கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றம்
சிறிலங்கா தலைநகரான கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர்.
வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர்.
அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர்.
சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மக்கள் கண்காணிப்புப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் மேலிடத்து உத்தரவு என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழீழப் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வரும் தமிழர்கள் இனி தங்கக்கூடாது என்கிற வகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மருதானை, புறக்கோட்டை ஆகிய இடங்களில் விடுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றக்கூடும் என்றும் கொழும்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களை வவுனியாவில் இறக்கிவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புபட்ட செய்தி: கொழும்பு விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை 12 மணித்தியாலத்துக்குள் வெளியேற்ற உத்தரவு
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இறுதிப்போருக்கான ஆயத்தமாக இதை எடுத்துக்கொள்லலாமா?
Post a Comment