Sunday, September 24, 2006

யாழ்பாணத்தில் பட்டினி சாவு.

பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர்
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.
அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத் துரத்திப்பிடித்தனர்.
பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.
இதனையடுத்து திருடனென நினைத்து அவரைப் பிடித்தவர்கள் உடனடியாகவே அவரை விட்டுவிட்டனர்.
இவ்வாறு வெளியே வராத பல்வேறு சம்பவங்கள் குடாநாட்டில் தினமும் இடம்பெற்றுவருகின்றன.
பசிக்கொடுமை தாங்காது தொழிலுமின்றி உணவுப் பொருட்களையும் பெறமுடியாது வாடும் மக்கள் தவறான வழிகளை நாடிச் செல்வதும் இங்கு அதிகரித்து வருகின்றது.
பசிக்கொடுமை தாங்காது குடும்பத்துடன் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவமும் வடமராட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.
நன்றி>தினக்குரல்.

6 comments:

Chandravathanaa said...

பசியின் கொடுமை
பரிதாபம்

Anonymous said...

இந்தியா, முன்னமாதிரி, விமானமூலம் உணவு போடலாம், போல சொல்லி போராடலாம், ஆனா பயம் எங்க முன்னாடி உணவு போட்ட ராஜிவை கொன்னமாதிரி... உணவு போட்டா வனை கொன்னுடுவஙகளோன்னு ஒரு பயம்தான்.....

இப்போத்தைக்கு ஒண்ணுக்கும் உதவாத ஆழ்ந்த அனுதாபம் தான் கொடுக்க முடியும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

Hi anonymous.

Didn't the Peace keeping forces sent by Raajeeve kill many innocent tamils and rape many tamil women? I think starving to death is better than getting killed by Indian Peace keeping forces(Innocent People killing forces)

Anonymous said...

TO : "Anonymous 10:02 AM"
உதவி செய்யாவிட்டாலும் பறுவாய் இல்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் எல்லாம் தன்பாட்டில் செரிவந்திரும்! இனிசாப்பாட்ட போட்டாலும் சனம் ஏன் என்றும் திரும்பிப்பாக்காதுகள், சாப்பாடு போட்டுட்டு பிறகு என்ன போடுவினம் என்று சனங்களுக்கு ஏற்கனமே தெரியும்மங்கே! வாலை சுத்திவெச்சிக்கிட்டு உங்களுடைய வேலையைப்பாருங்கோ... பெரியண்ன!!!

சீனு said...

ஈழப்போருக்கு நிதியுதவி செய்யும் NRI தமிழர்கள் ஏன் இதற்கு ஒரு அமைப்பை நிறுவி மனிதாபிமான அடிப்படையில் பசியையாவது போக்க உதவக்கூடாது (அல்லது அப்படியான அமைப்புகள் உள்ளனவா?).

ஈழபாரதி said...

At 4:51 AM, சீனு said...
ஈழப்போருக்கு நிதியுதவி செய்யும் NRI தமிழர்கள் ஏன் இதற்கு ஒரு அமைப்பை நிறுவி மனிதாபிமான அடிப்படையில் பசியையாவது போக்க உதவக்கூடாது (அல்லது அப்படியான அமைப்புகள் உள்ளனவா?).

அந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், தமிழர்புனர்வாழ்வுகழகம், இது முழுவதுமே புலம்பெயர் வாழ்மக்களின் வேர்வையில் இயங்கும் அமைப்பு, பல இடர் நிறைந்த காலத்திலும்,சுனாமிகாலத்திலும் அரிய பணிகளை செய்திருக்கிறது, செய்துகொண்டுவருகிறது. இது இப்போது உலகெங்கும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இயங்குகிறது, அதனது வங்கி கணக்குகளைதான் சிறீலங்கா அரசு இப்போது மூடியிருக்கிறது, யாழ்வங்கிகளில் பணம் இருந்தாலும், உணவை வாங்கி கொடுக்க உணவு இருக்கவேண்டும், தமிழருக்கு உணவை அனுப்ப மறுக்கும் அரசு, அதன் செயற்பாட்டை ராணுவ காட்டுபாட்டு பிரதேசத்தில் அனுமதிக்குமா?