Friday, September 08, 2006

இலங்கைக்கான இராணுவ உதவிகள் பாகிஸ்தானால் அதிகரிப்பு.

ஸ்ரீ லங்காவுக்கான இராணுவ உதவிகள் அதிகரிக்கப்படும் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரின் செயலாளர் கமல் ஷா தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் அரசாங்கத்தின் இலங்கைக்கான இராணுவ உதவிகள் எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கப்படும். இரு நாடுகளுக்கான நட்புறவின் அடிப்படையில் இந்த இராணுவ உதவிகள் வழங்கப்படும். இலங்கைக்கு போர்த் தளபாடங்கள் மற்றும் போர் முறைமைகள், புலனாய்வு தகவல்கள், போர்ப் பயிற்சிகள் என்பன பாகிஸ்தானினால் வழங்கப்படும். இலங்கையின் முப்படையினருக்கு பாகிஸ்தானில் வழங்கப்படுகின்ற போர்ப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும். இலங்கை பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும். இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகள் புலிகள் போரியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும என்பதே பாகிஸ்தானின் விருப்பம் என்றும்.

ஏனெனில் இந்தியா விடுதலைப்புலிகளை தடை செய்திருப்பினும், வரலாற்று மற்றும் மத, பூர்வீகத்தொடர்புடைய இந்தியாவும், தமிழீழ விடுதலைப்புலிகளும் இணைந்தால் நிச்சயம் இந்தியாவின் ஆதிக்கம் தெற்காசியப்பிராந்தியத்தில் விஸ்பரூபம் எடுக்கும் என்று பாகிஸ்தான் கருதுவதால், அதை வழரவிடாமல் ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கு உதவிகளை வழங்கி அதனைத் தடுத்துவிடலாம் என்று பாகிஸ்தான் கருதுவதாக இந்திய அவதானி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நன்றி>பதிவு

No comments: