Friday, June 01, 2007

வடக்கில் படை நடவடிக்கைகளுக்குப் படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம்!!!

யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் நிர்வாகப் பகுதிகள் நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளுக்கு சிறீலங்காப் படைகள் தாயராகிவிட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மராட்சி மற்றும் நாகர்கோவில் கிழக்கு முன்னரங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி எந்நேரமும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரச படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படை நடவடிக்கைக்கான கட்டளை கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து எந்நேரமும் வரலாம் எனவும் படையினரிர் எதிர்பாத்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

படைநவடிக்கைகான அனைத்து படை நகர்த்தல்களும் பின்தள வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு நிறைவு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படையினர் மற்றும் படைத்தளபாடங்கள் முன்னகர்த்தப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் படுகாயமடையும் படையினருக்கான மருத்துவத்தை வழங்கும் அணிகள், காவலரண்கள் மற்றும் காப்பரண்களை அமைக்கும் அணிகள் என பின்தள ஏற்பாடுளுக்கான அணிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இவ்வாறான பாரிய படைநடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொள்ளத் தாயாராக இருந்தவேளை கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியால் படைநவடிக்கை பிற்போடப்பட்டிருந்தது.

யாழ்குடாநாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீவகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படை நடவடிக்கையில் ஈடுபடும் வேளை விடுலைப் புலிகள் தீவகப் பகுதிகள் மீது தாக்குலை நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக பண்ணை வீதி, புங்குடுதீவு, குறிகட்டுவான் வீதி, மண்டைதீவு, வேலணை போன்ற தீவகப் பகுதிகள் மற்றும் தீவகத்திற்குச் செல்லும் பாதைகள் அனைத்து பாதுகாப்புப் பலப்படுத்ததப்பட்டுள்ளன.

ஏற்கனவே முகமாலை, நாகர்கோவில், மன்னார், வனியா, மணலாறு என அனைத்து பகுதிகளாலும் வன்னிப் பகுதியை ஆக்கிரமிக்க பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள படையினர் திட்டமிட்டிருந்தமை இங்கே குறிப்பிடக்கூடியதாகும்.
நன்றி>பதிவு.

No comments: