Wednesday, June 06, 2007

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை: ஸ்கொர்ட்லாந்து யார்ட் காவல்துறை விசாரணைக்கு கோரிக்கை!!!

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக ஸ்கொர்ட்லாந்து யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


மகிந்தவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தினர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னடி, செஞ்சிலுவைச் சங்க இயக்குநர் உள்ளிட்டோர் மகிந்தவை சந்தித்தனர்.

இருப்பினும் சிறிலங்காவிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் விலகுவது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் விக்னடி தெரிவித்தார்.

மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட 10 மாதங்களுக்குப் பின்னர் 2 செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை விவாதம் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்க இயக்குநர் நெவில நாணயக்கார, இந்தப் படுகொலை வழக்கில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுப்போம் என்றார்.

குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இது மிகவும் கடினமான பணி என்றும் அவர் கூறினார்.
நன்றி>புதினம்.

No comments: