Sunday, June 10, 2007

அடிபணிந்தது சிங்களம்!!!

சிறீலங்கா பிரதமர் தமிழ் பொதுமக்களை பலவந்தமாக நாடுகடத்தியமைக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த வியாழக்கிழமை அதிகாலை தமிழ் பொதுமக்களை பலவந்தமாக கொழும்பு தங்ககங்களில் இருந்து நாடுகடத்தியமைக்கு அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதேவேளை சிறீலங்கா காவல்துறைமா விக்ரர் பெரேரா அதிபர் இவ்வாறு அப்பாவித் தமிழ்மக்கள் வெளியேற்றியது சரிஎனவும் கொழும்பு நகரில் 6 50 000 பொதுமக்களை பாதுகாப்பதற்கும் இது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்கா ஜனாதிபதி இதுதொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் இதுதொடர்பில் அறிக்கை சமர்பிக்கும்படியும் கோரியிருந்தார்.
நன்றி>பதிவு

தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம்


சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.


கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு.

அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன்.

வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எங்கும் வசிக்க உரிமை உண்டு என்பதை தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 376 பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இத்தகைய நடவடிக்கைகளை இப்படி அணுகக்கூடாது. சட்ட ரீதியாக அணுக வாய்ப்புக்கள் உண்டு.

கொழும்பிலிருந்து தமிழர்கள் விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் காலையில் அப்படிக் கூறியிருக்கிறார். நான் பிற்பகலில் கூறுவதுதான் அரசாங்கத்தின் நிலை. இதுவே இறுதி. தவறு நடந்துள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தின் சார்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் கோருகிறோம்.

வீதித் தடைகள், சோதனைகளால் தலைநகர் கொழும்பில் மக்கள் பாரிய அவதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க அந்நடவடிக்கைகள் அவசியமாகும்.

ஒரு ட்றக் வாகனத்தில் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கடந்த வாரம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஒரு ட்றக்கில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து இருந்தால் கொழும்பின் அரைப்பகுதி நாசமாகியிருக்கும். அதே அளவிலான இரண்டாவது ட்றக்கும் இருப்பதாக கூறப்படுகிறது என்றார் அவர்.

மேலும் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த அரசாங்கத்தில் உள்ள நபரின் பெயரை தான் வெளியிட விரும்பவில்லை என்றும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

நன்றி>புதினம்

1 comment:

Anonymous said...

http://thamilar.blogspot.com/2007/06/blog-post_261.html


சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்।

மன்னிப்பு எல்லாம் வேண்டாம். உங்கள் நாட்டில், நாங்கள் வாழ உங்களுக்கு விருப்பம் இல்லை, நாங்கள் எங்கள் நாட்டுக்கு செல்கிறோம்.

நிமிசத்துக்கு நிமிசம் மாறி, மாறி அறிக்கை விடும் நீங்கள் முதலில் ஒரு முடிவிற்கு வாருங்கள். இன்னும் சில நிமிடங்களில் ரம்புக்கவெல்ல ஒன்னு சொல்ல போறார். அப்புறம் மகிந்த, பொகித் ஒன்னு விடுவார்। இவைகளில் எந்த சம்பந்தமும் இருக்காது.

யோசிக்கலாம், மன்னிப்பு ஏற்பதா, இல்லையா என்று, உங்கள் அனைவரின் அறிக்கை வெளிவரவும்.


கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு।

தவறே இல்லை, இந்த உலகமே கண்டன அறிக்கை விடும் வரை. ஆனால் உலக நாடுகளின் கண்டன அறிக்கை தமிழீழம் ஸ்ரீலங்காவின் ஒரு பகுதி , அதனால் தமிழர்களை அனுப்ப கூடாது என்று அல்ல.

எந்த ஒரு நாடும், எந்த ஒரு இனத்தையும் இப்படி நாடு கடத்தியது இல்லை.


அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன்.

வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எங்கும் வசிக்க உரிமை உண்டு என்பதை தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

ஆனால் சிங்கள மக்களுடன் சேர்ந்து இருக்காதீர்கள். அது குண்டு போட தடையாக இருக்கும்

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 376 பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது।

ஈட்டுத் தொகை யாக கேட்பது, தமிழீழம் தனி நாடு தயவு செய்து அங்கிருந்து காலி பண்ணுங்கள். குண்டு போடுவதை நிறுத்த்துங்கள்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இத்தகைய நடவடிக்கைகளை இப்படி அணுகக்கூடாது. சட்ட ரீதியாக அணுக வாய்ப்புக்கள் உண்டு.

கொழும்பிலிருந்து தமிழர்கள் விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் காலையில் அப்படிக் கூறியிருக்கிறார். நான் பிற்பகலில் கூறுவதுதான் அரசாங்கத்தின் நிலை. இதுவே இறுதி. தவறு நடந்துள்ளதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தின் சார்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் கோருகிறோம்.

வீதித் தடைகள், சோதனைகளால் தலைநகர் கொழும்பில் மக்கள் பாரிய அவதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க அந்நடவடிக்கைகள் அவசியமாகும்.

ஒரு டிறக் வாகனத்தில் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கடந்த வாரம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்। அந்த ஒரு டிறக்கில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து இருந்தால் கொழும்பின் அரைப்பகுதி நாசமாகி யிருக்கும். அதே அளவிலான இரண்டாவது டிரக்கும் இருப்பதாக கூறப்படுகிறது என்றார் அவர்.

வட, கிழக்கு முழுவதும் அழித்த உங்களுக்கு, தமிழ் மக்களை அழிக்க வேறு வழி இல்லையா

இந்நடவடிக்கைக்கு காரணமாக இருந்த அரசாங்கத்தில் நபரின் பெயரின் வெளியிட விரும்பவில்லை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்।

அப்ப மகிந்த மேல் விசாரணை ஆரம்பிச்சாச்சா?