தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு கூறியதாவது:
"முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதி மீதான பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிறிலங்கா படைத்தரப்பு தயாராகி வருகின்றது. பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதத் தளபாடங்கள் நகர்த்தப்பட்டு இந்த ஏற்பாடுகள் படைத்தரப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.
களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளின் படையணிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. மற்றும் உளவுத்தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இதனை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் படையணிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு பெரும் போராக வெடிக்கும் என்பதை நாம் நோர்வே தூதுக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.
Monday, March 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment