Tuesday, September 12, 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சரிக்கை!!!

தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலும் அதனால் தமிழ் மக்கள் பாரிய அவலங்களுக்குள் தள்ளப்படுவதும் தொடர்ந்தால் இலங்கைத் தீவு முழுமைக்கும் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாதது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்சுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் மின்னஞ்சல் ஊடாக அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

கேள்வி: வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை என்ன?

பதில்: சிறிலங்கா இராணுவம் தனது வலிந்த தாக்குதலைத் தொடர்ந்தால்- யுத்த நிறுத்த மிகவும் பாரதூரமான வகையில் தொடர்ந்து மீறினால் எதிர்பாராதவிதமாக தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாறி தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். இது ஒரு முழு அளவிலான யுத்தத்துக்குச் செல்ல நேரிடும் என்று நாம் கருதுகிறோம்.

கேள்வி: யுத்த நிறுத்த ஒப்பந்தம் முற்றாக செத்துவிட்டதா? அதனை செல்லுபடியற்றதாக்குவது குறித்து விடுதலைப் இப்போது பரிசீலிக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா இராணுவமானது தனது வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்வதும் தமிழர் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதுமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அர்த்தமற்றது என்று நாம் கருத வேண்டியதாகும். இருந்தபோதும் அனுசரணையாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தரப்பினர் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் முனைப்புடன் உள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக அனுசரணையாளர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனுசரணையாளர்கள் மீண்டும் பேச்சுக்கள் நடத்த புலிகள் தயாராக உள்ளனரா?

பதில்: பேச்சுக்கள் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர். இருப்பினும் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை முழுமையாக மதித்துச் செயற்படுத்தினால்தான் பேச்சுக்களுக்கான சந்தர்ப்பங்கள் வலுப்படும்.

கேள்வி: தற்போதைய யுத்த நிலைமையை எப்படி நிறுத்துவது?

பதில்: தற்போதைய யுத்த நிறுத்தமானது இருதசாப்த கால யுத்தம் நடைபெற்று வந்த இந்தத் தீவில் அமைதியை உருவாக்க பாரிய பங்களிப்புச் செய்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகாலம் முழு அளவிலான யுத்தம் நடைபெறுவதைத் தடுக்க உதவியுள்ளது. புறத்தோற்றத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனுசரணையாளர்களின் முயற்சியும் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமானது 100 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படும்போது தற்போதைய நிலைமையானது முடிவுக்கு வரும்.

கேள்வி: தமிழர் தாயகக் கோட்பாட்டை மகிந்த ராஜபக்ச நிராகரித்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுகள் தோல்வியடையும் என்று கருதியுள்ளீர்களா?

பதில்: பரிசீலனைகளுக்கு அப்பால் எது உதவும்- எது உதவாது என்பவற்றை நடைமுறையில்தான் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அத்தகைய ஒரு உண்மையான- நடைமுறைச் சாத்தியமான நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தாக வேண்டும். அந்த நடைமுறைச் சாத்தியமான நிலைமை உருவாவதற்கான சந்தர்ப்பங்களை நாம் அனைவரும் தேடுவதே அர்த்தமுள்ளதாக இருக்கும். மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமான நிலையில் உள்ளார். தமிழ் மக்களினது உரிமையை எவராலும் மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்கின்றனர். ஆகையால் இது விடயத்தில் ஒரு நாகரீகமான நிலைப்பாட்டை மகிந்தவும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கேள்வி: சம்பூரிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகாவிட்டால், புலிகளின் நிலை என்ன?

பதில்: யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஆக்கிரமித்துள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழான எமது நிர்வாகப் பகுதிகளை மீட்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: புலிகள் மீதான தாக்குதலை இராணுவம் நடத்தினால் கொழும்புக்கும் யுத்தம் விரிவடையுமா?

பதில்: தமிழர் தாயகப் பிரதேசம் முழுமைக்கும் ஒரு கொடூரமான யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் நடத்தி, தமிழர் தாயகத்திலே வாழுகிற எம்மக்களை பாரிய அவலங்களுக்குள் தள்ளிக் கொண்டிருந்தால் இந்த யுத்தமானது இந்தத் தீவு முழுமைக்கும் விரிவடையும் என்றே நான் கருதுகிறேன். அது தவிர்க்க முடியாதது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

10 comments:

Anonymous said...

புலிகளால் ஒன்று இலங்கைப் படைகளை ஒன்றும் புடுங்க முடியாது. இப்படி அறிக்கை விடத்தான் முடியும். உலகெங்கும் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை தனதாக்கிக் கொண்ட புலிகளை தமிழ் மக்கள் எனியும் நம்பி ஏமாறத்தான் வேண்டுமா?!

Anonymous said...

அப்ப ஆர நம்புவம் டக்கிளச, அல்லது ஆனந்த சங்கரிய, இல்லாட்டி ஜெயதேவன சும்ம பகிடி விடாதீயும் ஓய்.

Anonymous said...

எப்போது நீங்க எல்லாம் புலிகளை மட்டும் நம்பிநீர்களோ அப்பவெ தெரியும் இது வெளங்காதுன்னு....எப்படியொ போங்க, தமிழ்நாட்டிற்கு வந்து குழப்பாம இருந்தா சரி, இல்லாட்டாலும் சரி...

Anonymous said...

டக்கிளசை ஆனந்தசங்கரியை ஜெயதேவனை யாரும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தவில்லை. புலிகளுக்கு மட்டுமே அவர்கள் துரோகிகள். மக்களுக்கு அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கின்றனர். டக்கிளஸ் மட்டும் தனக்கு எதிரான புலித்துரோகிகளை (புலிகள் பார்வையில் எப்படி மற்றவர்கள் துரோகிகளோ அப்படி டக்கிளஸ் பார்வையில் புலிகள் துரோகிகள்) கொல்கின்றார்.

அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள். புலிகளுக்கு ஜனநாயகம் என்றால் என்னென்று தெரியுமோ தெரியாது. இலங்கைப் படைகளை மட்டுமல்ல தமிழ் மக்களின் குரல்வளைகளிலும் புலிகளின் ஆயுதங்களே இருக்கின்றன. மக்கள் எதுவும் சொல்லமுடியாது இருக்கின்றனர். அவலத்தை மக்கள் பெறவில்லை. புலிகள் போராட்டத்தில் செய்த செய்யும் தவறுகளே மக்களை அவலத்துள் தள்ளியுள்ளது. புலிகள் திருந்துவார்களா மக்களுக்காக? ஜனநாயகத்தை மதிப்பார்களா சொந்த இனத்தின் மீதான வன்முறைகள் கைவிடுவார்களா?

இராணுவத்தை எதிர்க்க திராணியற்ற புலிகள் கருணாவை விரட்டிவிரட்டி அடிச்சதாக வீரமுழக்கம் இட்டதுதான் மிச்சம். கருணாவைவிட இராணுவமே ஆபத்தானது என்பதை புலிகள் சுயநலத்துக்காக மறந்துவிட்டார்களா?

Anonymous said...

டக்கிளசி கோழிமுட்டை கள்ளன், கடற்படையுடன் சேர்ந்து அல்லைப்பிட்டி மக்களை கொண்று குவித்தவன் சொந்த இன மக்களை ராணுவம் போடும் பிச்சைக்காக கொலை செய்பவன் மக்கலுக்கு என்ன நன்மை செய்துவிடப்போகிறான்.

ஆனந்த சங்கரி சிறுவர்களை ருசிபார்ப்பவன் ரானுவம் போடும் பிச்சைக்காக ராணுவத்துக்கு உளவு பார்ப்பவன். இவனால் மக்களை விட சிறுவர்கலுக்குதான் ஆபத்து.

ஜெயதேவன் கோயில் உண்டியல் கள்வன் சுத்துவரைக்கும் புலி ஆதரவாளன் கணக்கு கேட்டவுடன் புலி எதிர்ப்பாளன். இந்தக்கள்ளகூட்டத்தால் தமிழருக்கு என்ன விமோசனம் வந்துவிடபோகிறது.
இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் புலிகளுக்கே சுதுமாத்து விடும் சிறீலங்கா. இந்த எச்சில் நாய்களுக்காகவா தமிழர்தம் உரிமையை கொடுக்கபோகிறது. தம்தேவை முடிந்ததும், உண்ணிகள் போன்று பிடுங்கி நெருப்பில் போட்டுவிடுவார்கள். எதிர்த்து பேச இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது. மக்கள் பலம் என்றால் முதல் செருப்படி மக்களால்தன் கிடைக்கும்.

Anonymous said...

புலிகளுக்கு சார்பாகப் பேசும் நீங்கள் பள்ளிப்பிள்ளைகள் போல பேசுறீங்களே. கோழிம்முட்டைக்கள்ளன் பிள்ளைபிடிகாறன் உண்டியல் உடைத்தவன் என்று. எந்த சர்வதேசமாவது அவர்களை இப்படிச் சொல்லி இருக்கிறதா?

ஆனால் புலிகளை ஆதாரங்களோடு பயங்கரவாதிகள் என்று சர்வதேசமே அடையாளம் கண்டிருக்கிறது.

புலிகள் மக்கள் விடுதலைக்காக சர்வதேசத்தின் நலன்களை அச்சுறுத்தும் வகையில் போராடுகிறார்கள் அதனால் தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று பூச்சாண்டி காட்டுகிறது. புலிகளை ஓரங்கட்ட என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்ளலாம். அதைவிடுத்து மற்றைய தமிழ் தலைவர்களை நீங்களே குறை சொல்லிக் கொன்றழித்ததால் தான் இன்று புலிகள் பயங்கரவாதிகள் என்று காட்டப்பட உதவி இருக்கிறது. இது யாரின் தவறு. தமிழ் மக்களதா புலிகளதா டக்கிளசதா சங்கரிடதா.

போர்க்களங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சங்கரி டக்கிளஸ் இதைக் கண்டிக்கிறார்கள். புலிகள் விடுப்புப் பார்த்திட்டு இருக்கிறார்கள். மக்களைப் பாதுகாக்கப் புறப்பட்ட புலிகள் ஏன் மக்களை இராணுவம் கொல்லப் பார்த்திட்டு ஓலமிட்டிட்டு இருக்கிறார்கள். இயலாமைதானே.

சின்னப் பையங்கள் போர் முனைக்கு அனுப்பி தினமும் கொன்று குவிக்கிறார்கள். அதை மறைக்க ஊடகங்களில் செய்திகள் இராஜதந்திரம் கருதி வெளியிடுவதில்லை என்று கதையளக்கிறார்கள். நேற்றுக் கூட முகமாலையில் 11 புலிகளின் உடல்களை இராணுவம் மீட்டுள்ளது. புலிகள் முகமாலையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னார்களா? இல்லை. நாளை சம்பூரில் இருந்து ஓடியது போல ஆனையிறவில் இருந்து ஓடிவிட்டு ஒப்பந்தத்தை பிடிச்சு வைச்சு ஓலமிட்டுக் கொண்டிருப்பர். இழந்த மக்களின் போராளிகளின் இலட்சியங்களை காப்பவர்கள் ஏன் வலுவற்ற ஒப்பந்தத்தை புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்வதேசத்தின் ஒப்பந்ததை வைத்து ஓலமிட வேண்டும்.

பலஸ்தீனத்தில் அரபாத் சமாதானம் பேசிய போதும் கமாஸ் போராடியது. தமிழீழத்தில் அப்படியல்ல. எல்லாம் புலிகள். புலிகளை சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குள் சிக்க வைத்துவிட்ட ரணில் இப்போ தங்களின் படைப்பலத்தைப் பயன்படுத்தி நிலங்களை மீட்டு தமிழ்மக்களை அடிமைகளாக்கி வருகின்றனர். சம்பூரில் நிரந்தர சிங்களக் குடியேற்றத்துக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். இவற்றைப் பற்றி புலிகள் இன்று கவலையபடவில்லை. தமிழ் மக்களின் நிலம் பறிக்கபப்டுவதை வேடிக்கை பார்த்திட்டு வெறும் அறிக்கைகளை வெளியிட்டு பூச்சாண்டி காட்டி வருகின்றனர் புலிகள். புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது இது முதற்தடவையல்ல. தற்போது சமாதான காலத்தில் பெரிய எதிர்பார்ப்புக்களை வளர்த்த புலிகள் மக்களை அம்போ என்று இராணுவத்துக்கு இரையாக்கி வருகின்றனர். ஏன் புலிகள் எல்லாம் தாங்களே என்ற மமதை தந்த விளைவு. இன்று தாங்களா சிங்கள மற்றும் சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குள் சிக்கிவிட்ட புலிகள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். காரணம் என்ன. தாங்களே எல்லாம் என்ற மமதை செய்த வேலை. தமிழ் மக்களுக்கு இப்போ இன்னொரு சக்தி இருந்திருக்குமானால் அது புலிகளைக் கூட இதில் இருந்து மீட்டிருக்கும். அது ஜனநாயக சக்தியாக இருந்திருந்தால் உலகம் அதை அங்கீகரிப்பது மட்டுமன்றி புலிகளையும் அங்கீகரித்திருக்கும். புரிந்துணர்வுகளுக்கு இடமளிக்காது ஆயுத்தால் பிரச்சனைகளை சிக்கல்களை கையாள வெளிக்கிட்டதன் முட்டாள் தனத்தை புலிகள் இன்று நங்கு உணர்ந்திருப்பர்.

ஆயுதம் தேவைதான். அதை உலக நியதிகளுக்குள் பாவித்திருக்க வேண்டும். அது துரோகிகள் என்று வேண்டாதவர்கள் எல்லோருக்கும் எதிராக திரும்பியதாலே இந்த விளைவு. ராஜீவ் காந்தியின் விடயத்தில் புலிகள் சம்பந்தப்பட்டார்களோ இல்லையோ அவர் இலங்கைக்கு தனது படைகளை அனுப்பி அப்பாவி மக்களைக் கொன்ற போது தண்டனை வழங்கி இருப்பின் அது நியாயம். ஆனால் இந்தியப்படைகள் விலகிப் போனபின் ராஜீவ் காந்தி விட்ட தவறுகளைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் வழங்கப்பட்ட தண்டனை கூட தவறான முடிவுதான்.

இப்படி புலிகள் தாங்களா மக்களின் அபிப்பிராயத்துக்கு இடமளிக்காது செய்த ஆயுதப் பாவனைகள் தான் இன்று அவர்களை சர்வதேச பாதுக்காப்புச் சதி வலைக்குள் சிக்க வைத்து சொந்த மக்களை சிங்களம் கொன்றொழிக்க கண்முன்னால சம்பவங்கள் நடக்க வெறும் அறிக்கைகளை மட்டும் சமர்பித்து சர்வதேசத்துக்காக போராட வேண்டிய நிலையை மக்கள் போராட்ட சக்திகளாக இருந்த புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைத் தேடித் தருகுதோ இல்லையோ மக்களை கொன்றொழித்து நிலங்களை ஆக்கிரமிக்க சிங்கள அரசுக்கு உதவப் போகுது. இந்த இடத்தில் புலிகளின் கடந்த காலத் தவறுகள் மீட்டப்படுவதும், அவை தந்த பாதிப்புக்களை உணர்வதும் அவசியம்.

இது புலிகளைக் குறை சொல்ல என்று சொல்லேல்ல. புலிகளின் இருப்பு தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக அமைய வேண்டின் புலிகளின் நடவடிக்கைகள் வெறும் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதாக மட்டுமன்றி மக்களையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் திருப்தி செய்ய வேண்டும். இன்றேல் டக்கிளசும் சங்கரியும் புலிகளை விலத்தி மக்களை நோக்கி வர அரசு வகை செய்து கொடுக்கும். அவர்கள் ஜனநாயகவாதிகளாக தோற்றமளிப்பினும் சிங்கள அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால் அவர்களை தமிழ்மக்களும் முழுமையாக நம்ப முடியாது. எனவே புலிகள் வெறும் அறிக்கைகளை மட்டும் தந்திட்டு இருக்காமல் மக்களைப் பாதுகாப்பதோடு தமது தவறுகளையும் திருத்தி போராட்டத்தை பல முனைகளூடு நகர்த்த வேண்டும். தனித் தலைமை இருக்கலாம். ஆனால் புலிகளே தனித்து எல்லாம் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி புலிகள் தங்களின் ஆதரவோடு மற்றவர்களையும் ஜனநாயக வழியில் சர்வதேச அங்கீகார வழிமுறைகளில் மக்களுக்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

இது சாத்தியப்படுமா தமிழ்மக்களின் துயரம் தீருமா கனவுகளோடு வீழ்ந்த போராளிகளின் கனவுதான் பலிக்குமா. இல்ல எதிரியிடம் மண்டியிடுவதுதான் நடக்குமா சர்வதேசத்துக்குப் பயந்து.

Anonymous said...

சர்வதேசமென்பது என்ன? தனது நலம்சார்ந்து பேசக்கூடியது. வல்லவன் வகுத்ததுதானே வாய்கால். ஈராக்மீது படை எடுக்ககூடாது என்று ஜக்கிய நாடுகள் கூறியது போது அது கேட்டதா? ஜக்கிய நாடுகள் சபையின் பேச்சுக்கே இவ்வளவுதான் மதிப்பு. படை வலு கூடும் போது எவர்பேச்சும் எடுபடாது, மூதூரை பிடித்த போது சர்வதேசம் கூறியது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து நடக்கும் படி தமது பழைய எல்லைக்கோடுகளிற்கு மீழும்படி. புலிகள் மீண்டார்கள்.இப்போது சம்பூரை ராணுவம் பிடித்திருக்கிறது இப்பொது காய் சர்வதேசத்தின் பக்கம் நகர்த்தப்பட்டிருக்கிறது. பதில் எப்படி இருக்கும் என்பதுதான் கேள்வி. ராணுவம் மீழுமா? அல்லது புலிகள் போரை ஆரம்பிப்பதற்கு அதுவே மூலகாரணமாக அமையுமா? புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான், பாச்லின் போது மீட்கப்படும் பிரதேசங்களை சர்வதேசம் கூறியவுடன் விட்டுவிட்டு வரமாலிருப்பதற்கு நால்லதொரு காரணம் கிடைக்கவேண்டும். அதற்கான காரணமாக அமையப்போவது சம்பூராகத்தான் இருக்கும். சரியான காரணம் உருவாக்கப்பட்ட பின்னர் புலியின் பாச்சலில் வீழப்போவது யாழ்குடாநாடா? அல்லது திருமலை துறைமுகமா? இதுவே எனது அனுமானம்.

Anonymous said...

நீங்கள் அனுமானிப்பது போலவே எல்லோரும் அனுமானிக்கினம். இதை புலிகளை தங்கள் வலைக்குள் வீழ்த்தியுள்ள சர்வதேச சக்திகளும் நங்கு அறிவார்கள்.

அதனால் தான் அவர்களின் காய்நகர்வுகள் எல்லாம் புலிகளை மேலும் மேலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகாதபடி பார்த்துக் கொள்ளக் கூடியவகையில் புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அச்சுறுத்துவதாக அமைந்திருக்கிறது.

அமெரிக்கா கனடா வெளிப்படையாகவே புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிரா நடவடிக்கை எடுத்து மேற்குலக விசுவாசத்தை சிங்கள அரசுக்கு காட்டிவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அண்மைய கூட்டத்தில் கூட புலிகள் மீதான தடைகள் இறுக்கமாவதுடன் ஆதரவாளர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இது புலிகள் மீதான பயணத்தடை என்பது தடையாகி இன்று நாடுகடத்தும் அளவுக்கு இறுகி இருக்கிறதே அன்றி இழகினதாக அமையவில்லை.

இந்த நிலையில் மக்களின் போராளிகளின் அழிவுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கும் அரச படைகளின் நகர்வுகளை சர்வதேச சமூகம் கண்டிக்கவே இல்லை. புலிகளை மட்டும் பதில் நடவடிக்கையில் இருந்து விலகி இருக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. நங்கு திட்டமிட்டுச் செய்கிறது. இந்த நிலையில் சர்வதேசத்தின் அனுமதிக்காக புலிகள் காத்திருக்கிறார்கள் என்ற வாதத்தின் நம்பகத்தன்மையும் செயல்வடிவமும் எந்தளவுக்கு சாத்தியம்.

முன்னர் யாழ்ப்பாணத்தைப் புலிகள் நெருங்கிய போதும் சர்வதேச அழுத்தமே அவர்கள் தாக்குதல் நிறுத்தவும் பின்னர் அரச படைகள் படைவலுவை அதிகரித்து பாகிஸ்தானிடமிருந்து ஆயுதம் வாங்கி புலிகளைத் தாக்கி பின்வாங்க வைக்கவும் ஏதுவானது. அந்த நிலையிலிருந்தும் சர்வதேச சமூகம் அதாவது சர்வதேச பிராந்திய நலன்விரும்பிகள் இன்னும் புலிகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிப்பதையே கையாண்டு வருகிறார்களே தவிர புலிகள் தங்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதற்காக இறங்கி வரவில்லை. அரசின் பயங்கரவாதச் செயல்களை கண்டுகொள்ளாத இந்தச் சக்திகள் அரசின் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை கண்டுகொள்ளாத இந்தச் சக்திகள் புலிகள் மீது மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகிப்பதானது பலஸ்தீனப்போராட்டத்தில் அரபாத்தை சமாதானம் என்ற போர்வையால் மூடி இஸ்ரேலுக்கு சார்பான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குள் விழுத்தியது போன்ற ஒரு நடைமுறையையே காணக்கூடியதாக உள்ளது. அப்போது அங்கும் நோர்வேதான் அனுசரணைப் பணிபுரிந்தது. அவசரஅவசரசமாக நோபல் பரிசையும் வழங்கி அரபாத்தைக் கட்டிப் போட்டது. அதில் பலஸ்தீன மக்களுக்கு திருப்தி இல்லை என்பது தற்போதுதான் வெளிப்பட்டுள்ளது கமாஸின் வெற்றி மூலம்.

அதே நிலைதான் புலிகளுக்கும் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்போ புலிகளுக்கு உள்ள ஒரே தந்திரம் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பது. ஆனால் புலிகள் அதைச் செய்ய முனையவில்லை. புலிகள் இறுதி யுத்தம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படிப் பேசும் போது நிச்சயம் சர்வதேச சமூகம் புலிகளை அதை நோக்கி நகர விடாது. மறைமுகமாக இலங்கை அரசுக்கு சார்பாகவே இராணுவ நிலவரத்தை நிறுவ முனையும். அவர்களுக்கு எப்படியோ புலிகள் மீது அனைத்து வழிகளிலும் அழுத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே முடிந்த முடிவு.

இந்த நிலையில் புலிகள் ஒன்றில் படைகளா ஆரம்பிக்கும் படைநகர்வுகள் மூலம் படைகளை அழிக்க வேண்டும். இன்றேல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை என்று இறங்க வேண்டும். ஆனால் புலிகள் அப்படி எதுவும் செய்யாமல் நிலங்களை இழந்து வருவதுதான் மக்களை சந்தேகத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

அதுமட்டுமன்றி ஜனநாயக சக்திகளான தமிழர் கூட்டணி கூட மெளனமாக இருக்கிறது. சர்வதேச இராஜதந்திரிகளை அணுகவில்லை. வெறுமையாக தங்களின் அரசியல் நலன் நாடும் கருணாநிதி ஜெயலலிதா போன்ற சர்வதேசச் செல்வாக்கற்ற தலைவர்களை நாடிப் போவது இந்திய மத்திய அரசின் கருசணையை கவரும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கு இலங்கையில் பாகிஸ்தானின் பிரவேசம் தரவல்ல தாக்கத்தில் ஒரு சதவீதத்தைத் தனினும் கருணாநிதி போன்ற சுயநலத் தலைவர்களைச் சந்திப்பதால் கிடைக்காது. வைகோவை சந்தித்தது தவறல்ல. அது அவரின் குரலை இன்னும் வலுவாக்கும். திட்டத்தில் கருணாநிதியை இணைத்ததும் அவர் சந்திக்க நேரமில்லை என்றதும் ஜெயலலிதா ராஜபக் சவை சந்திக்க மறுத்தது போன்றாகிவிட்டது. ஆனா சந்திக்க வந்தது அவர் அடிக்கடி உச்சரிக்கும் அவரின் இரத்தத்தின் இரத்தங்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.

இப்படியான வெறும் புஸ்வானங்களை தமிழர் கூட்டணி செய்யாமல் உருப்படியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வழிவகைகளை சர்வதேச இராஜதந்திரிகளைச் சந்தித்து உருவாக்க வேண்டும்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் களச் செய்திகளுக்காக காத்திருக்காமல் புலிகளை தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய சகல வழிமுறைகளையும் கையாள சர்வதேச நகரங்களில் நின்று கோரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச தலைவர்களுக்கு புலிகள் மக்களின் தேவைகளுக்காகத்தான் போராட வேண்டி இருக்கிறது என்பதைக் காட்ட முடியும். அதைவிடுத்து இறந்து போன மக்களுக்கு அஞ்சலி செய்வதோடு மட்டும் தங்கள் கடமைகள் முடிந்ததாக மக்கள் நினைக்கக் கூடாது. புலிகளை விட இன்றைய நிலையில் இராணுவத்துக்கு எதிராக சாத்வீக வழியில் சர்வதேசத்தை கொண்டுவருவதில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் பங்களிப்பே முக்கியம். மக்களைப் பாதுகார் இல்லை சண்டையை ஆரம்பித்து நிலங்களைப் பாதுகார் என்று புலிகளைப் பார்த்து சர்வதேசமெங்கும் மக்கள் குரல் கொடுக்கும் போது புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குள் வைத்திருக்கும் சக்திகளுக்கு ஒரு அழுத்தத்தை அது கொடுக்கும்.

தமிழ் மக்களும் புலிகளும் அறிக்கைகளை செய்திகளை நம்பிக் கொண்டிராமல் வெறும் அஞ்சலி நிகழ்வுகளை நடத்திக் கொண்டிராமல் அரசின் இராணுவ சர்வதேச இராஜதந்திர நகர்வுகளை முறியடிக்கவும் சர்வதேச இராணுவ வலைக்குள் சிக்கியுள்ள புலிகளை மீட்கவும் நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்க வேண்டியதே அவசியம். இதில் கருத்து வேDறுபாடுகளுக்கு இடமளிக்காது உலகத்தமிழர் அனைவரும் தமிழ்நாட்டு தமிழ் சகோதரர்களும் ஒன்றிணைய வேண்டும்.

ஈழத்தில் நடப்பது உண்மையில் பயங்கரவாதப் பிரச்சனையல்ல. ஈழத்தமிழரின் இருப்புக்காக உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான போராட்டம். அம்மக்களின் சுய நிர்ணயத்தை வேண்டிய போராட்டம். அந்த வகையில் அதில் தர்மம் இருக்கிறது. புலிகள் தவறு செய்திருக்கலாம். ஆனால் இன்று தமிழ் மக்களை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையதுதான். காரணம் ஒரு பகுதித் தமிழ் மக்களே இன்று புலிகளாகி நிற்கின்றனர். எனி புலி எதிர்ப்பு என்பது மக்கள் எதிர்ப்பாகத்தான் முடியும். அது ஈழத்தமிழரின் இருப்பையே நாசம் பண்ணிடும்.

அந்த வகையில் உலகெங்கும் தமிழ் மக்களின் குரல் சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒலிக்கின்ற போது புலிகளை அது சர்வதேச சதி வலைகளுக்குள் இருந்து விடிவிப்பதோடு சர்வதேச சக்திகள் எம்மை நோக்கி தங்கள் ஆதரவை நல்கவும் வகை செய்யும். பலமிக்க ஒரு இனம் என்ற நிலையை தமிழினம் இன்று உலகுக்கு ஒற்றுமையால் காண்பிப்பதே ஈழத்தில் சிக்கல்களுக்கு விடை தேட உதவும்.

வெறும் துரோகிகள் பட்டம் வழங்களும் சில சில்லறை அரசியல் சுயநல சக்திகளுக்கு எதிராக அலட்டிட்டு இருப்பதுமல்ல இன்றைய அவசியம். பெரும் மக்கள் படை உலகெங்கும் இருந்து புறப்பட்டால் எந்த வல்லரசும் அதன் முன் தனது இராணுவத்தை நிறுத்த முடியாது. அதை உலகுக்கு செய்து காட்டி உலகின் அடிமைப்பட்டுள்ள மக்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர்கள் புதிய விடுதலைக்கான வழிமுறையை செயற்படுத்தட்டும். எங்கோ பிறந்து கியுப விடுதலை முதல் பல அடிமைப்பட்ட மக்களுக்காக தன்னையே செயல்வீரனாக்கி அர்பணித்த சேகுவரா போன்ற தனி மனிதர்களாக இல்லாம உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சேகுவராவாக எழுந்து செல்லுங்கள். அதுவே இன்றைய அவசியம். ஈழத்தமிழ் மக்களையும் அவர்களின் தேசத்தையும் பாதுகாத்து அவர்களை துன்பங்களில் இருந்து விடுவிக்க அதுவே சர்வதேசத்துன் கண்களைத் திறக்கும். வெறும் அறிக்கைகளும் கண்ணீர் அஞ்சலிகளும் அதைச் செய்ய பல நூறாண்டுகள் ஆகும். அதற்குள் மொத்த ஈழத்தமிழனும் இருப்பின்றி போயிடுவான் என்பதே நடைமுறை யதார்த்தம்.

இதில் டக்கிளஸ் சங்கரி ஜெயதேவன் போன்றவர்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. காற்றில் உள்ள தூசுகளுக்குப் பயந்தால் சுவாசிக்க முடியாது. அவர்கள் காலப் போக்கில் மக்களால் வடிகட்டி துடைத்தெறியப்படுவார்கள்.

எனவே எல்லோரும் இன்றே சேகுவராவின் வழியில் ஈழத்தமிழர்களுக்காக ஒருங்கிணைவோம். புதிய உலகியல் வரலாறு எழுதுவோம். செய்வோமா செய்யலாம் மனமிருந்தால் முயற்சி அமைந்தால்.

Anonymous said...

போர்நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் போது. வலிந்த தாக்குதலை நடத்தி புதிதாக நிலப்பிரதேசங்களை பிடிக்க ரானுவத்துக்கு முடியுமென்றால். அந்தமுறை புலிகளுக்கு மட்டும் முடியாதா? அதன் ஒரு ஒத்திகை வடிவம்தான் மூதூர் மீட்பு. புலிகள் பொறுமை காப்பது போராளிகளின் இழப்பின்மூலம்பிடிபடும் பிரதேசங்களை சர்வதேச ஒப்பந்ததை காட்டி சர்வதேசம் மீட்டுக்கொடுக்க ஒப்புதல் அழிக்காமையே. புலி பாய்வதுக்கு தருணம் பாத்திருக்கிறது. "ஓடுமீன் ஓட உறு மீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு". அந்த உறுமீன் யாழா? திருமலையா? அதுவே கேள்வி?

Anonymous said...

If every Tamil man sends his concern over the Sri Lanka government's unjustifiable activities against innocent Tamils to the UN and such other associations by whatever media, then, the world community will understand the real Sri Lankan Tamils'thirst!