வடக்கு கிழக்கு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு என்றும் நான் எதிரானவன் - கோத்தபா
வடக்கு கிழக்கு விவகாரங்களில் சம்மந்தப்படும் அனைத்துலக மற்றும் உள்ளுர் உதவு நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்கு என்றும் நான் எதிரானவன் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் ‘நேசன்’ நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அவர் ‘எனது சகோதரர் (ஐனாதிபதி) தனது உயிரை துச்சமென மதித்து வாகரைக்கு சென்றார் அதேபோல அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டவரும் ஆபத்துக்களை ஏற்க தயாராக இருக்கவேண்டும் அல்லது அங்கு செல்லக்கூடாது’ என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறீலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் போரினால் பாதிப்படையும் தமிழ் மக்களுக்கு உள்ளுர் மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் பல கட்டுப்பாடுகளின் மத்தியிலும் குறிப்பிடத்தக்க சேவையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் உதவிகளையும் நிறுத்தும் நோக்கம் உள்ளமை அவரது கூற்றின் மூலம் தெரியவருகிறது.
சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுப்பிரதிநிதிகளின் விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்களுக்கான அனுமதிகளுக்கு பலத்த கட்டுப்பாடுகள் அண்மைக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சால் விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.
Monday, March 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment