Friday, September 08, 2006

இலங்கைக்குள் ஜக்கிய நாடுகள் சபை.

நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு குழு இலங்கையில் ஏற்படுத்தப்படவேண்டும் - சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஓஸ்டன்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என நீதிக்கு புறம்பான வகையில் நடத்தப்படும் கொலைகளை கண்காணிக்கும் ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஓஸ்டன் தெரிவித்தார். பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையின் தற்போதைய நிலைமையில் முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றது என்று நான் உணர்கின்றேன். கடந்த காலங்க ளில் காணாமல் போன சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்கு ழுவின் செயற்பாடுகள் கைவிடப்பட்டமை மிகவும் கவலையளிக்கின்றது. நிபுணத்துவமிக்க விசாரணைகள் தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டமை மிகவும் ஆரோக்கியமான தல்ல.

தற்போதைய நிலைமையில் பல முக்கியமான கொலைகள் குறித்த விசாரணைகளில் அரசாங்கம் செயற்பாட்டு திறனுடன் செயற்படவில்லை என்று நான் கருதுகிறேன். சம்பவங்கள் தொடர்பான வலுவான புலன்விசாரணைகளை நடத்த பொலிஸார் தவறிவிட்டனர். இந்நிலைமை பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கொலைகளுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் சீரழிவு நிலைமைகள் தொடர்ந்து வருவதால் அது நாட்டின் ஒட்டுமொத்த சமூகத் திற்கே அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த விடயங்களில் செயற்றிறன் மிக்க புலன் விசாரணைகள் அவசியம். இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் குறைந்தபட்ச விடயமாக மனித உரிமை காரியாலயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது சிறந்த முயற்சி. ஆனால் அது ஒழுங்காக செயற்படுத்தப்படவேண்டும். புலிகள் கொலைகளை கண்டிக்க ஆரம்பிக்க வேண்டும். மறுப்புகூறினால் மட்டும் கூடாது.

பொதுமக்கள் கொல்லப்படுவது மனித நேயங்களுக்கு எதிரான குற்றமாகும். எவர் இதனைச்செய்தாலும் அது மனித நேயத்திற்கு எதிரான போர்குற்றமாக கருதப்படும்.

மோதல்களில் எவர் முன்னுரிமை பெற விரும்பினாலும் அவர்கள் மனித உரிமைகள் தொடர்பான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும். பிராந்தியத்தை தமது கட்டுப் பாட்டில் வைத்திருப்பது என்பது எந்தவித நன்மையையும் தரப்போ வதில்லை. உள்ளூர் சமூகத்தினர் உணர்வுகளை மதித்தாகவேண்டும். இருதரப்பும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்.

புலிகள் குறித்த விடயத்தில் நம்பகத்தன்மையில் பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. புலிகள் நம்பகத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும். எனவே மனித உரிமைகளை முக்கியமானதென கருத ஆரம்பிப்பதையும் முக்கியமற்றதான கொலைகளை நிறுத்துவதும் விடுதலைப் புலிகளை சார்ந்ததாகும்.

கருணா அல்லது ஏனைய குழுக்களின் பேரில் இலங்கையில் நடக்கும் அனைத்தையும் தடுக்கவேண்டிய அரசாங்கத்தின் சக்தி குறித்து மிகைப்படுத்திக் கூற நான் விரும்பவில்லை. கருணா குழுவை அரசாங்கம் கண்டனம் செய்திருப்பது மற்றும் அதன் நடவடிக்கைகளில் இராணுவத்திற்கு தொடர்புகள் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் அதிகார பூர்வமாக கூறியிருக்கின்றமை ஆகிய இரண்டும் யதார்த்தமாக வெளிப்படுத்தவேண்டும். கருணா அணியுடன் ஒத்துழைப்பதில்லை என்ற விதியை இராணுவம் கடைப் பிடிப்பதாக கூறப்படுவதில் எனக்கு திருப்தி இல்லை.

மோதல்களின் போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது இருதரப்பினாலும் உறுதிப்படுத்தப் படல்வேண்டும். முதலில் மோதலை தீர்ப்போம். பின்பு மனித உரிமைகளை மேம்படுத்துவோம் என்று கூறப்படுவது தவறானதாகும். இருதரப்பும் செயற்படும் விதத்திலே
நன்றி>புதினம்.

No comments: