Saturday, June 02, 2007

எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை!!!

இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் என்பதனையே அரசு பார்க்கவேண்டும்.

இந்தியா எமது நெருங்கிய நண்பன். எனவே எமக்கு இடையிலான உறவுகளை தக்கவைப்பது முக்கியமானது. ஆனால் எமக்கு தேவையான ஆயுதங்களை எமது படையினரின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நாடுகளிடம் இருந்தே நாம் பெறுவோம். அதற்கான முடிவை சிறிலங்கா அரசே எடுக்கும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: