிறார்களே! அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
பழமொழி நீண்ட காலம் இருக்கிறதே.
``கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு’’ எந்த கடலிலாவது கடத்தல் இல்லையென்று சொல்ல முடியுமா? அந்த கடத்தல் யாருக்காக?
எந்தக் கடத்தல் எங்கு நடந்தாலும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று பார்ப்பனர்களும், ஊடகங்களும், பார்ப்பன அடிமை ஏடுகளும் அதேபோன்ற அந்த சிந்தனை வயப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆட்பட்டவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று சொன்னால் முதலில் தமிழர்கள், சிங்களவர்களை விட இவர்கள்தான் எதிரிகள் என்று அடையாளம் காண வேண்டிய மகத்தான பொறுப்பு உண்டு.
முதலில் மக்கள் வெற்றியடைய வேண்டுமானால், தனி வாழ்க்கையிலும் சரி, விடுதலை வாழ்க்கையிலும் சரி, வெற்றி-யடைய வேண்டுமானால், உனக்கு உண்மையான நண்பர் யார்? எதிரி யார்? என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்.
ஈழப் பிரச்சினை உச்சக்கட்ட நிலைமை
பல நேரங்களில் நம்முடைய இனத்தில் இருக்கின்ற கோளாறே இதுதான். எதிரியை நண்பனாகக் கருதுவான், நண்பனை எதிரியாகக் கருதி பெரிய அளவுக்கு மாறுபடுவார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னாலே பி.பி.சி. நண்பர் சங்கரமூர்த்தி. ரொம்ப நல்ல உணர்வோடு இருக்கக்கூடியவர். சங்கர் அண்ணா என்று மற்றவர்கள் அழைப்பார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே நான் லண்டன் சென்றிருந்தேன். ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை அப்பொழுது உச்சக்கட்டத்திலிருந்த காலம். ஒரு செவ்வி. அங்கு பேட்டி என்று கூட சொல்ல மாட்டார்கள். செவ்வி என்றுதான் சொல்வார்கள்.
ஏன் விடுதலைப்புலிகளை மட்டும் ஆதரிக்கின்றீர்கள்? அப்பொழுது பொறுக்குக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து சில கேள்விகளை நறுக்கென்று என்னிடத்திலே கேட்டுக் கொண்டே வந்தார். அது பதிவாயிற்று.
அப்பொழுது அவர்கள் கேட்டார்கள்.
``ஏராளமான குழுக்கள் இருக்கின்றனவே, போராளிகளாக (அப்பொழுது இருந்த நிலை) அப்பொழுது விடுதலைப்புலிகளுக்குத் தடையும் கிடையாது. நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை மட்டும் ஆதரிக்கிறீர்கள், உங்களுக்குத் தொடர்பு இருக்குமேயானால், அல்லது நீங்கள் ஏடுகளிலே எழுதியாவது மற்ற குழுக்களோடு இணைந்து எல்லோரும் சேர்ந்து போராடலாம் அல்லவா?’’ என்று கேட்டார்.
ஒற்றுமையாக இருந்து போராட வேண்டியதுதானே இப்படிப்பட்ட சிந்தனை தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு உண்டு. ஏன் தனித்தனியாக இருக்கிறார்கள்? இவர்கள் ஒற்றுமையாக இருந்து போராடலாம் அல்லவா? என்று அவர்கள் கேட்ட நேரத்திலே நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன்.
இது தத்துவரீதியாக மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒற்றுமையாக எல்லோரும் போராட வேண்டும் என்று சொல்வதெல்லாம் சிறப்பாக இருக்கும்.
யார் உண்மையாகப் போராடுகிறார்கள்?
ஆனால், இந்த நேரத்திலே யார் உண்மையாகப் போராடுகின்றார்கள்? யார் யாருக்காகப் போராடுகின்றார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிவிட்டு, அவருக்கு நான் பதிலாக சொன்னேன். தந்தை பெரியார் ஒரு பொதுக்கூட்டத்திலே சொன்ன ஒரு செய்திதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
குரங்கும், நெசவாளியும் கூட்டு சேர முடியுமா?
வேறு ஒரு கேள்வி கேட்டதற்காக பட்டென்று பழமொழியை தந்தை பெரியார் பொதுக்கூட்டத்திலே சொன்னார். ``குரங்கும், நெசவாளியும் கூட்டு சேர முடியுமா?’’ என்று கேட்டார். நெசவாளிக்கு வேலை நூலை கோர்த்துக் கொண்டே போவது. குரங்குக்கு என்ன வேலை என்றால் அதை அறுத்துக் கொண்டே போவது. ஆக இந்த இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்தால் அதனால் ஏற்படப் போகின்ற பலன் என்ன என்று கேட்டார்.
குழி தோண்டுவதற்கே இருக்கிறார்கள்
இவர்கள் என்னென்ன செய்கிறார்களோ அதற்குத் குழி தோண்டுவதற்காகவே மற்றவர் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு உதாரணம் எங்கும் போகவேண்டாம். கருணா இருக்கக் கூடிய இடத்தைப் பார்த்தாலே இன்றைக்கு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
கருணா போன்றவர்களைத்தானே சிங்கள இராணுவம் தூண்டிவிடுகிறது, தூக்கிவிடுகிறது. எனவே ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்று சொன்னால் யாருக்காக கடத்தப்பட்டன? என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?
இதுபற்றி தமிழ்நாட்டிலே பேட்டி கொடுத்தபொழுது சொல்லியிருக்கின்றார்கள்.
ஆயுதக் கடத்தலுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை இது புலிகளைக் கொச்சைப்படுத்தப் படுவதற்கென்றே நடத்தப்படுகின்ற பார்ப்பன ஏடு `தினமலர்’ ஏடு.
இந்த ஏட்டிலேயே இருக்கின்ற செய்தியையே பார்க்கலாம். 3-3-2007 `தினமலர்’ ஏடு. அதில் உள்ள செய்தியை படிக்-கின்றேன்.
தலைப்பு: ``ஆயுத கடத்-தலுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை.’’ சொல்கின்றனர் - இலங்கை எம்.பி.க்கள். (எப்படி தலைப்புப் போடுகிறார்கள். பாருங்கள். இவர்களுக்கு உடன்பாடில்லை.)
``இலங்கையைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிறீகாந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோர் (2-3-2007) சென்னைக்கு வந்திருந்தனர். இவர்கள் டெலோ அமைப்பைச் சேர்ந்திருந்தாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவில்தான் எம்.பி.க்களாகி உள்ளனர். தமிழகப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 23 எம்.பி.க்களில் தமிழ் தேசிய வாத கூட்டணிக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். இக்கூட்டணியில் டெலோ அமைப்பும் பங்கேற்றுள்ளது.
இலங்கை எம்.பி.க்கள் இருவர் கூறியதாவது
(இது சாதாரணமான அமைப்பு அல்ல). இக்கூட்டணியில் டெலோ அமைப்பும் பங்கேற்றுள்ளது. சென்னை வந்த இரண்டு எம்.பி.க்களும் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் நடக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் உறுதுணையாக இருப்பர்.
இத்தகவலை இந்தியாவுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு விளக்கும்படி விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களை கேட்டுக் கொண்டார்.
சைக்கிள் தயாரிக்கவே `பால்ர°’ குண்டுகள் ஆயுதங்கள் கடத்தப்படுவது தென் இலங்கையில், அந்த அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குத்தான் என்று தெரியவருகிறது. ஆயுதங்கள் யாருக்குக் கடத்தப்படுகிறது என்பதை இந்திய அரசின் உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டும். சைக்கிள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் `பால் ர°களை’ சென்னையிலிருந்து செல்லும்போது சில இலங்கைத் தமிழர்கள் சிக்கிக் கொண்டனர். `பால் ர°களை’ அவர்கள் எடுத்துச் செல்வது சைக்கிள்கள் தயாரிக்கவே.
ஒரு சைக்கிள் விலை ரூ. 10,000
இலங்கையில் ஒரு சைக்கிளின் விலை பத்தாயிரம் ரூபாய்க்குமேல் விற்கப்படுகிறது. சைக்கிள் தயாரிப்பதற்காகவே, அவர்கள் பால் ர°-களை கடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கலாம். வெடி மருந்துகள் நிரம்பிய பைபர் படகு பிடிபட்டது குறித்து தமிழக டி.ஜி.பி. முகர்ஜியே தெளிவாக தெரிவித்துள்ளார்.
அப்படகில் இருந்தவர்கள், யாழ்பாணத்தை நோக்கிச் சென்றவர்கள்தான், இந்தியாவை நோக்கி வந்தவர்கள் அல்ல என்று டி.ஜி.-பி.யே தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்’’ என்று தினமலர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயவர்த்தனே காலத்தில் புலிகள் மீது பழி
ஜெயவர்த்தனே அரசு இருந்த காலத்திலே விடுதலைப்புலிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே என்ன செய்வார்கள் என்றால், இவர்களிலேயே இன்னொரு போராளியாக இருக்கக் கூடியவரை இராணுவத்தை விட்டே சுட்டுக் கொன்று விட்டு அங்கே விடுதலைப்புலிகளினுடைய துண்டறிக்கை சீட்டுகளை எல்லாம் அந்த இடத்தில் சிதறிவிட்டு அது ஆதாரமாக கிடக்கும்படி இலங்கை இராணுவமே இந்த காரியத்தை செய்துவிட்டுப் போய்விடும்.
அப்பொழுது செய்திகள் வரும்பொழுது எப்படிப் போடுவார்கள் என்றால் இப்படி செய்தவர்கள், சுட்டவர்கள் அவர்கள்தான் என்ற கருத்துப் பரவட்டும். அவர்கள்மீது ஒரு அவப்பெயர் ஏற்படுத்தப்படட்டும் என்பதற்காகவே இதை செய்தார்கள்.
இந்திய அரசு கண்டுபிடிக்கட்டும்
இந்திய அரசின் உளவுத்துறை தாராளமாகக் கண்டு பிடிக்கட்டும். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.
உண்மைகள் புரிய ஆரம்பித்துவிட்டன. நியாயங்கள் புரிய ஆரம்பித்துவிட்டன என்று சொல்லும்பொழுது துடியாய் துடிக்கிறார்கள். இப்பொழுது அதற்கு ஒரு மாறான படத்தை வரையவேண்டும். மக்கள் மத்தியிலே அவர்களுக்கு ஒரு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால்கூட அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லவேண்டும் என்கிற பழமொழியிலேயே பழகியவர்கள் இவர்கள் எல்லாம்.
அதுமாதிரிதான் பத்திரிகைகள், ஆங்கில ஊடகங்கள் எல்லாம் இருக்கின்றன.
பீடி கடத்திப் போனவர்களைப் பார்த்து
அதாவது ஈழத் தமிழர்கள் ஜான் ஏறினால் முழம் சறுக்க வேண்டும். அல்லது சறுக்காவிட்டால் காலையாவது பிடித்து இழுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சிகளை செய்கிறார்கள். சரி இரண்டு நாட்களுக்கு முன்னாலே இன்னொரு செய்தி வந்திருக்கிறது.
ராமேசுவரம் பக்கத்தில் பீடி கடத்திக் கொண்டு போனதைப் பிடித்திருக்கிறார்கள். என்னையா விடுதலைப்புலிகள் பீடியைக் கடத்தினார்களா?
முன்பு நான் சொன்ன பழமொழிக்கு எவ்வளவு பெரிய பொருள் உண்டு என்பதை எண்ணிப் பாருங்கள். கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு. அதற்காகத்தான் பெர்-மனன்ட் க°டம்° இன்°-பெக்டரைப் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைக் கண்டு பிடிப்பதற்குத்தானே தனி துறை இருக்கிறது.
ஆர்.எ°.எ°. அமைப்புக் கூட்டத்தில் ஏராளமானோர் போதை ஆர்.எ°.எ°.சின் புண்ணிய பூமி, அதுவும் இந்துத்துவாவை உருவாக்கிய வீரசவார்க்கரின் புனே மண்ணிலே என்ன அற்புதமான காட்சி - தொலைக்காட்சியிலே வந்திருக்கிறது.
இணையத்தின் (இன்டர்நெட்) மூலமாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். 227 பேர் போதையில் இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய போதைப் பொருள் ஆர்.எ°.-எ°. கூடாரத்திற்குள் எப்படி நுழைந்தன?
யாருடைய துணையினாலே நுழைந்திருக்க முடியும்? அந்த போதைப் பொருள் நுழைவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்? இந்தக் கேள்வியை மற்றவர்கள் கேட்க மாட்டார்களா?
வாழ்வா? சாவா? போராட்டம்
ஒரு சமுதாயத்தினுடைய விடுதலைப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. 20 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. உரிமை பறிக்கப்படக்கூடிய மக்களாக இருக்கிறார்கள்.
இதுதான் எமது வாழ்வில் கடைசி யுத்தம். வாழ்வா? சாவா? என்பதைப்பற்றி இனி கவலை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அங்குள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளை கடத்தல்காரர்கள் என்றும், அல்லது வேறு வகையான சில சில்லரைத் தனங்களை ஏன் நடத்துகின்றீர்கள்?
ஒரு கல்லிலே மூன்று மாங்காய் அடிக்கிறார்கள். ஒன்று மத்திய அரசு இந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிக்கிறது. பிரதமர் உண்மையைப் புரிந்து கொண்டார் இப்பொழுதுதான் பிரதமர் மன்மோகன் சிங் உண்மையைத் தெரிந்திருக்கிறார்.
இன்றைக்குத்தானே பிரதமர் அவர்கள் புரிந்து கொண்டார் என்ற செய்தி இவர்கள் மூலமாகத்தானே நாடு தெரிந்து கொண்டிருக்கிறது. இதுவரையிலே தமிழர்களுக்கு இருந்த மிகப் பெரிய குறைபாடு உண்மையான நிலையை பிரதமர் புரிந்துகொள்ளவில்லைபோல் இருக்கிறதே என்ற வேதனைதானே இருந்தது. முதல்வர் கலைஞர் புரிந்துகொண்ட அளவுக்கு பிரதமர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்ற செய்தி இருக்கின்றதே, அதுவே இவர்கள் சொன்ன செய்தி நமக்கு ஆறுதலாக உள்ளது. புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்கள் புரிந்துகொண்டதை திசை திருப்பாமல் இருக்கக்கூடிய அதிகாரிகளைத் துணையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிக முக்கியமானது.
``மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’’ அடுத்து பின்னாலே வரக்கூடியதை முன்னாலே சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, இங்கே இன்னொரு செய்தியை சொல்லியிருக்கின்றார்கள். கடல் வழியாக சில பொருள்கள் வருகின்றன. அவற்றை வாங்கும் சக்தி அற்ற நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழ் மக்கள் உள்ளனர்.
நன்றி>விடுதலை
Sunday, March 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment