Monday, March 12, 2007

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தருணத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுவதுடன், இந்த இரு நாடுகளும் ஆதரவளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவும் கிடைக்கலாம்.

ஜெனீவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானத்தை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தான் அறியவில்லை என இலங்கை வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டால், இலங்கை பொறுப்புணர்வு வாய்ந்தது, ஜனநாயக நாடு என்பதை நிரூபிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூறவுள்ளதாக கோஹண குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பலனளிப்பதற்கு சில காலம் எடுக்கும். இலங்கை சர்வதேச தரத்தினை அடைவதற்கு போராடும் நெருக்கடிக்குள்ளான ஜனநாயகம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாடுகள் இதற்கு உதவ வேண்டும் விமர்சனம் செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தால் கூட அது இலங்கையை தனிமைப்படுத்த விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

No comments: