Tuesday, March 20, 2007

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: ஐ. நாவின் மீதும் குற்றச்சாட்டுகள்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருகின்றமை குறித்து அத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், விசேட குற்றப் பொறுப்பு விலக்களிப்புப் பாதுகாப்பின் கீழ் அவற்றைத் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கின்றமை குறித்து இவ்விடயத்தைக் கண்காணித்து, கையாண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய ஐ. நா. அமைப்பு பொறுப்பின்றி மெத்தனப் போக்குடன் செயற்படுகின்றது.

இவ்வாறு ஐ. நா. அமைப்பு மீதே சீறிப்பாய்ந் திருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை.
இந்தக் குற்றச்சாட்டை விசனத்தை வெளி யிட்டிருப்பவர் மன்னிப்புச் சபையின் கீழ்நிலை அதிகாரியோ அல்லது பேச்சாளரோ அல்லர். லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் இர்னி கான் அம்மையாரே இவ்வாறு கோபித் திருக்கின்றார்.

""விசேட விலக்களிப்பு வசதிகளைப் பயன்படுத்தி மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலோ அதைப் பார்த்துக்கொண்டு நடுக்கத்துடன் செயலற்று இருக்கின்றது'' என்ற சாரப்பட அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நாலாவது கூட்டத் தொடரின் அமர்வுகள் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகையில், உலகில் மனித உரிமைகளைக் கண்காணிப்பது தொடர் பான பிரபலமான ஒரு சர்வதேச அமைப்பு இத்தகைய குற்றச்சாட்டை கவுன்ஸிலின் மீது முன்வைத் திருப்பது முக்கிய விடயமாகும்.

""இலங்கையில் குற்றப் பொறுப்பிலிருந்து விலக்களிப்பு வழங்கும் விசேட வசதிகளைப் பயன்படுத்தி படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில் செயலற்று அதிர்ந்து போய் இருக்கின்றது. சூடானின் டார்பூர் விவகாரத்திலும் அது (ஐ. நா. மனித உரிமை கள் கவுன்ஸில்) மிகவும் பலவீனமாகவே செயற்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் அதன் ஆக்கிரமிப்புப் பிரதேச விடயத்திலும் அது உயிரூட்டமா கவோ அல்லது தந்திரோபாயமாகவோ செயற் படவில்லை.'' என்று கூறும் அவர், இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.
""இந்தப் போக்கினால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினதும் மட்டுமல்லாமல் முழு ஐ. நா. கட்டமைப்பினதும் நம்பகத்தன்மை கேள்விக் குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே கவுன்ஸில் வெறுமனே அரசியல் ரீதியான அணுகுமுறையை நாடுவதை விடுத்து, மனித உரிமை மீறல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குக் கொண்ட செயற்றிட்டத் தந்திரோபாயத்தைப் பின் பற்ற வேண்டும்.'' என்றும் அவர் தெரி வித்திருக்கின்றார்.
தற்போது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொட ரில் இலங்கை அடித்த "அந்தர் பல்டி'க்கு மத்தியில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பத��
� குறிப்பிடத்தக்கது.

மேற்படி கூட்டத் தொடரில் இலங்கைக்கும் அதன் அரசுக்கும் எதிராக மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பாக பெரும் குற்றச்சாட்டு களும், கடும் எதிர்ப்பும் எழும் என்ற பின்னணி நிலவிய நிலையில், அதை சமாளிப்பதற்கு இக்கூட்டத் தொடரில் தாம் ஆற்றிய ஆரம்ப உரையில் இலங்கையின் தலைமைப் பிரதிநிதியாக அதில் கலந்து கொண்ட மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சில சமாளிப்பு அறிவிப்புகளை விடுத்திருந்தார்.

""இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை நேரில் கண்காணித்துப் பார்வையிட, சித் திரவதைகள் சம்பந்தாமான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட தொடர்பாளரையும், உள் நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதியையும் இலங்கைக்கு வரு மாறு அழைக்கின்றோம்.'' என்று அவர் அங்கு தெரிவித்தார்.

ஆனால் உள்நாட்டுவிவகாரங்களில் வெளி நாடுகளும், ஐ. நாவும் அதிகளவில் தலையிட அமைச்சர் மஹிந்த சமரசிங்க வழி சமைத்துக் கொடுக்கின்றார் என தென்னிலங் கையில் அவர் மீது கடும் எதிர்ப்புக்கிளம்ப, தமது நிலைப்பாட்டில் தடம் புரள வேண்டியவரானார் அவர்.

""இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ. நா. கண்காணிப்பாளர்கள் இங்கு வரவேண்டிய தேவை ஏதும் இல்லை.'' என்று பின்னர் விளக்கமளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர்.

இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை களில் ஐ. நாவின் பங்கு பணிகளும் சிக்கலுக்குள் உள்ளாகியிருக்கும் சூழ்நிலையிலேயே ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை விடயம் அலசப்படு கின்றது.

இரு தரப்பினரின் இனப்பிரச்சினைப் போருக் குள் மூழ்கிக் கிடக்கும் இலங்கையில், மனித உரிமை மீறல் தொடர்பான அதிகளவிலான குற்றச்சாட்டுகளும், கருத்து நிலைப்பாடும் சர் வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு எதிராகவே அண்மைக் காலத்தில், முழு அளவில் , முன் வைக்கப்பட்டு, குரல் எழுப்பப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது
நன்றி>uthayan.com

No comments: