Tuesday, September 12, 2006

நிபந்தனையற்ற பேச்சா?: சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது குறித்து அசோசியேற்றட் பிரஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:
நாம் எமது நிபந்தனைகளை தெரிவிக்க உள்ளோம். பேச்சுக்கான நாள் மற்றும் இடம் குறித்து எம்மிடம் நோர்வே அனுசரணையாளர்கள் ஆலோசிக்கவில்லை.
எதுவித பேச்சுக்கள் குறித்தும் அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நோர்வேயோ இதர தரப்பினரோ பேச்சுக்கான நாளையோ இடத்தையோ அறிவிக்க இயலாது.
நாம் ஒரு இறைமையுள்ள அரசாங்கம். நோர்வே தரப்பு அனுசரணையாளர்கள்தான். இது பாரதூரமான விடயம் என்று கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

டேய் பேச்சுக்கு போடா என்றால் போக வேண்டியதுதானே, என்ன வெட்டிப்பேச்சு வேண்டிக்கிடக்கு.
கழுத்தில பிடிச்சு இழுத்துகொண்டு போறதுக்கு முதல் போறது சிறீலங்காவின் இறைமைக்கு நல்லது:-)))