Wednesday, September 06, 2006

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது:
சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன்.
"சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்" என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தார்.
"அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எதுவித பதிலும் தரவில்லை. கண்காணிப்புக் குழுவினர் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றும் தயா மாஸ்டர் கூறினார்.
நன்றி>புதினம்.

7 comments:

Anonymous said...

புலி வருது புலி வருது. அங்கே யுத்தம் ஆரம்பிக்கபட்டாம் இங்கே அகதிகள் வருகை அதிகரிக்கும்,,தமிழ்னாடுக்கு தான் தொல்லை

Anonymous said...

Anonymous said...
புலி வருது புலி வருது. அங்கே யுத்தம் ஆரம்பிக்கபட்டாம் இங்கே அகதிகள் வருகை அதிகரிக்கும்,,தமிழ்னாடுக்கு தான் தொல்லை

என்ன செய்வது உனக்கு உன் பிரச்சினை,அவன் அவனுக்கு உயிர் பிரச்சினை, உனக்கு சோத்துப்பிரச்சினை.

Anonymous said...

we allowed Bangaladesh refuee into india. we allowed Nepal refuee into India.
our SRI LANKA TAMIL Refugees are our Brothers and Sisters. we welcome them.
dont worry about some nonsence
Long Live EElam

Anonymous said...

we allowed Bangaladesh refuee into india. we allowed Nepal refuee into India.
our SRI LANKA TAMIL Refugees are our Brothers and Sisters. we welcome them.
dont worry about some nonsence
Long Live EElam

வன்னியன் said...

உதெல்லாம் வழமையான கதைதான்.
இன்று நோர்வேயைச் சந்தித்த சு.ப. கூட என்ன சொன்னார் என்று பார்த்தால் உதே கதைதான்.. அவரது பேட்டி வழமைபோலத்தான் இருக்கிறது.
இந்த இடத்தில் நோர்வையைப் பேச அழுத்தம் கொடுக்க வேண்டும். நோர்வேயைக்கொண்டு சம்பூரைவிட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு சிங்கள தேசம் விடுக்கும் மறுப்பைக் கொண்டு நோர்வேயே தானாக வெளியேற வேண்டும். உலகத்துக்கும் அவர்கள் நடுவர்கள் வாயாலேயே முக்கிய சேதியைச் சொல்ல வைக்கலாம்.
அதற்கு நோர்வேயை நிர்ப்பந்திப்பதைவிட்டுவிட்டு சும்மா சூளுரைத்துக் கொண்டிருப்பது என்ன அரசியல்?
முகமாலை ஆமியை கிளிநொச்சியைப் பிடிக்க விட்டுவிட்டு அதுக்குச் சூளுரைத்தால் இன்னும் நல்ல வலிமையா இருக்கும்.

Anonymous said...

அனானி...அகதியாய் வருபவன் நம் சகோதரன்..அவனுக்கு முழு உரிமை இருக்கிறது இங்கு வர...

முதலில் மனிதாபிமானத்தோடு சிந்திக்க கற்றுக் கொள்வோம்.

ஈழபாரதி said...

நோர்வேயைக்கொண்டு சம்பூரைவிட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு சிங்கள தேசம் விடுக்கும் மறுப்பைக் கொண்டு நோர்வேயே தானாக வெளியேற வேண்டும். உலகத்துக்கும் அவர்கள் நடுவர்கள் வாயாலேயே முக்கிய சேதியைச் சொல்ல வைக்கலாம்."

வன்னியன் அனேகமாக இதுதான் நடைபெறும் என எதிர்பாக்கிறேன்.