நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின்மீதான சிறீலங்கா அரசபடைகளின் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளும் பதில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் இவ் எதிர் நடவடிக்கையானது சிறீலங்கா முழுவதையும் பாதிக்கும் என்று விடுதலைப்புலிகளும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதால் சிறீலங்கா செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறும் தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் நெதர்லாந்து மக்கள் அனைவரையும் வெளியேறுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமர் கொல்லப்பட்ட சம்பவம்,. கொழும்பு-கண்டி, கொழும்பு-காலி பயணிகளின் பஸ்களின்மீதும் ஜனாதிபதியின் சகோதரர் மீதும் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களையும் சுட்டிக்காட்டிய இச்செய்தியில் கொழும்பு நகரத்திலும் வேறு முக்கிய நகரங்களிலும் இரவு 10 மணிக்குப்பின் பாதுகாப்புக் காரணங்களிற்காக பல வீதிகள் மூடப்படுவதாகவும் பல முக்கிய நகரங்களில் கடும் பாதுகாப்பு இராணுவச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் மிகவும் கடுமையான பாதுகாப்பற்ற நிலமையும் மத்திய, மேற்கு, தெற்கு பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவுவதால் சிறீலங்கா முழுவதும் ஒரு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் உல்லாசப்பயணிகளை அங்கு செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறு இவ்இணையத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறீலங்காவில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் தற்போது வாழும் நெதர்லாந்தவர்களை கார், மினிபஸ், பஸ் , தொடரூந்து போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களை வாடகைச்சாரதியுடன் அல்லது போக்குவரத்துமுகவர்கள் ஊடாக பாவிப்பதை தவிர்க்குமாறும் அத்துடன் பொலிஸ், மற்றும் இராணுவத்தினரையோ அல்லது அவர்களது கட்டடங்களையோ போட்டோ, வீடியோ எடுக்கவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
முழு சிறீலங்காவும் தற்போது பாதுகாப்பற்ற நிலமையாகவுள்ளதென அடிக்கடி திரும்பத் திரும்ப தனது இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்அறிவித்தலுள்ள நெதர்லாந்தின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளமுகவரி:
http://www.minbuza.nl/nl/reizenlanden/reisadviezen,reisadvies_sri_lanka.html
நன்றி : பதிவு
Wednesday, March 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment