Thursday, September 07, 2006

நோர்வேயை வெளியேற்றவேண்டும்-ஜே.வி.பி.

சம்பூர் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை வெளியேற்றியது போன்று அனுசரணைப் பணியிலிருந்தும் நோர்வேயை அரசாங்கம் அகற்றவேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான விமல் வீரவன்ச சபையில் வேண்டுகோள் விடுத்தார்.கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றி வட க் கிலிருந்து கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும். அதற்காக பாரிய இராணுவ நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இராணுவ ரீதியாக புலிகளை வெல்ல முடியாது என்ற மாயை சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றியதன் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் ஆரம்பமானதும் எம்.பிக்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. அது முடிவடைந்ததும் சபாநாயகரின் அனுமதியுடன் விமல் வீரவன்ச எம்.பி. விசேட கூற்று ஒன்றை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பூர் பிரதேசத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியமைக்காக இராணுவத்தினரை பாராட்டி முன்வைத்த விசேடகூற்றின் போது மேலும் தெரிவித்ததாவது:
புலிகளை வெல்ல முடியும்இராணுவ ரீதியாக புலிகளை வெல்ல முடியாது என புலிகளைப் பற்றி புகழ்பாடுகின்ற சிலர் கூறி வந்தனர். புலிகளும் அவ்வாறானதொரு மாயை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் நடந்தது என்ன? சிறியரக ஆயுதங்களை பயன்படுத்தியே சம்பூரை இராணுவம் கைப்பற்றியது. புலிகள் தற்போது அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளனர். புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கௌ;ள முடியும். ஈழம் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு போராடிய பிரபாகரனின் தீவிரவாதம் அடக்கப்பட்டுள்ளது என்பதற்கு சம்பூர் நல்ல உதாரணம்.புலிகளை விரட்ட வேண்டும் சம்பூர் பிரதேசத்திலிருந்து புலிகளை விரட்டியது போன்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அவ்வாறே வட மாகாணத்திலும் அவர்களை விட்டு வைக்கக் கூடாது. வடக்கு மாகாணத்திலுள்ள பிரபாகரனின் சித்திரவதை முகாம்கள் அழிக்கப்பட வேண்டும். புலிகளுக்கு எதிரான யுத்தம் ஒன்றை தொடுத்து அவர்களை வெற்றி கொள்வதற்கான மனத்திடம் இராணுவத்திற்கு உண்டு.
பலம் இழந்த புலிகள்சம்பூரை இராணுவம் கைப்பற்றிய பின்னர் புலிகள் பலம் இழந்து விட்டனர். மனதளவில் புலிகள் குழம்பி விட்டனர். சம்பூரை இராணுவம் கைப்பற்றிய பின்னர் இலங்கை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இராணுவத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்தக் கடமையைத்தான் ஜனாதிபதி செய்துள்ளார். நோர்வே வெளியேற வேண்டும்
அனுசரணைப் பணியிலிருந்து நோர்வே வெளியேற வேண்டும். சம்பூரை இராணுவம் கைப்பற்றியது போன்று அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை வெளியேற்ற வேண்டும். இராஜதந்திர ரீதியான தொடர்புகளை மாத்திரம் நோர்வேயுடன் வைத்துக் கொண்டு சமாதான முயற்சிகளிலிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சம்பூரை கைப்பற்றும் நடவடிக்கையில் உயிர் நீத்த படை வீரர்களுக்கு நாங்கள் அஞ்சலியை செலுத்துகின்றோம். காயமடைந்த இராணுவ வீரர்கள் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
நன்றி>பதிவு.

No comments: