Tuesday, June 26, 2007

சிறிலங்காவும் சர்வதேச சமூகமும்.

தேசம், தேசிய அரசு, தேசியவாதம் என்பன, உளவியல் ரீதியான ஒரு விடயம், தனித்தொரு குழு மக்களால் ஒருமித்து உய்த்துணரப்படும் போது, உருவாகும் தோற்ற நிலைகளாகும். பற்றுணர்வும், அடையாள உணர்வும் இயல்பாகவும் தானாகவும் எழும் நிலை இது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் புவியியல் ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் கொடுக்க முயலும் எவரேனும், அந்த நாட்டு மக்களின் எந்தவொரு பகுதியினரின் மீதும் அவர்களின் விருப்புக்கு எதிராக, அவர்கள்மேல் தேசியவாதத்தைத் திணிக்கமுடியாது.


இவ்வாறு உத்தரவாதம் கொடுப்பது ஒருவேளை ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பத்தில் அர்த்தமுள்ளதாக அமையலாம். ஆனால் அந்த நாட்டினுள், சுதந்திரத்துக்கான ஒரு உண்மையான போராட்டம் நிகழ்கின்ற வேளையில் இந்த உத்தரவாதம் அர்த்தமற்றதாகின்றது.

தாம் எந்த அரசின் கீழ் வாழவேண்டும் என்பதைத் தேர்வு செய்கின்ற உரிமை அந்த மக்களுக்கே உண்டு என்ற கோட்பாடு, 1941 ஆம் ஆண்டு, உலகப்போரின் பின்னதாக அமையவிருக்கும் உலகு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற அத்திலாந்திக் உடன்படிக்கையின் திறவுகோல்களுள் ஒன்று. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேச்சிலும், அமெரிக்க அரச தலைவர் பிராங்ளின் றூஸ்வெல்டும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

ஒரு தேசிய அரசு என்ற அளவீட்டில் இன்று சிறிலங்கா ஒரு பரிதாபமான தோல்வியின் அடையாளமாக விளங்குகின்றது. இத்தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள், இந் நாட்டின் சிங்கள, தமிழ் மக்கள், குடியேற்றவாதத்தின் பெறுபேறாக, அவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியவாதக் கருத்துருவைப் புரிந்துகொண்ட முறையினாலும், பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு அடிப்படைகளினாலும், உருவானவை. ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு இலங்கையைப் பரிசீலித்துப் பார்த்தது பிரித்தானிய குடியேற்றவாத அரசேயாகும். 1838 இலிருந்து 1945 வரை, சமஷ்டி முறையை அறிமுகப்படுத்தும் அபிப்பிராயங்களைக் கருத்திலெடுக்காமல், கொண்டுவரப்பட்ட ஐந்து குடியேற்றவாத அரசியலமைப்புக்கள், பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தவே உதவின. இலங்கையில் அரசியல் பிரிவினையின் தோற்றுவாய் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழமை கொண்டது.

இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர், இலங்கையில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும்; துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒருவேளை இந்தியா தலையிடுமோ என்பதே சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் பிரதான அச்சமாக இருந்தது. இந்தியாவையே தமது இரட்சகனாக தமிழரின் எல்லாப் பகுதியினரும் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. சிங்கள அரசியல்வாதிகள், இந்தியாவை ஏமாற்றுவதற்காகவோ அல்லது இந்தியாவை இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சனையில் தலையிடாதபடி தூரத்தே வைத்திருப்பதற்காகவோ, அணிசேரா நாடுகள் என்ற அமைப்பில் பங்குபற்றுதல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல் என்ற சர்வதேச அரங்கின் துருப்புச் சீட்டுக்களை மிகத் திறமையாகவே கையாண்டனர். இதற்குப் பலியாகிய ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், தமது சொந்த நாட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களையே காவுகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்திரா காந்தியே தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்த முதலாவது இந்தியத் தலைவராகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிநாட்டுக் கொள்கைள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஓரளவுக்கு, சிங்கள அரசியல்வாதிகளின் ஏமாற்று நடவடிக்கைகளின் பங்களிப்புடன், ராஜீவ் காந்தி அரசு இந்த விடயத்தைத் தவறான முறையில் கையாண்டதனால், தென்னாசியப் பிராந்தியத்திற்கு உள்ளேயே இப் பிரச்சனையைத் தீர்க்கின்ற சாத்தியக்கூறுகள் பாழ்பட்டுப் போயின. தென்னாசியப் பிராந்தியத்தின் பொலிசுக்காரனாக இருக்கக்கூடிய நிலைமை இந்தியாவுக்கு இப்போது இல்லை.

சர்வதேசச் சமூகம் என்ற போர்வையில், சிறிலங்காவின் பிரச்சனைகளுள் சக்திமிக்க நாடுகள் நுழைந்துள்ளன என்பது இப்போ இரகசியமான சங்கதியல்ல. கணிசமான நிதி உதவிகளைச் செய்தும், உள்நாட்டு சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்லியும், ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற இருவரது மனித உரிமை மீறல்களையும் ஒரே தராசிலிட்டு நோக்கியும், இந்த வல்லரசுகள், தவறிழைத்துக் கொண்டே நிலைகுலையும் அரசு ஒன்றின் புவியியல் ஒருமைப்பாட்டுக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

சிறிலங்காவின் பிரச்சனையில் இந்த வல்லரசுகளினால் கைக்கொள்ளப்படும் அணுகுமுறை, ஆரம்பத்திலிருந்தே, சர்வதேசச்சமூகத்தின் நடுநிலைத் தன்மையையும், நோக்கத்தையும் தீவிர சந்தேகத்துக்கு உள்ளாக்கின்றன.

சர்வதேச சமூகம் என்ற நாமம், ஒடுக்குகிறவர்களின் அணிதிரள்வை மறைக்கப் பயன்படும் ஒரு புகைத்திரையா? தேசிய அரசு என்ற, காலாவதியாகிப்போன, கருத்துருவாக்கத்தின் மயக்கம் தீராத நிலையைத் தெளியவைக்கும் அளவுக்கு சர்வதேச சமூகத்துக்கு உண்மையாகவே வல்லமை உள்ளதா? அல்லது, பலவீனமானவர்களை வெருட்டி அடிபணிய வைக்கும் ஒரு முயற்சிதானா? இன அழிப்பை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கின்றதா? சுதந்திரத்துக்கான போராட்டத்தை காலத்துக்குப் பொருந்தாத ஒரு கருத்துருவாக்கம் என அது கருதுகின்றதா? சுதந்திரத்துக்கான ஒரு போர் நிகழ்ந்திராவிடின், சர்வதேசச்சமூகத்தின் முதன்மை அங்கத்தவர் ஒருவர் இன்று இருந்திருக்க மாட்டார். ஒரு சில சுதந்திரப் போராட்டங்களை ஆதரிப்பதும் ஏனையவற்றை நிராகரிப்பதுமாக சர்வதேசச்சமூகம் இரட்டை நாடகம் ஆடுகின்றதா? இன்றைய சிறிலங்கா அரசு தன்னையும், தன் நாட்டின் வளங்களையும் வாரிக்கொடுக்க ஆயத்தமாக இருப்பதால்தான், ஒரு ஒன்றுபட்ட சிறிலங்காவுக்கு அது உத்தரவாதம் அளிக்கின்றதா? சாமுவேல் ஹன்டிங்டனின் சிந்தனைகளை பின்பற்றுவோரால் அமுல்படுத்தப்படும் ஒரு நவீன குடியேற்றவாதக் காலகட்டத்தினுள் நாம் பிரவேசிக்கின்றோமா? தற்போது ஊடகத்துறையில் அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள் இவையாகும்.

"சர்வதேச சமூகம்" என்பது, பின்பனிப்போர் காலத்தில், அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு மந்திரம் போலாகிவிட்டது. உலகின் ஒரு பகுதியில், அதாவது பழைய தேசங்களும், புதிய தேசங்களும் உதித்த அதே இடத்தில் (மேற்குலகில்), நாம் இன்று காண்பது, புதிய வரைவிலக்கணத்தைக் கொண்டதொரு தேசியவாதமாகும். உலகின் இப்பகுதியில் ஓங்கி ஒலிக்கும் பதங்கள், பின்நவீனத்துவம், தகர்ப்புவாதம், பண்பாட்டு அடையாளம், பண்பாட்டுப் பன்மைத்துவம், தனது சொந்த வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம் என்பனவாகும். ஆனால் உலகின் இன்னுமோர் பகுதியில், குடியேற்றவாதத்தின் எச்சமாய், பன்மைத்துவத்துக்கு மதிப்பளிக்காமல், தேசிய அரசின் இடிபாடுகளாய் இன்று விளங்கும் ஒரு அரசைத் தூக்கி நிறுத்த முயலும் சர்வதேச சமூகத்தை நாம் காண்கின்றோம். சர்வதேச சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பானது, தான் தொடர்பாளும் மக்கள், அவர்கள் என்னதான் எளியவர்களாகவும் இளைத்தவர்களாகவும் இருந்தாலும், தனது நம்பகத்தன்மையை அம் மக்கள் மத்தியில் நிரூபிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் மீது அந்தச் சிறுகுழு மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டால், வேறு மாற்று வழிகளை தேடிக்கொள்கின்ற வேட்கையை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம்.

சர்வதேச சமூகம் என்ற பதமே தகர்ப்புக்கு உட்படவேண்டிய ஒரு விடயமாகும். தேசிய அரசுகள் வீழ்ந்த பின்னருங்கூட, சர்வதேசம் என்ற பதத்தில் தேசம் இருக்கவே செய்கின்றது. ஒருவேளை, அப் பதம் அதிகாரத்திலுள்ள அரசுகளையும், அதிகார உலகையும் பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், இன்று அவற்றைவிடப் பிரமாண்டமான ஒன்றிருப்பது எமக்கு தெரியவருகிறது. அதுதான் உலக சமூகம். தகவல் பரிவர்த்தனைப் புரட்சியின் விளைவாய் வந்ததொரு ஆயுதத்தைத் தாங்கி நிற்கும் உலக சமூகம், யாவற்றையும் யாவரையும் சத்தமின்றி, ஆனால் பயமின்றி, கவனித்தவாறே உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் உண்மையான "பெரியண்ணன்" உலக சமூகமே.

விடுதலைப் புலிகளின் இருப்புக்கான சமூகப் பின்புலம், அந்த அமைப்பைக் காட்டிலும், ஆய்வுகளுக்கு முக்கியமானது. மிகநொந்து இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுதான் புலிகள். அதனில் ஏதாவது குறையிருப்பின் அதையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தச் சமூகமே ஒழிய ஏனையோர் அல்ல. தமது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை புலிகளுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டியது ஒரு நியாயமான காரியமாகும்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கும், வேறு அமைப்புக்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கும், ஒத்த மனமுடையோர்க்கும் நேசக்கரம் நீட்டி, அவர்களுடைய பணியையும் தியாகங்களையும் அங்கீகரித்து, கசப்பான பழையதை மறந்து நடப்பதற்கு புலிகள் முன்வரவேண்டிய வேளை இது.

வெளியிலிருந்து வாடகைக்கு ஆட்களைக் கொண்டுவந்து தமிழ்த் தேசியம் என்ற இருப்பை ஒழித்துவிடலாம் என யாராவது எண்ணினால் அது அவர்களின் தவறாகும். திரு. ராஜபக்ச போன்ற ஒருவரின் அரசுடன் துணை போகும் ஒருவர் தமது செயலை எவ்வாறு எதிர்காலச் சந்ததிக்கு நியாயப்படுத்தப் போகின்றார் என்பதைக் கற்பனை செய்வதே கடினமான காரியமாகத் தோன்றுகின்றது.

புலிகளை இராணுவ நடவடிக்கையால் தோல்வியடையச் செய்ததும், தமிழர்களின் உரிமைகள் மீள அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்தில் சிறிலங்கா அரசும் அதன் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். அரசியல் தீர்வொன்றுக்கு சிங்கள மக்கள் ஒத்துக்கொள்வதற்கு, இந்த நடவடிக்கையையே மிக அவசியமானது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த பம்மாத்துப் பிரச்சாரம் வெளியுலகில் சற்று எடுபடுகிறது என்றே தோன்றுகின்றது. தமிழர் விவகாரம் என்று வரும் போது, கைதேர்ந்த சிங்கள மேல்வர்க்கத்தின் நுட்பமான ஏமாற்று, வெளியாருக்கு விளங்காத புதிய அனுபவம் கூட வாழ்வோருக்கு இது கூட விளங்கும்.

சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையை அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் தீர்க்கமுடியும் என்ற யோசனை, குடியேற்றவாத ஆட்சிக் காலத்துக் கதை ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகின்றது. பிரித்தானிய அன்னை தன் குடியேற்றநாட்டு குழந்தைக்கு ஒரு புதிய சட்டையைத் தைத்துக் கொண்டு வருகின்ற ஒவ்வொரு தடவையும், அந்தக் குழந்தை வளர்ந்துவிட்ட காரணத்தால் அந்தச் சட்டை அளவின்றிப் போய்விட்டதாம். தமிழர் விவகாரம் இன்று முழுதாக வளர்ந்த பிள்ளை. தன் சுயமுயற்சியினால் சம்பாதித்த, மரபுரீதியான தரை, கடல், வான் படைகளை கொண்டு, சிறிலங்கா அரசுக்கு இணையான அரசொன்றை நடத்தும் நிலைக்கு அது வந்திருக்கிறது. ஆனால், ராஜபக்சவோ எந்தவொரு சட்டையையும் தமிழர்களுக்குத் தரும் மனநிலையில் இல்லை. பழம் பாணியிலான கீழங்கி ஒன்றைக் கொடுத்துச் சமாளித்துவிடலாம் என அவர் எண்ணுகின்றார். அவர் தன் கழுத்தைச் சுற்றி வழமையாக அணியும் ஆடையின் அளவை ஒத்த ஒரு கோவணத்துண்டுதான் அது.

ஒன்றுபட்ட, செல்வச் செழிப்பான சிறிலங்காவை காணும் ஆசையை மனதில் வைத்திருக்கும் எவரும், செய்யவேண்டிய இன்றைய யதார்த்தம், முதலில் தமிழீழத்தை ஏற்றுக்கொள்வதும், தமிழர் தம் நிலத்தை அமைதியாக விருத்திசெய்ய விடுவதும்தான். அதற்குப்பின், சில வருடங்களிலேயே, தமிழர்களும் சிங்களவர்களும் மீண்டும் ஒன்றுபடக்கூடிய சாத்தியம் உண்டு. ஆனால் இம்முறை இந்த உறவு சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு வலுவுள்ள பந்தமாக அமையும்.

தமிழ்நெட் இணையத்தளத்தின் கண்ணோட்டப் பத்தியில் 24.06.2007 இல் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் ஒப்புநோக்கிய தமிழாக்கம்.
நன்றி>புதினம்.

Monday, June 25, 2007

தென் தமிழீழத்தில் தான் வைத்த பொறியிலேயே சிக்கப்போகும் சிங்களம்!!!

தென் தமிழீழத்தில் "நாம் வைத்த பொறியிலேயே நாம் சிக்கிக் கொண்டோம்" என்பதனை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


"தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று திங்கட்கிழமை அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படவும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் இணைத் தலைமை நாடுகள் கூடி விவாதித்தமையை நாம் வரவேற்கிறோம். இராணுவ வழித் தீர்வில் பயனேதும் இல்லை என்பதால் இருதரப்பும் பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அனைத்துலகம் உறுதியாக உள்ளது. இதனை நாம் வரவேற்கும் அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர எதுவித உறுதியான நடவடிக்கைகளையும் அனைத்துலகம் மேற்கொள்ளவில்லை என்ற தமிழ் மக்களின் கவலையையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

குறிப்பாக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை, கொடூரமான மனித உரிமை மீறல்கள். பாரிய மனித அவலங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர எதுவுமே செய்யப்படவில்லை. இணைத் தலைமை நாடுகள் கூட ஏன் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது? சில நாடுகள் அரசியல் வழித் தீர்வுக்காக சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வரும்போது ஏன் சில நாடுகள் மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்கிறது? என்பது தமிழ் மக்களுக்கு புரியாத
புதிராக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகால உக்கிரமான ஒரு போரிலிருந்து தற்காலிகமான அமைதியை உருவாக்க யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் அனைத்துலக உதவியுடன் உருவாக்கப்பட்ட முதலாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம். அனைத்துலகமும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன.

இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு இந்த ஒப்பந்தம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் சிங்கள ஆளும் வர்க்கத்தினரது அதிகாரப் போட்டிகளால் அமைதிக்க்காக உருவாக்கப்பட்ட ஏதுவான ஒரு சூழ்நிலை சிதைக்கப்பட்டது. தங்களது நடவடிக்கைகளால் பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் குழப்பமான நிலையை உருவாக்கியதுடன் இலங்கைத் தீவை ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை எனும் முதலாவது முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அனைத்துலகத்தினரால் முன்மொழியப்பட்ட இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்ட ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பையும் நிராகரித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிர்மூலமாக்கின்னர். இத்தகைய சிங்களப் பேரினவாதத் தலைமையின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எல்லாவித நம்பிக்கையும் அழிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாதத்தின் இனப்பாகுபாட்டு செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் நீண்ட வரலாறு கொண்ட போராட்டத்தையும் அவசியமாக ஆழமாக அனைத்துலகம் ஆராய வேண்டும். அனைத்துலகமானது உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதுடன் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 100 விழுக்காடு அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தங்களது கட்சியின் கொள்கைகளை அவர்கள் எப்போதும் பின்பற்றுவதில்லை. அதிகாரத்துக்காகவும் பண பலன்களுக்காகவும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவிக்கொண்டுதான் இருக்கின்றனர். தென்னிலங்கை கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டுக்கான முயற்சிகள் என்பதும் ஒரு நாடகம்தான். இத்தகைய "முயற்சிகள்" மூலம் ஒருபோதும் தீர்வு காணப்பட முடியாது. தற்போதும் கூட அத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வர இயலவில்லை. ஒரு தீர்மானமெடுத்தாலும் அதன் பின்னர் இந்தக் கட்சிகள் ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஒப்பந்தங்களும் தீர்மானங்களும் அதிகாரத்தில் இருக்கின்றபோதானவைதான்.

அனைத்துலகத்துக்காக மிகவும் வளைந்து கொடுத்து விட்டதாகவும் சிறிலங்கா எப்போதுமே இராணுவ வழித்தீர்வில்தான் அக்கறையுள்ளதாகவும் புதியதாக பேசுகின்றனர். இது எப்போதுமே உள்ளதுதான். தனது இராணுவத்தை வலுப்படுத்திய பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒப்புக்கொள்ளாது.

மாறாக, அமைதி முயற்சிகளையும் யுத்த நிறுத்த ஒப்பந்தங்களையும் நிராகரித்துவிட்டு இராணுவ வழித் தீர்வு காணப்போவதாகக் கூறி போரில்தான் குதிக்கும். போர்க்களத்தில் பாரிய இழப்புகளைச் சந்தித்த பின்னர் வேறுவழியின்றி பேச்சுகளுக்கு ஒப்புக் கொள்ளும். சிங்கள அரசாங்கங்களின் இத்தகைய போக்குகளை அனைத்துலகம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய யுத்த நிறுத்த ஒபந்தமானது தீர்வைத் தருமெனில் இராணுவம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு சிங்கள அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டும். வரலாற்றில் ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அமைதிப் பேச்சுக்களுக்கோ அமைதி முயற்சிகளுக்கோ எப்போதும் ஒப்புக் கொண்டது இல்லை.

கடந்த 60 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காகப் போராடி வருகின்றனர். தங்களது விடுதலைப் போராட்டத்துக்காக தமிழ் மக்கள் இராணுவ வழியை தெரிவு செய்யவில்லை. 30 ஆண்டுகாலமாக தமிழர்கள் அமைதி வழியில் போராடினர். சிங்களத் தலைமையானது இந்த 30 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் திறந்த மனதுடன் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் சிங்களத் தலைமையானது இந்தப் பிரச்சினையை அணுகவில்லை. மாறாக இனப்படுகொலை- இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு தங்களது தாயகப் பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாரிய மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுவே எமது விடுதலைப் போராட்டம் பிறப்பதற்குமான சூழலை உருவாக்கியது. எப்போது தங்களது அமைதி வழியிலான- ஜனநாயக ரீதியிலான போராட்டம் உடைந்து நொறுங்கியதோ- இராணுவ வன்முறையால் தமிழ் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனரோ அப்போது தங்களது தற்காப்புக்காக ஆயுதங்களை கைகளில் எடுத்தனர்.

தமிழீழ மக்களால் இந்தச் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. சிங்கள வன்முறைகளால்தான் இச்சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அனைத்துலகத்தின் பார்வையை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஈர்த்திருக்கிறது எனில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்புமிக்க இராணுவ பலத்தினால்தான். ஆகையால் தமிழ் மக்கள் தங்களது இராணுவ பலம் மற்றும் தற்காப்பை பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். சிங்களத் தலைமை இதனை புரிந்துகொண்டு அனைத்துலகத்திடம் கால அவகாசத்தைப் பெற்று அதனையே சந்தர்ப்பமாக்கிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதும் இனப்படுகொலைகளை மேற்கொள்வதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்களினது இராணுவ பலமானது சிங்கள தேசத்துக்கோ சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல- தங்களது தாயகத்தை பாதுகாப்பதற்கான தற்காப்பு பலம்தான் என்று தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்களத் தலைமை எப்போது புரிந்துகொள்கிறதோ அப்போது தமிழ் மக்கள் தாங்களும் பாதுகாப்பாக, சுதந்திரத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும் என்கிற சூழல் உருவாகும். இந்தத் தீவும் வன்முறைகளிலிருந்து விடுபட்டு அமைதியான பிரதேசமாக மாறும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இந்தத் தீவில் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக அவர்கள் உதவுகின்றனர். தங்கள் உறவுகள் பாதிக்கப்படும் போது உதவ வேண்டும் என்று கருதுவது மனிதாபிமானமும் இயற்கையானதுமாகும். இப்படியாக உதவுவதை பயங்கரவாதத்துக்கு உதவுவது என்பது உண்மையிலேயே பாரிய சோகம்தான்.

தமிழ் மக்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளின் சட்டங்களுக்கு அப்பால் ஒருபோதும் மீறிச் சென்றது இல்லை. தாங்கள் வாழுகிற நாடுகளிலிருந்து கொண்டு அரசியல் அல்லது மனிதாபிமானப் பணிகளையே செய்து வருகின்றனர். தாங்கள் வாழுகிற நாடுகளின் அரசாங்கங்கள், மக்கள் தங்களது அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றனர்.

ஆழிப்பேரலைக்குப் பின்னர், அமைதி முயற்சிகளின் போதும் இனப்படுகொலையால் தங்களது மக்களை இழந்து நின்றபோதும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஓய்வறியாது தாயக உறவுகளுக்காக பாடுபட்டுள்ளனர். இதனை பயங்கரவாதச் செயல் என்பது தமிழ் மக்களை பாதிப்பது என்பது மட்டுமல்ல- தங்களது இன வன்முறைகளை தொடர்ந்து மேற்கொள்ள சிங்களப் பேரிவனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதுமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. இடம், சூழல், நேரம் என இராணுவ உத்திகளை நாம் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிழக்கில் சிங்களப் படைகள் முன்னேறுவதும் எங்களது கடுமையான தாக்குதல்களினால் பாரிய இழப்புகளைச் சந்தித்து பின்வாங்குவதும் சிங்கள இராணுவத்துக்கு வழமையானதுதான். இதுவே கடந்த கால வரலாறு. எந்த ஒரு மக்களும் தங்களது தாயக நிலப்பரப்பை அன்னியப் படை ஆக்கிரமிப்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தாங்கள் வைத்த பொறியிலே சிக்கிக் கொண்டோம் என்பதை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்துகிறது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம்!

மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.


பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.

7 பேரின் உடல்களிலிருந்து மொத்தம் 8 துப்பாக்கிக் குண்டுகள் எடுகப்பட்டன.

சிறிலங்கா அரசாங்க பரிசோதனை நிபுணர் மருத்துவர் வைதரட்ன மற்றும் அவுஸ்திரேலியாவின் டொட் ஆகியோரின் அறிக்கைகளை ஒப்பிடுகையில் 8 துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று 5.56 கலிபர் என்று அவுஸ்திரேலிய வல்லுநர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக அனைத்துமே 7.62 கலிபர் என்று சிறிலங்கா வல்லுநர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 5.56 கலிபர் குண்டை கந்தளாய் நீதிமன்றில் மார்ச் 7 ஆம் நாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தாக்கல் செய்த சாட்சி ஆவணங்கள் பட்டியலிலிருந்தும் நீக்கிவிட்டு வேறு ஒரு வகை குண்டை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 5.56 கலிபர் குண்டுகளானது எம்-16 வகை ரைபிள்களுக்குரியன.

இந்த எம்-16 வகை ரைபிள்கள்தான் சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிரடிப்படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பயன்படுத்துவர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மற்றவர்களால் திருடப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கப்பட்டோ இருக்கலாம். 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தொடக்கத்தில் மூதூரில் எம்-16 ரைபிள்களுடன் தான் கடற்படையின் சிறப்புப் பிரிவினர் இருந்தனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் விசாரணை ஆணையமானது அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் முழு அளவிலான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Sunday, June 24, 2007

பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட பைத்தியக்காரனைப் போல இலங்கை!!!

சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது?: மூத்த ஊடகவியலாளர் சோலை.

உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை:

ஈழப் பிரச்னையில் சிங்கள இனவாத ராஜபக்ச அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கெனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது.

இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அடுக்கிக் கூறியிருக்கிறார். (இந்து நாளிதழ்: 14.06.07)

மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலை எடுக்கின்றன.

இலங்கைக்குப் பணி செய்ய வரும் ஐ.நா. நிறுவனங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் உலகம் நம்புகிறது.

இது பாரபட்சமான செயலாகும். சர்வதேச சமூகம் எங்களை மிரட்டிப் பார்க்கிறது. எங்களுடைய பிரச்சினைகள் என்ன என்று தெரியாது அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். எங்களை அவர்கள் தனிமைப்படுத்த முடியாது. எங்களுக்குப் பின்னே சார்க் நாடுகள், ஆசிய நாடுகள் இருக்கின்றன என்று அந்தப் பெரிய மனிதர் புலம்பல் புராணம் படித்திருக்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்: பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையைச் சார்ந்த பெரியவர் வந்தார். யாரோ அவருக்கு முழுக்க முழுக்க தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை என்று அந்தச் சிங்கள இனவெறித் 'தாதா' சீறிப் பாய்ந்திருக்கிறார்.

அவர் இன்னும் சொல்கிறார்: அவர்கள் எங்களைத் தனிமைப்படுத்துவதாக அச்சுறுத்துகிறார்கள். உதவிகளை நிறுத்திவிட்டார்கள். எங்களைத் தொல்லை துயரங்களுக்கு ஆட்படுத்துகிறார்கள். அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலக நாடுகள் சொல்கின்றன. ஆனால், இலங்கையில் செயல்படும் பயங்கரவாதிகளை அவர்கள் கண்டிப்பதில்லை. வேறு விதமாகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் அழுது வடிந்திருக்கிறார்.

அந்த மகாப் பெரிய மனிதர் வேறு யாருமல்ல. இலங்கை அரசின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சதான். அவர் சிங்கள அதிபர் ராஜபக்சவின் சொந்தச் சகோதரரும்கூட. இந்த இருவரும் சேர்ந்துதான் தமிழ் இனத்தையே அழிக்கின்ற அராஜகப் போரை நடத்துகிறார்கள். அதனை உலகம் அங்கீகரிக்கவில்லை. அந்த உலகம் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது. எனவே, எரிச்சல் கொண்டு ஏசல்களில் இறங்கியிருக்கிறார்கள்.

'ஈழப்' பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்க என்று இந்தியா உள்பட உலக நாடுகள் சிங்கள அரசிற்கு எடுத்துச் சொல்லிவிட்டன. இதோ! அதோ! திட்டம் தயார் என்றார் ராஜபக்ச. அதிகாரப் பகிர்வு அதோ வருகிறது, இதோ வருகிறது என்றார். இப்படிச் சொல்லி ஏழு மாதங்கள் உருண்டோடிவிட்டன.

இந்த நிலையில், அரபுத் தொலைக்காட்சிக்கு அண்மையில் ராஜபக்ச பேட்டி அளித்தார். அதிகாரப் பகிர்வு எப்போது என்று அந்தத் தொலைக்காட்சி நிருபரும் கேட்டார். சிங்கள அதிபருக்குக் கோபம் கொப்பளித்தது. ஒரு பக்கம் பிரபாகரனை எதிர்த்துப் போர் நடத்துவோம். பேச்சுவார்த்தையும் நடத்துவோம் என்றார். ஓர் உண்மை தெளிவாகிறது.

பேச்சுவார்த்தைக்கோ அதிகாரப் பகிர்விற்கோ சிங்கள அரசு தயாராக இல்லை. முடிந்தால் போர் நடத்திப் பார்ப்பது என்ற முடிவிற்கு வந்திருக்கிறது. அதே சமயத்தில், தமிழ் இனத்தையே அழிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால் அங்கே மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன. அதனை உலகம் இன்றைக்குத் தெளிவாகத் தெரிந்து கொண்டுவிட்டது. எனவே, ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. சிங்கள அரசோ, பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட பைத்தியக்காரனைப் போல் கொதிக்கிறது.

ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் என்ன செய்தார்? யாழ்ப்பாணம் செல்லும் பிரதான சாலையை மூடினார். எந்த உணவுப் பொருளும் கிடைக்காமல் பட்டினியால் பரிதவித்தனர். விலைவாசி பயங்கரமாக உயர்ந்தது. சொந்த பூமியில் அவர்கள் அநாதைகளாக்கப்பட்டனர். ஈழப் போராளிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அப்பாவித் தமிழர்கள் மீது போர் தொடுத்தனர்.

இலங்கையில் சுனாமியால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது ஈழம்தான். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக உதவிப் பொருள்களை அனுப்பின. ஆனால், அதில் ஒரே ஒரு பொட்டலம் கூட ஈழ மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது என்ன அநியாயம் என்று உதவிக்கரம் நீட்டிய நாடுகள் கேட்டன. ஈழத்திற்கு உதவுவதை சிங்கள இனவாதக் கட்சிகள் எதிர்க்கின்றன. அவற்றை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ராஜபக்சாக்கள் பொய்யுரைத்தனர். ஆமாம். அவர்கள் இன்று வரை ஈழத்து வெண்புறாக்களை வேட்டையாடுகிறார்கள். அதன் உயிருக்கு விடுதலை அளிக்கிறோம் என்கிறார்கள்.

விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்படும் பல நூறு தமிழ் இளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் சிங்கள இனவாதத்தின் கோரப்பசிக்குப் பலியாகி விட்டார்கள். இந்த சோகச் செய்திகள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அந்த அமைப்புகள் ஆதாரங்களோடு ராஜபக்ச அரசைக் கேட்கின்றன. அதற்கு என்ன பதில் தெரியுமா? அமெரிக்கா அப்படியெல்லாம் அழைத்துச் செல்லவில்லையா என்று ராஜபக்சவின் சகோதரர் கேட்கிறார். இப்படி அவர் இனப்படுகொலைக்கு நியாயம் கேட்கிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது இட்லர் என்ன செய்தான்? அவன் படையெடுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே யூதர்களைத் திரட்டினான். முதலில் அவர்களைத் தொலை தூர முகாம்களுக்கு அப்புறப்படுத்தினான்.

அந்த ஈனச் செயலை இப்போது கொழும்புத் தலைநகரில் ராஜபக்ச செய்தார். அங்குள்ள தமிழர்களைத் திரட்டி இரவோடு இரவாக 250 கிலோ மீட்டருக்கு அப்பால் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைத்தனர். இதனை உலகமே கண்டித்தது. இலங்கை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ஏன்? சிங்கள இனவாதிகள் நிரம்பிய உச்ச நியாய சபையும் கண்டித்தது.

பிறந்த மண்ணிலேயே உலவுவதற்கு இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்கிறது சிங்கள அரசு. கண்முன்னே நடமாடுகின்ற ஒவ்வொரு தமிழனும் அந்த அரசிற்குப் பிரபாகரனாகத் தெரிகிறார்கள். நடமாடும் வெடிகுண்டுகளாகத் தெரிகிறார்கள். எனவே நாட்டிற்குள்ளேயே தமிழர்களை நாடு கடத்தும் இரக்கமற்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு நமது பிரதமரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வேட்டி கட்டிய தமிழர்களை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்? விரட்டுகிறார்கள்? அவர்களுக்குப் பாதுகாப்பு வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும்தான் இருக்கிறது என்கிறார்களா? அவர்களுடைய ராஜ்யம் அங்கேதான் மலர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்களா?

இதுவரை தமிழர் குடியிருப்புக்களைத் தகனம் செய்தவர்கள் கொழும்புத் தமிழர்களைத் துரத்தியதன் மூலம் தங்கள் சிம்மாசனத்திற்கே நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் அவர்களை ஒதுக்கிவைக்கத் தொடங்கிவிட்டது. அதனால்தான் ராஜபக்சக்களும் அவரது ரத்த உறவுகளும் அசைகின்ற செடி, கொடிகளைப் பார்த்துக்கூட அச்சப்படுகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்? இலங்கைப் பிரச்சினையில் இன்றைய உலகத்தின் சலனங்கள், அசைவுகள் இந்திய அரசிற்குத் தெரியாமலா இருக்கும்.?

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தபோது, உண்மையிலேயே அதிகாரப் பகிர்விற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அடுத்து வந்த சந்திரிகா, சமஷ்டி ஆட்சிமுறை பற்றி அறிவித்தார். ஆனால், ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த பின்னர் அமைதிப் பேச்சுக்குச் சமாதி எழுப்பப்பட்டது. தமிழ் மக்களின் நடமாடும் சுதந்திரம் கூட தட்டிப் பறிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுவதே அபாயம் என்கின்றனர். போர் முனையில் ஈழப்போராளிகளை வெற்றி காண்போம் என்கின்றனர். போர் வெறி கொழுந்துவிட்டு எரிகிறது.

ஓட்டுகிறவன் சரியாக இருந்தால் குதிரை சரியாக ஓடும். ஆனால், ஓட்டுகிறவனுக்கும் போதை ஏறியிருக்கிறது. ஓடுகிற குதிரைக்கும் போதை ஏறியிருக்கிறது. ஆமாம். இனவெறி போதையில் சாரட்டு வண்டியே பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

தரைவழிப் போரை நிறுத்தி, ஈழப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சென்ற மாதம் சிங்கள இராணுவத் தளபதி கூறினார். காரணம், ஈழப்போராளிகளைக் களத்தில் நேருக்கு நேர் மோதும் ஆற்றல் சிங்களப் படையினருக்கு இல்லை. அநியாயமாக ரத்தம் சிந்த வேண்டாம் என்று ஒருவேளை அந்தத் தளபதி எண்ணியிருக்கக் கூடும்.

தரைவழிப் போரில் மட்டுமல்ல் வான்வெளிப் போரிலும், கடற்போரிலும் ஈழப் போராளிகள் வல்லமை பெற்றிருக்கிறார்கள் என்பதனை இன்றைக்கு உலகம் கண்டு கொண்டிருக்கிறது. அத்தகைய வளர்ச்சி இந்தியாவிற்கு அபாயம். ஆகவே, இந்தியா தங்கள் மீது படுத்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கள இனவாத அரசு ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது.

என்றைக்கு ராஜபக்ச மணிமுடி சூட்டிக் கொண்டாரோ, அன்றிலிருந்து ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களையும் தங்கள் குடி மக்களாகக் கருதியதில்லை. தமிழர்கள் மீது தொடுக்கும் தாக்குதலை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்றனர். அதனை உலகம் ஏற்கவில்லை.

இப்படி உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று சோலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நன்றி>புதினம்.

மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்!

ஈழத் தமிழர் பிரச்சினையில் - உளவு நிறுவனங்கள் தொடர்ந்து தலையிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அரங்கேற்றி வரும் நாடகங்களின் சில உண்மைக் காட்சிகளை, ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வழியாக அம்பலப்படுத்தி வருகிறோம். இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் இணைந்து, இந்தியக் கடற்பரப்பில் ‘கூட்டு ரோந்து’ நடத்தும் திட்டத்தை அமுல்படுத்திவிட்டால், ஈழப் போராளிகளின் கடல்வழி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தோடு - இந்திய உளவு நிறுவனங்கள் தமிழகத்தில் முகாமடித்து, தமிழகக் காவல்துறையையும் மிரட்டி, செயல்படத் துவங்கியதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். ஆனால், முற்றிலும் இவர்கள் எதிர்பாராத நிலையில், ஈழப் போராளிகள், வான் வழித் தாக்குதலைத் துவக்கியவுடன், உளவுத் துறை அதிர்ச்சியடைந்தது.

இதனால் இந்தியாவுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வருகிறார்கள். போராளிகளின் விமானத் தாக்குதல் அந்நாட்டு சிங்கள மக்களையே குறிவைக்கவில்லை. ராணுவ, பொருளாதார நிலைகளை மட்டுமே தாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்கு ஆபத்து என்று கூக்குரல் போடுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் என்பது, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் நன்றாகவே புரியும் (ஈழப் போராளிகளை தொடர்ந்து எதிர்த்து வரும் துக்ளக் பார்ப்பன ஏடு கூட - இந்த விமானத் தாக்குதலால் தமிழ் நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ ஆபத்து வரும் என்கிற கருத்தை ஏற்க முடியாது என்று எழுதியிருப்பதை நினைவூட்டுகிறோம்).

ஆனாலும் - தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகி வரும் மக்கள் ஆதரவை - திசை திருப்பிக் குழப்பிடும் முயற்சிகளில் உளவு நிறுவனங்கள், இப்போது தீவிரமாக செயல்படத் துவங்கி விட்டன. தமிழக மீனவர்கள் 5 பேரை கடந்த மார்ச் 29 ஆம் தேதி சுட்டுக் கொன்றது - விடுதலைப் புலிகளின் கடற்படையினர்தான் என்றும், அதற்கு 25 நாட்களுக்கு முன் மார்ச் 4 ஆம் தேதி மீன் பிடிக்கப் போய் திரும்பி வராத தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலைப் புலிகள்தான் சிறை பிடித்து வைத்துள்ளனர் என்றும், உளவுத் துறை பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழக காவல்துறையும் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறது. இதற்கான ஆதாரம் என்ன?

“விடுதலைப்புலிகளின் கடற்படையினரையே நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். அவர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு விட்டார்கள். அவர்கள் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்” என்கிறது தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை இயக்குனராக இருக்கும் முகர்ஜி என்ற பார்ப்பன அதிகாரி - ‘சட்டம் ஒழுங்குப் பிரச்சினை’ என்ற எல்லைகளைத் தாண்டி இப்படி எல்லாம் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குறிப்பிட்டதுபோல், சட்ட மீறலைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் கடமையே தவிர, நிகழ்ந்த சம்பவத்தில் அரசியல் யூகங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பது அல்ல.

இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் மோதல் நடந்தால், குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கு தொடருவதுதான் காவல்துறை வேலையாக இருக்க முடியுமே தவிர, கைதானவர், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரங்களைத் தேடி - அறிவிப்பது அல்ல; அதைத்தான் தமிழக காவல்துறை இயக்குனர் முகர்ஜியிலிருந்து, கப்பல்படை தளபதி வரை இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் அரசியல்கள் நோக்கம் அடங்கி இருக்கிறது என்பதை, இது அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகிறது.

நடந்த சம்பவங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தால், தமிழக காவல்துறையும், மத்திய உளவுத்துறையும் மக்களை திசை திருப்பிட, திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவே அழுத்தமான சந்தேகங்கள் எழுகின்றன.

மார்ச் 4 ஆம் தேதி கன்யாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கரை திரும்பவே இல்லை. அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக உளவுத் துறையும், காவல்துறையும் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்துவிட்டது. தமிழக மீனவர்களைப் பிடித்து தமிழர்களோடு முரண்பாட்டை வளர்க்க வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு என்ன வந்தது என்பது முதல் கேள்வி? தமிழகத் தமிழர்களின் நட்புக்கும், நேசத்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டி நிற்பவர்கள் - தமிழ் ஈழப் போராளிகள்.

தற்போது தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உளவுத் துறையில் ‘கடற்புலிகள்’ என்று சுட்டப்படுகின்ற, 6 தமிழர்களும் யார்? அவர்கள் உண்மையில் கடற்புலிகளா? அல்லது மீன் பிடிக்க வந்த ஈழத் தமிழர்களா? யார் இவர்கள்?

இவர்கள் கன்யாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், இவர்கள் பிடிபடுவதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு, கடலில் மீன்பிடிக்கப் போன 12 தமிழ்நாட்டின் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை சுட்டுக் கொன்றது, இப்போது பிடிப்பட்டவர்கள்தானா என்ற சந்தேகங்களும பத்திரிகைகளால் எழுப்பப்பட்டன.

இது பற்றி - தமிழ் நாளேடுகளான ‘தினமணி’, ‘தினத்தந்தி’யில் வெளியான செய்திகள் என்ன கூறின?

• மார்ச் மாதம் 4 ஆத் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 தமிழ்நாடு மீனவர்கள் கரை திரும்பவில்லை.

• மார்ச் 29 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 5 தமிழக மீனவர்கள் இறந்து விட்டனர். அதே படகில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி, கரை திரும்பிவிட்டனர். அப்படி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் வந்த படகில் ‘மரியா’ என்று எழுதப்பட்டிருந்தது.

• ஏப்ரல் 11 ஆம் தேதி - இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை கடலில் ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அருகே தமிழக கடல் பரப்பில் 6 ஈழத் தமிழர்களையும், 6 தமிழக மீனவர்களையும், கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீன் பிடிக்க வந்தபோது, படகு பழுதாகி, கடலில் தவித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், தங்களிடம் உதவி கேட்டபோது, அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஈழத் தமிழ் மீனவர்களின் படகில் ‘மரியா’ என்ற பெயர் காணப்பட்டதால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதே பெயர் எழுதப்பட்ட படகில் வந்தவர்கள்தான் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக, அவர்களுடன் சென்று உயிர் தப்பி வந்த மீனவர்கள் கூறியிருந்தனர்.

• இந்த நிலையில் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன், இவர்களிடம் விசாரணை நடத்தினார். ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூட்டில், உயிர் பிழைத்து கரை திரும்பிய கன்யாகுமரி மீனவர்கள், தூத்தக்குடிக்கு அழைக்கப்பட்டனர். இப்போது மரியா படகில் பிடிப்பட்டுள்ளவர்களைக் காட்டி, “இவர்கள்தான், உங்களைச் சுட்டவர்களா?” என்று கேட்டபோது, தமிழக மீனவர்கள் அவர்களைப் பார்த்து - “எங்களைச் சுட்டது இவர்கள் இல்லை” என்று கூறிவிட்டனர். அத்தோடு இந்த ‘மரியா’ படகும் - எங்களைச் சுட்டவர்கள் வந்த படகு அல்ல என்றும் தெரிவித்தனர். பிடிபட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் பெயர், ஊர்களோடு பத்திரிகைகளுக்கு செய்தி தரப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டது, பிடிபட்ட, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்ல என்று காவல்துறை திட்டவட்டமாக அறி வித்தது. கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. எல்லை தாண்டி - தமிழ் நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்பது மட்டுமே குற்றச்சாட்டு. அந்த வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்கள்; பிரச்சினை முடிந்துவிட்டது.

இதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் முகாமிட்டு, ‘கூட்டு ரோந்துக்கு’ உரிய அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு செயல்பட்டு வரும் மத்திய உளவுத் துறை, தமிழ் ஈழப் போராளிகள் மீது பழி போட்டு, தமிழ் நாட்டுக்கும், ஈழப் போராளிகளுக்கு மிடையே முரண்பாட்டை கூர்மைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்கின. இப்படிக் கருதுவதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் சுடப்பட்டது மார்ச் 29, 2007. அடுத்த நாளே - அதாவது மார்ச் 30 ஆம் தேதியே சிறிலங்கா அரசு, தமது கப்பல்படை, சுடவில்லை என்று மறுக்கிறது. அது மட்டுமல்ல, இதில் “விடுதலைபுலிகளுக்கு தொடர்பு இருக்கலாம்” என்றும், பழியை விடுதலைப்புலிகள் மீது போடுகிறது.

(The Srilanka Government said the complicity regarding the incident must be attributed to the **, March 31, ‘Daily Mirror’)

சிறீலங்கா அரசு மறுப்பு வெளியிட்ட அதே நாளில், அதே குரலை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தியாவினுடைய கப்பல் படை தலைமை அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தா, அதே மார்ச் 31-ல் அவரது பேட்டியை ‘இந்து’ நாளேடு வெளியிடுகிறது. “இதில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உண்டு என்ற கருத்தை புறக்கணித்துவிட முடியாது” என்கிறார், இந்திய கப்பல்படையின் தலைமை அதிகாரி. இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ்நாடு அரசையும் குற்றம்சாட்டுகிறார். “தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி, தமிழக மீனவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்க, தமிழ்நாடு அரசு தவறிவிட்டது” என்றும் தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.

மீனவர்கள் சுடப்பட்டது மார்ச் 29. உடனே - ஒரே நாள் இடைவெளியில் எந்த விசாரணையுமின்றி விடுதலைப்புலிகள் மீது, இந்திய கப்பல்படை அதிகாரி எப்படிப் பழி போட முடிகிறது? இப்படி யூகத்தின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை, பொறுப்புமிக்க அதிகாரி ஏன் பிரச்சார காரரைப் போல் பரப்ப வேண்டும்? சிறீலங்கா அரசின் குரலை அப்படியே ஏன் எதிரொலிக்க வேண்டும்? தமிழக அரசையும் சேர்த்து, ஏன் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்? ஆக, இதற்குப் பின்னால், திட்டமிட்ட உள்நோக்கம் ஒன்று இருக்கிறது என்ற சந்தேகம் எழத்தானே செய்கிறது?

இந்த நிலையில், அடுத்த நாளே - ஏப். முதல் தேதியன்று, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளந்திரையன், இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் என்று மறுத்து விடுகிறார்.

“தாயகத் தமிழ் உறவுகளும், ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறீலங்கா அரசும் இணைந்த இச்சம்பவத்தில் எங்களைத் தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். தாய்த் தமிழக உறவுகளும், ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே ரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும் நாடு இனபேதமின்றி தமிழ் மக்களைக் குறி வைத்துப் படுகொலை செய்கிற சிறீலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்”

- என்று அந்த அறிக்கை கூறியது. ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை விரும்பாத தீய சக்திகள், சிறீலங்கா அரசோடு இணைந்து நடத்தும் சதி என்கிறது அந்த அறிக்கை!

இதற்குப் பிறகு - இரண்டு வாரங்கள் ஓடுகின்றன. மீண்டும் ஏப்.17 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் அறிக்கை விட்டது. அடுத்த நாள் - ஏப். 18 ஆம் தேதி இலங்கை கடற்படை அதிகாரி, கமாண்டி டி.கே.பி. தசநாய்க்கே என்பவர் கொழும்பில் பத்திரிகையாளர்களைக் கூட்டி, தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ் நாட்டில், உளவுத் துறை தீவிரமாக செயல்படத் துவங்குகிறது.

ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு, மீனவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட, ஈழத் தமிழ் மீனவர்களை மீண்டும் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு சிறையிலிருந்து வெளியே எடுத்து விசாரணை நடத்துகிறது. ஏப்.20 ஆம் தேதி காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த இரு நாட்களில் ஏப்.23 இல் உளவுப் பிரிவு, விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த நான்கு நாட்களில் ஏப்.27-ல் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் தான் என்று அறிக்கை விடுகிறார். தமிழக முதலமைச்சரும் இதே அறிக்கையை சட்டசபையில் உறுதி செய்கிறார். மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இதை மறுத்துள்ளனர்.

உளவு நிறுவனமும், சிங்கள அரசும் இணைந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து போராளிகளை தனிமைப்படுத்த தயாரித்த திட்டம் - தமிழக காவல்துறை வழியாக, அமுலாக்கப்பட்டு, அதையே தமிழக முதல்வரின் அறிக்கையாகவும், சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்திற்கு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை. சிங்கள மீனவர்கள்களையே சுட்டுக் கொல்லாத விடுதலைப்புலிகள், தமிழக மீனவர்களையா சுட்டுக் கொல்லப் போகிறார்கள்?

“கடந்த காலங்களில் அப்படி எந்தத் தொந்தரவும் புலிகளிடமிருந்து வந்தது இல்லை என்பதால், இதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. நான் இது பற்றி டி.ஜி.பி., கியுபிராஞ்ச் எஸ்.பி. ஆகியோரிடம் பேசினேன். உயர் அதிகாரிகள் அறுதியிட்டுச் சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது” என்கிறார் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு அமைப்பாளர் சர்ச்சில்! (பேட்டி - குமுதம் ரிப்போர்ட்டர்)

ஈழப் போராளிகளான விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்நாடு மீனவர்களுக்கும் உள்ள நெருக்கமான உறவை, ஈழத் தமிழ் மீனவரான நாதன் தாமஸ் என்பவர் இணையதளம் ஒன்றில் (www.yarl.com)எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறிய தமிழக காவல்துறை அதிகாரியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இரணை தீவு கடல் தொழில் சங்கத்துக்கு தலைவராக இருந்தபோது நடந்த சம்பவத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்தியத் தமிழ் மீனவர்கள் எமது உடன் பிறப்புகள். 1990 ஆம் ஆண்டு ஆடி மாதம் - இரணைத் தீவு கடற்கரையில் தமிழ்நாடு மீனவர்களின் 250 படகுகள் தனித்து நின்றன. அவற்றை சிறீலங்கா அரசு தங்களது வான்கலங்களைக் கொண்டு (விமானங்கள்) அழிக்க முயற்சித்தது. அப்போது - எமது கிராமத்தில்தான், ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழ் மீனவர்களுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றினோம். அவர்களை விடுதலைப்புலிகளின் பாதுகாப்போடு தமிழகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தோம். அது மட்டுமல்ல, அச்சம்பவத்தின்போது, இலங்கை விமானப் படை தாக்குதலால் பல படகுகள் சேதமாக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் உதவியால் - அப்படகுகளை சரி செய்து மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தோம். காயமடைந்த 205க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு விடுதலைப்புலிகள் உதவியோடு, சிகிச்சைகள் வழங்கினோம். அந்த உறவு தொடர்ந்து நீடித்தது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்று எமது மக்களை, நாங்கள் இங்கு செய்த உதவிக்காக, அங்கே இந்திய மீனவர்கள், உணவு, தேவைக்கான பொருள்களை வழங்கி, நன்றாகக் கவனித்தார்கள். எங்களுக்குள் உள்ள இந்த உறவை, தமிழக காவல்துறை அதிகாரி அறிவாரா? எதற்காக, இப்போது, உண்மைகளை தலைகீழாகப் புரட்டி கூறுகிறார்? இதனால் உண்மைகளைப் புதைத்து விட்டோம் என்றோ சிங்களவன் தப்பி விட்டான் என்றோ அவர் தப்பாகக் கருதி விடக்கூடாது. அப்படி கருதினால் அது முட்டாள்தனம். எங்களது உறவுகளை சிங்கத்துக்கு (சிங்களருக்கு) காவு கொடுக்க நினைக்கிறாரா, அந்த அதிகாரி? - என்று, தனது உள்ளக் குமுறலைக் கொட்டியிருக்கிறார் அந்த மீனவர்! உண்மைகள் நீண்டகாலம் உறங்காது. அவைகள் விழித்தெழும்போது பொய்மைகள் வெளிச்சத்துக்கு வரவே செய்யும்.
நன்றி>யாழ்.காம்

Saturday, June 23, 2007

தென்னாபிரிக்க மக்கள் இலங்கை அரசைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம்.








தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏனைய அமைப்புக்களுடனும் மக்களுடனும் ஒன்றுசேர்ந்து இலங்கை அரசைக் கண்டித்து இன்று (ஆனி 23, 2007) மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தியது. இலங்கை அரசும் அதன் ஆயுதப்படைகளும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் அட்டூழியங்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார்கள். ''இலங்கை அரசே தமிழர்களைக் கொல்லாதே, தமிழர்களைப் பூண்டோடு அழிப்பதை உடனடியாக நிறுத்து, தமிழினப் படுகொலையை நிறுத்து, தமிழீழ மண்ணிலிருந்து சிங்களப் படையை விலக்கு, வடக்குகிழக்கு தமிழரின் பாரம்பரியத் தாயகம், தமிழர் தலைவன் பிரபாகரன்'' போன்ற சுலோகங்களைத் தாங்கிய பதாதைகளையும் தமிழீழத் தேசியத் தலைவரின் வண்ணப் படங்களையும் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்டப் பேரணி புளோரன்ஸ் வீதியிலுள்ள ஆசிரியர் மன்றத்தில் மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமாகி ஒன்றரை மணி நேரம் நடைப் பயணமாகச் சென்று, சற்ஸ்வேத்திலுள்ள காந்திப் பூங்காவில் முடிவுற்றது. அங்கு மும்மதத் தலைவர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதோடு, தமிழீழ மக்களுக்கான தமது உளப்பூர்வ ஆதரவையும் தெரிவித்தார்கள்.

அங்கு கூடியிருந்தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழவேந்தன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரால் தென்னாபிரிக்க மனித உரிமைகள் ஆணையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்தி கவுண்டரிடமும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சின் சார்பில் கலந்துகொண்ட பிரதி நகரத்தந்தை லோகநாதன் நாயுடுவிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
நன்றி>பதிவு.

Friday, June 22, 2007

சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை!!!




சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை என்று இலங்கைக்கு வருகை தந்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் குழு சாடியுள்ளது.

எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் வின்செண்ட் ப்ரோசெல், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ஜாக்குலின் பார்க் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்.

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரும் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினர் ஊடக சுதந்திரத்தை மீறிச் செயற்படுகின்றனர். வடக்கு - கிழக்கில் இத்தகைய பிரச்சினைகளுக்கு தமிழ் ஊடகங்கள் முகம் கொடுக்கின்றன. கொழும்பிலும் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சுபாஸ் சந்திரபோஸ் என்ற மாத இதழின் ஊடகவியலாளர
உதயன் நாளிதழின் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன
ஆகியோர் அண்மையில் கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்ட நிலையில் இன்னமும் மீட்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களை அவமதிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை அரசாங்கத் தரப்பு மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.
சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களை, விசர் பிடித்த நாய்கள் என்று விமர்சிக்கிறார்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இதர அமைச்சர்களும் ஊடகவியலாளர்களை அவமதிப்பதுடன் பகிரங்கமாக அச்சுறுத்தலும் விடுக்கின்ரனர்.

கடந்த ஒக்ரோபர் மாதம் எமது குழுவினர் இலங்கை வந்தபோது, ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இருப்பினும் அச்சுறுத்தல்கள் மற்றும் காணாமல் போதல் தொடர்பாக சிறப்பு காவல்துறை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஊடகங்களுடனான மோதல் போக்கை அதிகாரிகள் கையாள்கின்றனர். சில அமைச்சர்கள் மோசமான வார்த்தைகளால் ஊடகவியலாளர்களை விமர்சிப்பதுடன் சுய தணிக்கை செய்து கொள்ளும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

90 நாட்களாக ஒரு ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார். அரசாங்க ஊடகம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியும் ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண குடாநாட்டி தமிழ் ஊடகங்கள் அச்சிடுவதற்குரிய செய்தித்தாள் மற்றும் அச்சு மை ஆகியவற்றுக்கு போக்குவரவு கட்டுப்பாடுகளின் பெயரால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது.

அண்மையில் முன்னணி தமிழர் இணையத்தளமான "தமிழ்நெட்"டை சிறிலங்கா இணைய சேவை வழங்குநர்கள் முடக்கி வைத்தனர்.

இராணுவ நடவடிக்கைகளின் போதான பொதுமக்களின் பாதிப்பு குறித்த தரவுகளை பிரச்சனைக்குரிய பகுதிகளில் உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சேகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கீகார அடையாள அட்டை போன்றவற்றால் உள்ளுர் ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்த உள்நாட்டு வருவாய் திணைக்கள அதிகாரிகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது. சிங்கள "மௌபிம" மற்றும் "சண்டே ஸ்டாண்டர்ட்" ஊடக நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதனால் ஸ்டாண்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் குழுமத்தின் 2 நாளிதழ்கள் மூடப்பட்டன.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் எமது குழு அளித்த பரிந்துரைகள் தற்போதும் தேவையானதாக இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்.

ஊடகவியலாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நேரத்தில் வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அண்மைய சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் செல்வராஜா ரஜிவர்மன் படுகொலைகளையும் அதில் இணைக்க வேண்டும்.

11 படுகொலைகளில் 10 படுகொலைகள் நடைபெற்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைக்க வேண்டும்.
அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், தாக்குதல்கள் ஆகியவை கைவிடப்பட வேண்டும்.
யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் ஊடக பணியாளர்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.

ஊடகங்களின் தலையங்கங்கள் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் தரவுகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் பரிசீலிப்பது நிறுத்தப்பட வேண்டும். அரசாங்க ஊடகங்கள் பன்முகத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

அனைத்து சிறிலங்காவின் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், அதிகாரங்கள் குறிப்பாக அவசரகால சட்ட விதிமுறைகள் (ஓகஸ்ட் 25), பயங்கரவாத தடுப்புச் சட்டம் (டிசம்பர் 2006), உத்தியோகப்பூர்வ இரகசிய சட்டம், ஊடக சபை சட்டங்கள் மற்றும் ஒலி-ஒளிபரப்புச் சட்டங்கள் அனைத்துமே அனைத்துலக ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு முகம் கொடுக்கத் தவறிவிட்டன என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ
நன்றி>புதினம்.

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் வாத்தகர்.

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் வாத்தகர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார்

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம் சிறுபான்மையினத்தவர்கள் வாழும் கொழும்பில் இருந்து தமது அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களம் இருப்தற்கான தகுந்த காரணங்களை முன்வைக்க முடியாதவர்களுமாக 300 பேர் வெளியேற்றப்பட்டமை தவறானது அல்ல என்று அந்த வாத்தகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த கோடீஸ்வர வாத்தகரான டாக்டர் மொகமட் கௌஸ் மொகமட் சுலைமான் சுர்பீக் என்பவரே இந்த இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

-Pathivu-

Thursday, June 21, 2007

எம்.கே. நாராயணன் விரைவில் நீக்கம்?

எம்.கே.நாராயணனை உடனே மாற்ற வேண்டும்: திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம்

சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை உடனே அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வின் முக்கிய கூட்டுக் கட்சியாகத் திராவிடர் கழகம் இருப்பதால் எம்.கே.நாராயணன் விரைவில் மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்பபடுகிறது.


சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் நிலை நாளும் வேதனைக்கும், சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியை இணைக்கும் ஒரு முக்கிய வழி வெகுநாட்களாக மூடப்பட்டுக் கிடப்பதால் அத்தியாவசியப் பொருட்களைத் தமிழர்கள் பெறுவதில்கூட பெரும் இடர்ப்பாடு திட்டமிட்ட வகையில் இழைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அரச தலைவர் ஆனதிலிருந்தே நிலைமைகள் மிகவும் மோசமான நிலையை நோக்கி வேகமாகத் தள்ளப்பட்டு வருகின்றன.

ஜெயவர்த்தன - ராஜீவ் ஒப்பந்தத்தில் ஒப்புகொள்ளப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, சமஷ்டி ஆட்சிமுறை அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிப்பதற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து போர் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது சிங்கள அரசு.

மேலும் போதாதற்கு இந்தியாவும் தன் பங்குக்கு சிறிலங்காவுக்கு ஆயுதங்களை தந்து உதவுகிறது. கேட்டால் தற்காப்பு ஆயுதங்களைத் தான் வழங்குவதாகக் கூறுகிறார்கள்.

ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிப்பதற்காகவே செயற்படும் ஓர் அரசுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்குவதே கூட ஒரு வகையில் அந்நாட்டு அரசுக்கு உதவி புரிவதாகவே கருதப்பட வேண்டும்.

ராடார் போன்ற கருவிகளை இந்தியா வழங்குவது சிறிலங்காவின் தமிழினப் படுகொலைக்கு ஆக்கம் தருவதல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்?

சிறிலங்காவின் வான் படைக்குப் பஞ்சாபிலும், கடற்படைக்கு கோவாவிலும் வைத்துப் பயிற்சி அளிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன.

இவையெல்லாம் சிறிலங்கா அரசின் தற்காப்புக்காகவா அல்லது தமிழர்களைப் பூண்டோடு அழிக்கவா என்பதைக் கடுகளவு சிந்திப்பவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கக்கூடிய எம்.கே.நாராயணன் என்பவர் இந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அவருடைய நடவடிக்கைகள் இல்லை என்பதையும் இப்பொதுக் குழு சுட்டிக்காட்டுகிறது.

அண்மையில் கொழும்பு நகரத்திலிருந்து ஈழத் தமிழர்கள் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டதற்கு இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமைக்கு இப் பொதுக்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்துடன் ஏதோ ஒரு நிகழ்வுக்காக கண்டனம் தெரிவித்ததோடு நின்று விடாமல், தமிழர்களின் மனித உரிமைகளை ஒடுக்குவதில் முழு மூச்சாக ஈடுபடும் பேரினவாத சிங்கள அரசு தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்து, அதற்கான செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் நேரிடையாகத் தலையிட வேண்டும் என்று இந்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சிறிலங்கா அரசின் இனவெறிப் போக்கை ஐக்கிய நாடுகள் சபையே கண்டிக்கும் நிலையில், இந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்.கே. நாராயணன் விரைவில் நீக்கம்?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் விரைவில் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசாங்கம் ஆதரவாக செயற்படுவதாகக் கூறி 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தவர் எம்.கே.நாராயணன்.

இந்திய உளவுத்துறை இயக்குநராக பதவி வகித்த பின்னர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ஜே.என்.டிக்சிட் மறைவைத் தொடர்ந்து நாராயணனை நியமிக்க மன்மோகன்சிங் முடிவு செய்திருந்தார். ஆனால் அதனை தி.மு.க. தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் தயாநிதி மாறனின் உதவியுடன் கருணாநிதியை சமாதானப்படுத்தி அப்பதவியை எம்.கே.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர், ஈழப் பிரச்சினை தொடர்பாக எம்.கே.நாராயணன் சென்னையில் கருணாநிதியைச் சந்தித்த போதும் "அன்று ராஜீவ் காந்தியை சிக்கலில் மாட்டிவிட்டது நீங்கள்தான். இப்போது யாரை மாட்டிவிடப் போகிறீர்கள்?" என்று கடுப்படித்தார்.

சென்னையில் கருணாநிதி மகள் கனிமொழி "சங்கமம்" நிகழ்ச்சி நடத்தியதனை விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தி ஜெயா தொலைக்காட்சியில் விமர்சனம் செய்ய வைத்ததிலும் எம்.கே.நாராயணனின் பங்கு விமர்சனமாக்கப்பட்டது.

அதேபோல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழக நலனுக்கு எதிராக எம்.கே.நாராயணன் செயற்படுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் தயாநிதி மாறனைக் கொண்டு தி.மு.க. உடைப்பு வேலைக்கும் எம்.கே.நாராயணன் சதி செய்து வந்ததால் தயாநிதியை கருணாநிதி கழற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்.கே.நாராயணனின் ஒவ்வொரு சதிகளையும் நாம் தொடர்ச்சியாக "புதினம்" இணையத்தளத்தில் அம்பலப்படுத்தி வந்தோம்.

தமிழகத்திலும் எம்.கே.நாராயணனை அம்பலப்படுத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் "பெரியார் முழக்கம்" எனும் அந்த இயக்கத்தின் உத்தியோகப்பூர்வ ஏட்டில் நாராயணனை அம்பலப்படுத்தி தொடர் கட்டுரைகள் எழுதியதை "தமிழ்நாதம்" இணையத்தளம் வெளியிட்டிருந்தது. மேலும் இந்தத் தொடரை விரிவுபடுத்தி தற்போது "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" என்ற பெயரில் பெரியார் திராவிடர் கழக வெளியீடாகவும் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மத்திய குழுவிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்போதைய நெருக்கமான கூட்டுக்கட்சிகளில் ஒன்றாக திராவிடர் கழகம் இருப்பதால் அனேகமாக எதிர்வரும் நாட்களில் எம்.கே.நாராயணன் நீக்கப்பட்டுவிடக் கூடும் என்று கருதப்படுகிறது.

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு புதிய ஊர்தி வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

தமிழ்நெற் இணைத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் - ரம்புக்வெல

தமிழ்நெற் இணைத்தளம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதி நவீன கணனி தொழிநுட்பங்களை அறிந்தவர்களை வாடககைக்கு அமர்த்தி தமிழ்நெற் இணைத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நெற் இணைத்தளத்தைப் பார்வையிட முடியாதவாறு தமது அரசாங்கம் மேற்கொண்ட நவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் ஹேகலிய ரப்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

Wednesday, June 20, 2007

"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா!!!

"தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது.


"சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது.

"தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய முடக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" நாளிதழை தீக்கிரையாக்கினர். இணைய உலகம் உருவான பின்பு முதல் முறையாக "தமிழ்நெட்" இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் நடத்த அனைத்துலக ஊடக அமைப்பினர் வருகை தர உள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அனைத்துலகத்தின் முன்பாக- ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முன்பாக- மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவோரின் முன்பாக இந்த விடயத்தை "தமிழ்நெட்" முன்வைக்கிறது" என்றும் தனது செய்தியில் "தமிழ்நெட்" தெரிவித்துள்ளது.

ஒரு ஊடக நிறுவனத்தின் ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் பறித்திருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வரும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் ஒரு அங்கமாகவே "தமிழ்நெட்" முடக்கத்தை "புதினம்" இணையத்தளமும் கருதுகிறது. சிங்களப் பேரினவாதத்தின் இந்த அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலில் "புதினம்" தன்னையும் இணைத்துக் கொள்கிறது.
நன்றி>புதினம்.

Tuesday, June 19, 2007

தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து"

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது.


இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடந்த ஜூன் 17 ஆம் நாள் சிங்கள மீனவர்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் படகு தகர்க்கப்பட்டு 4 பேர் படுகாயமடைந்தனர். சிங்கள மீனவர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பிரவீன்குமார் (வயது 20), பாலமுருகன் (வயது 35), சூசை(வயது 45), போதகராஜ் (வயது 30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா அரசாங்கம் வழமை போல் இச்செய்தியை மறுத்தது.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளே இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் வெளியான செய்தி:

6/18/2007 11:06:52 AM http://www.defence.lk/new.asp?fname=20070618_02

Suspected LTTE terrorists attack Indian fishermen; sink one fishing boat (Updated)
News reports from India yesterday (17) indicated that a group of Indian fishermen had been attacked by an armed group of suspected Sri Lankan fishermen at the sea between Dhanushkodi and Katchatheevu Island.

According to the reports the assailant had hurled five hand grenades at the Indian fishermen sinking one fishing boat. Three of the fishing vessels had also been hijacked with 12 fisherman and were later released by the assailants. Three Indian fishermen were seriously injured in the attack while, a boat was blown into pieces before it sank , the reports further said.

The fishermen also claimed that the assailants had also destroyed the fishing apparatus and snatched their harvest. The Intelligence Bureau, `Q' Branch CID and other intelligence agencies are conducting enquiries with the fishermen on the identity of the suspects and the circumstances that led to the attack.

The LTTE terrorists murdered five innocent Tamil Nadu fishermen and abducted 12 others during the last four months.

Indian boats carrying LTTE cargo???

Controversy surrounds the circumstances in which conflicting reports are received from Tamil Nadu about the explosion, an authoritative official said last night.

Speculation is that the vessel had been carrying a consignment of explosives belonging to the LTTE. Although reports indicated the incident had taken place in the Indian territorial waters, the possibility of the ill-fated vessel being in Sri Lankan waters could not be ruled out, the sources said.

Sri Lankan sources expressed serious concern that Sea Tigers and their collaborators based in Tamil Nadu were continuing clandestine operations despite the stepped up presence of the Indian Navy and the Indian coast guard.

இந்த செய்தியில்,

விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் வெடிபொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அப்போது அந்த படகு வெடித்துச் சிதறியிருக்கக்கூடும் என்றும் இச்சம்பவம் இந்தியக் கடற்பகுதியிலேயே நடந்ததாகவும் ஒரு "இணைப்பை" உப தலைப்பின் கீழ் "கேள்விக்குறியோடு" வெளியிட்டிருக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அச்செய்தியைப் படிக்கும் எந்த ஒரு நபருக்குமே அதன் பொய்த்தன்மை தௌ்ளத் தெளிவாகவே தெரியும்.

ஏனெனில்

1. அது உண்மையல்ல என்பதை வெளிக்காட்டும் வகையில் உப தலைப்புக்குள் கேள்விக்குறியிட்டு அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்தத் தகவலை சிங்கள அமைச்சுக்குத் தெரிவித்தது "நம்பத் தகுந்த" வட்டாரங்கள் எனக்கூறியிருப்பது.

இவை இரண்டுமே "யூக" செய்திதான் அதாவது பொய்ச்செய்திதான் என்பதை வெளிக்காட்டி நிற்கிறது.

இருந்தாலும் சிங்களப் பாசத்தை காட்ட

"பத்திரிகா தர்மம்" கடைபிடிப்பதாக மார்தட்டிக் கொள்ளும் "இந்து" ஊடகவியலாளருக்கு இந்த உண்மை- நியாயம்- நேர்மை ஆகியவை பற்றியெல்லாம் என்ன கவலை வேண்டியிருக்கிறது.?

இன்றைய (19.06.2007) இந்து நாளிதழின் "முதல் பக்கத்திலேயே"

"Indian fishing boat was carrying explosives"

என்று கொழும்பிலிருந்து B.Muralidhar Reddy என்பவர் பெயரில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செய்தியை மேற்கோள்காட்டி செய்தியை வெளியிட்டிருக்கிறது. வெளியாகி இருக்கிறது.

சிங்களப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டதை அப்படியே இந்து ஏடு வெளியிட்டிருந்தால் கூட பரவாயில்லை.

சிங்களப் பாதுகாப்பு அமைச்சாவது

"Indian boats carrying LTTE cargo??? என்று கேள்விக்குறியோடு "உப தலைப்பிட்டுத்தான்" செய்தி வெளியிட்டது.

ஆனால் இந்துவோ

என்ன "புலனாய்வு" செய்து கண்டுபிடித்ததோ தெரியவில்லை-

அந்தக் கேள்விக்குறியையையும் கூட நீக்கியதுடன்

உப தலைப்பிட்டு சிங்களவன் யூகமாக எழுதியிருக்கும் ஒரு செய்தியை

முதல் பக்கத்திலேயே "உறுதிப்படுத்தப்பட்ட" ஒரு செய்தியைப் போல் பிரசுரித்துள்ளது.

மிகத் தெளிவாக

தமிழ்நாட்டு மீனவர்களை காட்டிக்கொடுக்கும் உள்நோக்கத்துடன் நோக்கத்துடன்

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களவனும் சிங்களக் கடற்படையும் தாக்குதவதை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் விதமாகத்தான் இந்து இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

இதில் வேடிக்கை என்னவெனில்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தியை வெளியிட்ட "சிறிலங்கா அரசின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகம்" (http://www.news.lk/tamil)
கூட தமிழக மீனவர்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டி சிங்களப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட "உப தலைப்பு" பகுதியை மறைத்தே மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். (http://www.news.lk/tamil/index.php?option=com_content&task=view&id=1802&Itemid=44).


"தமிழர்கள்" மீது ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக "இந்து" பரம்பரைக்கு வன்மம் இருப்பதால்தான்

ஈழத் தமிழன் என்ன- இந்தியத் தமிழன் என்ன-

சிங்களவனே விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன

தமிழனைக் காட்டிக் கொடுத்து அழித்தே தீருவதுதான் தன் "வரலாற்று" - "பரம்பரை"க் கடமை என கருதி செய்தி வெளியிட்டுள்ளது "இந்து"!


நன்றி>புதினம்

Monday, June 18, 2007

ஐ.நா.வில் தனக்குத் தானே கரிபூசிக் கொண்ட சிறிலங்கா!

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது.


மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமது தரப்பு கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக அல்லது நியாயப்படுத்துவதற்காக அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் இத்தகைய கூட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத் தொகுதியில் ஏற்பாடு செய்வது வழமை.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (15.06.07) சிறிலங்கா அரசாங்கமும் இத்தகைய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பெருமளவில் விளம்பரப்படுத்தப்படாமல் கிட்டத்தட்ட மறைமுகமாக நடைபெற ஏற்பாடாகியிருந்த இக்கூட்டத் தொடர் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 3.20 மணி வரை 26 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இத்தகைய கூட்டம் நடைபெறப் போகின்றது என்பது எவ்விதத்திலோ அறிந்து கொண்ட சில நாடுகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் 30 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் பேச்சாளர்களாக சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, தொழிற்துறை அமைச்சர் அதாவுட செனிவிரட்ன, துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி தயான் ஜயதிலக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்துறை அமைச்சர் அதாவுட செனிவிரட்ன மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த சமரசிங்கவை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், அமைச்சர் மகிந்த சமரசிங்கவோ, இங்கு தாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை- இது ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்றும் கூறியதோடு அனைவருடைய கேள்விகளுக்கும் பதில் கூறத் தயார் என்றும் கூறினார். ஆனால் இக்கூட்டம் ஊடகவியலாளர்கள் சந்திப்பதற்கான மண்டபத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைபற்றி அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், பி.பி.சி. யின் ஐக்கிய நாடுகள் சபைக்கான செய்தியாளர் என்று பலர் பல கேள்விகளைக் கேட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து ஜேர்மனியிலிருந்து வருகை தந்த எஸ்.ஜெ.இமானுவேல் அடிகளார், கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றியும் அண்மையில் அனைத்துலக வல்லுநர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டமா அதிபர் சில்வா பதிலளித்தார்.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், கேட்பதற்கு பல கேள்விகள் உண்டு என்றும் ஆனால், மிகச் சுருக்கமான சில விடயங்கள் பற்றியே தான் கேட்கவிருப்பதாகவும் கூறி, முதலாவதாக அங்கு உரையாற்றும் அமைச்சர்களும் மற்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் சிறிலங்காவில் மனித உரிமையை மீறுகிறார்கள் என்ற கூற்றை மாற்றவேண்டும் என்றும், சிறிலங்கா இராணுவம் மற்றும் அதன் துணை இராணுவக் குழுவினர் போன்று அனைவருமே மனித உரிமைகளை மீறுவதாகவும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யினர் யாழ்ப்பாணத்திலும் வேறு பல இடங்களிலும் அப்பாவி மக்களை மிக மோசமான முறையில் துன்புறுத்துவதாகவும், இதனால் கடத்தல், சித்திரவதைகள், கொலைகள் பெரியளவில் ஈ.பி.டி.பி.யினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் நேருக்கு நேர் அம்பலப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கிருபாகரனுக்கும் டக்ளஸ் தேவானந்தா, கேகலிய ரம்புக்வெல, அதாவுட செனிவிரட்ன ஆகியோருக்கு இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டு நீண்ட நேரமாக பெரும் அமளி ஏற்பட்டது.

சிறிலங்கா அரச பிரதிநிதிகளைப் பார்த்து, இம் மண்டபத்தினுள் பொதுக்கூட்டங்களிலோ அல்லது அரசியல் கூட்டங்களில் பேசுவது போல் நீங்கள் பேச முடியாது. ஏனெனில் இங்கு சமூகமளித்துள்ள வெளிநாட்டவர்களுக்கு சிறிலங்காவின் அனைத்து உண்மைகளும் ஆதாரங்களுடன் தெரியும். ஆகையால் உண்மையைக் கூறுங்கள் என்றார் கிருபாகரன்.

இதற்கு ரம்புக்வெல வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், இலங்கையில் நடக்கும் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை பலப்படுத்துவது மட்டுமல்லாது அனைத்துலகப் பிரசாரத்திலும் மிக வீரர்களாகவும் உள்ளனர் என்றார்.

இதற்கு பதிலளித்த கிருபாகரன், ரம்புக்வெல உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி கூறுவதாக கூறியதும் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைவரம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தன.

உண்மையில் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிறிலங்கா அரசாங்கம், கூட்டம் குறித்த தகவல்களை வெளியில் கசியவிடாது வைத்திருந்தது. கூட்டம் பிற்பகல் 2 மணிமுதல் 3.15 வரையென கூறப்பட்டிருந்த போதும் வாக்குவாதங்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடையவில்லை. வாக்குவாதங்களுக்கிடையே சில அமைச்சர்கள் அறையை விட்டு வெளியேறிவிட்டனர். கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் செனிவிரட்ன, தமக்கு நோர்வேயின் சமாதான தூதுவர் சொல்ஹெய்முடன் சந்திப்பிருப்பதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
நன்றி>புதினம்.

Sunday, June 17, 2007

தமிழக மீனவர்கள் மீது, சிங்கள குண்டர்கள் குண்டுத்தாக்குதல்!!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு மீது ஐந்து குண்டுகள் வந்து விழுந்து வெடித்தது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்தது.

அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து நீந்தி அருகில் இருந்த படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
http://thatstamil.oneindia.in/news/2007/06/17/fisherman.html

Friday, June 15, 2007

ஐநாவின் மனிதஉரிமை கண்காணிப்பகத்தை நிறுவுக - மகிந்தவிடம் மன்னிப்புசபை.



மகிந்தவை சந்தித்த அனைத்துலக மன்னிப்புசபையின் செயலர் ஐரின் கான் அவர்கள் சிறீலங்காவின் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒன்றை சிறீலங்காவில் நிறுவ தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.


மன்னிப்புச் சபையின் கருத்துப்படி கடந்த 12 மாதகாலப்பகுயில் 1000 ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயும் பலர் சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர். மன்னிப்புச்சபை சிறீலங்கா படைகள் கருணாகுழு மற்றும் விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது.

சிறீலங்காவில் அச்சம் ஆட்சி செய்வதாகவும் இது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்தரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட மன்னிப்புச்சபை சிறீலங்கா சனாதிபதியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துலக நிபுணர்கள் குழுவின் நம்பகத்தன்மையும் வினைத்திறனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 18 மாதகாலமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கவும் அதில் சம்பத்தப்பட்டோரை தண்டிக்கவும் உரிய சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் ஏற்பாடுகள் யாவும் சிதைவடைந்து விட்டதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இம்மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரிக்கவும் சுதந்திரமான கண்காணிப்பாளர்களின் அவசியத்தை சுட்டிக்காட்டிய மன்னிப்புச்சபை அக்காண்காணிப்பகத்தை ஏற்படுத்துமுகமாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தை அழைக்கும்படி மகிந்தவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிப்படையான சுதந்திரமான முழுவளங்களும் நிறைந்த அனைத்துலக மனித உரிமை அமைப்பொன்றின் தளச்செயற்பாட்டின் ஊடாக நீதிக்கும் நம்பகத்தன்மைக்குமான தேசிய கட்டமைப்புக்களை பலப்படுத்த முடியும். இது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிராந்தியங்களையும் உள்ளடக்கும் என்று கூறிய ஐரின்கான் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான அரசின் செயற்பாடுகள் மிகக்குறைவாக உள்ளதாகவும் அவற்றை பலப்படுத்த இச்சந்தர்ப்பத்தை மகிந்த பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நன்றி>பதிவு.

Thursday, June 14, 2007

3 ஆண்டுகளுக்குள் பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு!!!

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸின் சர்வதேச பதிப்பான அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.



பாரீசில் அச்சிடப்பட்டு 35 நாடுகளில் விநியோகிக்கப்படும் அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூனில் நேற்றைய

வெளியீட்டின் முதல் பக்கத்தில் புதுடில்லியைச் சேர்ந்த அதன் தெற்காசிய செய்தியாளர் சோமினி சென்குப்தா எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

யாழ்குடா நாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சிபுரிகின்றன.

கறுப்பு நிற ஏரியை தாண்டி நிகழ்த்தப்பட்ட பீரங்கித் தாக்குதல் இரவின் அமைதியை குலைத்தது. யாழ்குடா நாட்டில் இருந்து வெளியே செல்லும் சாலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து மூடப்பட்டுள்ளது. இது அந்தப்பகுதியை மக்கள் செல்ல முடியாத பகுதியாக மாற்றியுள்ளது.

இன்று உணவு எரிபொருட்கள் என்பன குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் அங்குள்ள நகரத்தின் சந்தை மாலை வேளைகளில் மூடப்பட்டுவிடும். கடை உரிமையாளர்கள் அதிகளவு பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க விரும்புவதில்லை ஏனெனில் எப்போது கடையை மூடிவிட்டு ஓடிவிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியாது.

இரவு 7.00 மணிக்கே எல்லா கடைகளும் யாழ் நகரத்தில் மூடப்பட்டுவிடும் கட்டாக்காலி நாய்கள் மட்டுமே நகரத் தெருக்களில் ஓடித்திரிகின்றன. இரவு 8.00 மணிக்கு அமூல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்திற்கு முன்னராக மக்கள் விடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள், கதவுகள் பூட்டப்பட்டுவிடும். இது கடந்த 10 மாதங்களாக நடந்துவரும் நிகழ்வு.

இராணுவத்தினர் ஒடுங்கிய வீதிகளில் முனைகளில் மறைந்து பதுங்கிவிடுவார்கள், வாகனங்கள் செல்லும் போது வெளிச்சங்கள் பாச்சப்படும் நாய்களை தவிர எல்லாம் அசைவின்றி இருக்கும். இது தான் யாழ்ப்பாணம், கால் நூற்றாண்டு இனப்போரின் வடிவம் இது. புதிய பூகம்பத்துக்கான ஆயத்தம் இது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாத பருவமழைக்கு முன்னர் யாழ் குடாநாட்டுக்கான பெரும் சமரை தான் எதிர்பார்ப்பதாக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக தீவில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்துள்ளது. இராணுவம் சிங்களவர்களையே பெரும்பான்மையாக கொண்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் படி கடந்த 18 மாதங்களில் 4,800 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இது சுயாதீன தகவல்கள் அல்ல. இது மேலும் தொடரலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை அழிப்பதற்கும், விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிப்பதற்கும் தமது படையினருக்கு தான் அறிவுறுத்தி உள்ளதாகவும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தை அழிப்பதே தமது பிரதான இலக்கு எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா கடந்த மாதம் எமக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் பணி முடிய 3 ஆண்டுகாலமாகும் என்றும் அவர் கூறினார்.

அமைதி பேச்சுக்கள் அண்மையில் இல்லை. அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உதவி நிதிகளின் நிறுத்தங்களும் சிறீலங்கா அரசின் இராணுவ தீர்வுத் திட்டத்தில் சிறிய தாக்கத்தையே உண்டு பண்ணியுள்ளது.

விடுதலைப்புலிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகள் தடைசெய்துள்ளன. இரு இருக்கைகளை கொண்ட இலகுரக வாணூர்திகள் மூலம் அவர்கள் வான் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஆயுதம் தற்போதுள்ள மிகவும் வலிமையானது.

ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள், உதவி நிறுவன பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏப்பிரல் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் மாவட்டத்தில் இயங்கும் தமிழ் நாளேடு ஒன்றின் ஊடகவியலாளர் தனது வேலைக்கு ஈருளியில் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மே மாதம் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோருக்கு எதிரான எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தேடி கொழும்புக்கு வருவதற்காக 15,000 மக்கள் கப்பலுக்கு காத்திருக்கின்றனர். அவர்கள் தற்போதும் அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். எந்த நேரமும் எதுவும் நடைபெறலாம் என ரவீந்திரன் இராமநாதன் என்ற தையல் தொழிலாளி தெரிவித்தார் எல்லாவற்றிலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு போர் புதிதல்ல. அங்குள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் முன்னர் நடைபெற்ற போரின் வடுக்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கு ஓடுவதும், மரணங்களும் பழக்கமாகி விட்டது. வேறு எந்த இடமும் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கவில்லை, ஏனெனில் அவைகளுக்கு யாழ்ப்பாணத்திற்குள்ள சிறப்பம்சங்கள் இல்லை. அது விடுதலைப்புலிகள் போர் புரியும் தாய்நாட்டின் இதயப்பகுதியாகும்.

எனினும் யாழ்குடா நாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. இந்த கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சிபுரிகின்றன.

யார் கடத்தப்படப் போகின்றனர்? ஏன்? என்பது யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் வீதிகளில் சடலங்கள் கிடக்கும் பல சமயங்களில் அதுவும் கிடைப்பதில்லை.

கடந்த மே மாதத்தில் ஒரு இரவில் ஊரடங்கு வேளையில் சி. குகரஞ்சனின் மகனான கண்ணன் தனது பெற்றோரின் படுக்கை அறையின் தரையில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென முன்கதவை தள்ளித் திறந்து கொண்டு உள்நுளைந்த நான்கு ஆயுததாரிகள் கண்ணனை விசாரணைக்காக தம்முடன் வருமாறு பலவந்தமாக அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளவில்லை. தமது அடையாளங்களை தெரிவிப்பது உங்களுக்கு தேவையற்றது என தெரிவித்தனர். ஏன்? எங்கு கண்ணன் கொண்டு செல்லப்படுகின்றார் என்ற விளங்கங்களும் தரப்படவில்லை. ஆயுததாரிகள் சிவில் உடையில், கைத்துப்பாகியுடன் வந்திருந்தனர். மகனை விரைவில் விட்டுவிடுவதாக உறுதியளித்தனர்.

பாடசாலை உயர்தர மாணவனான கண்ணன் மே 4 ஆம் நாள் கடத்தப்பட்ட பின்னர் இன்று வரை வீடு திரும்பவில்லை. உயர் தரவகுப்பு மாணவனான கண்ணன் மாணவச் செயற்பாட்டளாவார், அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தவர். இதனை படையினர் அரச எதிர்ப்பு போராட்டம் என கூறிவருகின்றனர். எனினும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என தனது மகனுக்கு தாம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், அவரை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு மாதம் காத்திருந்து மற்றும் தேடுதல் நடத்தியதற்கு பின்னர், கடத்தியவர்கள் ஏன் தனது மகளை வீட்டில் வந்து விசாரணை செய்யவில்லை? ஏன் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்ற கேள்விகளை கண்ணனின் தந்தை எழுப்பியுள்ளார். பெற்றோரின் கரங்களில் இருந்து பிள்ளைகளை பறித்துச் செல்வது மிகவும் கொடுமையானது என அவர் மேலும் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் வரையிலும் யாழ்குடாநாட்டில் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பாக தமக்கு 805 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறீலங்கா மனித உரிமை ஆணைக்குழு, அரச நிறுவனங்கள் என்பன தெரிவித்துள்ளன. எனினும் 230 கடத்தல்களே நடைபெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் மட்டும் சிலர் இதில் இருந்து தப்புவதுண்டு. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருணகிரிநாதன் நிரூபராஜ் என்ற பல்கலைக்கழக மாணவன் அவரது கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவர் பல தொடர்ச்சியான இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளாரா என விசாரணை செய்யப்பட்டார்.

அதன் போது கடத்தல் காரர்கள் தன்னை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தமது பாதத்தில் அடித்ததாகவும், தனது தலையை பொலித்தின் பையினால் மூடிக் கட்டிவிட்டு அதற்குள் பெற்றோலை ஊத்தியதாகவும், தனது மலவாசலிணுடாக தடியை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

7 நாட்களின் பின்னர் தொடரூந்து பாதையருகே அவர் விடப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டது. ஒரு காதும் கேட்பதில்லை. எந்த உணவையும் அவரால் உண்ண முடியவில்லை. ஏப்பிரல் மாதம் நிரூபராஜ் (26) தென்னிந்திய நகரான சென்னைக்கு சென்று விட்டார். தனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகளை; இல்லை என அவர் கூறிவருவதுடன் தனது கடத்தல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை அகற்றும் நோக்குடன் கடத்தல்களை துணை இராணுவக்குழுவினர் செய்வதாக சந்திரசிறீ தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு படையினரிலும் எல்லோரும் சுத்தமானவர்கள் என தன்னால் கூற முடியாது

எனவும் தமது கடமை அவர்களை பிடித்து தண்டிப்பது தான், கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களல்ல விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குகரஞ்சனின் மகன் தொடர்பாக கருதத்து தெரிவிக்கையில், தன்னால் அவரை தனிப்பட்ட முறையில் கண்டறிய முடியும் எனவும், நாம் தினமும் மக்களை கொல்வதாக அனைத்துவக சமூகம் நினைப்பதை நான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் உயர் பிரதிநிதியான றிச்சார்ட் பௌசர் யாழ் வந்த போது சந்திரசிறீயை சந்தித்து கடத்தல்கள் தொடர்பாக தமது அதிதிருப்தியை தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கடத்தல்கள் குறைந்திருந்தன.கத்தோலிக்க ஆலயங்களுக்கும் நிட்சயம் அற்ற தன்மை தோன்றியுள்ளது. அது அல்லைப்பிட்டியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் இல்லமாக மாறியிருந்தது. சிறீலங்காவில் 300,000 மக்கள் இடம்பெயாந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பமாகியதில் இருந்து இந்த ஆலயத்திற்கு சில குடும்பங்கள் 4 முறை இடம் பெயாந்துள்ளன. கடந்த ஆகஸ்ட்டில் அல்லைப்பிட்டியில் மோதல் நடைபெற்ற போது மக்கள் தேவாலயத்தை நோக்கி ஓடினார்கள் ஆனால் எறிகணைகள் அங்கு ஏவப்பட்டன. தேவாலயத்தின் மதகுருவான வண. ஜிம் பிரவுண் அடிகள் வெள்ளை கொடியை பிடித்தவாறு மக்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.சிறீலங்காவின் கடற்படையினர் மக்களை தாக்கிய போது பிரவுண் கோபத்துடன் வாதாடியிருந்தார். ஆனால் சில நாட்களில் அவர் காணாமல் போய்விட்டார்.
கடற்கரைப் பகுதியை படையினர் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு மீன் பிடிக்க முடியாது என பல குடும்பங்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளன. பல வராங்களாக உணவு உதவிகளும் கிடைக்கவில்லை. அரிசிக்காக பெண்கள் தமது தங்க வளையல்களை விற்பனை செய்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் சாப்பிடுவதில்லை. அதனை தமது பிள்ளைகளுக்கு சேமிக்கின்றனர்.

சத்தியசீலன் திலகா என்ற தாய் சிறிதளவான உணவே உட்கொள்வதால் முகாமில் பிறந்த தனது 4 மாதக் குழந்தைக்கு போதிய பாலூட்ட முடியாத நிலையில் உள்ளார்.

முன்னைய போர் நிலைமைகளிலும் தான் 4 பிள்ளைகளை வளர்த்ததாகவும் எனினும் பாலுக்கு பற்றக்குறை அப்போது ஏற்படவில்லை எனவும், இன்று காலை தனது மூத்த மகன் சாப்பாடு இன்றியே பாடசாலை சென்றதாகவும், தாயாரும் எதுவும் சாப்பிடவில்லை எனவும் சத்தியசீலன் (39) தெரிவித்தார்.

ஐ.நாவினால் மேற்கொள்ளப்பட்ட அவசர ஆய்வுகளில் யாழில் பெருமளவான சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் ஆய்வு வெளியீடுகளை அரசு தடுத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

அனைத்துலக நிறுவனப் பணியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடற்படைதான்: சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு!

திருகோணமலையில் மெர்சி கோர்ப்ஸ் என்ற அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனியோ மகாலக்ஸ் மீது சிறிலங்கா கடற்படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

திருகோணமலையில் கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் இரவு நேரத்தில் அந்நபர் சென்று கொண்டிருந்தார். கடற்படையினர் விடுத்த எச்சரிக்கைகளை அந்நபர் பொருட்படுத்தப்பவில்லை. அதனால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று நாம் எச்சரித்திருந்தும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதனால் நாம் வருந்தவில்லை. அதிர்ஸ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பிவிட்டார். இது எங்கள் தவறு அல்ல. அவர் நலமுடன் உள்ளார் என்றார் அவர்.

திருகோணமலை நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலெஸ் தோட்டம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்துள்ளது.

திருகோணமலையில் மெர்சி கோர்ப் நிறுவனத்தின் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்று மெர்சி கோப் பேச்சாளர் இவெட்டா ஓவ்ரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அந்தோனியோ மகாலக்ஸ் அதன் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் உப்புவெளி சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
நன்றி>புதினம்.

சிறிலங்காவை அனைத்துலக நாடுகள் கை விடக்கூடும்: ரொய்ட்டர்ஸ்.

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு விபரம்:

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை தமது பணிகளை மேற்கொள்ள முடியாது தடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சிறிலங்காவிற்கு அனைத்துலகத்தின் உதவிகள் தேவை. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் அதனை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமை மீறல்களை காரணம் கூறி இந்த ஆண்டு சிறிலங்காவிற்கான சில உதவிகளை நிறுத்தியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மீளக்குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உணவு உதவிகளை உலக உணவுத்திட்டம் நிபந்தனையாக போட்டுள்ளது. இருந்த போதும் பல தாக்குதல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹாவெல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதனையே நாம் எல்லோரும் விரும்புகின்றோம். எனினும் நாம் அதனை நோக்கி தள்ளப்படுகின்றோம். இதனை தடுப்பதற்கோ இல்லது மாற்றுவதற்கோ எந்த வழியும் இல்லை.

கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களை கொழும்பில் இருந்து அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் மீண்டும் பின்பற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்குவதற்கு தகுந்த காரணங்களை கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்தி கடந்த வாரம் கொழும்பில் உள்ள 400 தமிழ் மக்களை அரசு வேறு பகுதிக்கு பலவந்தமாக அனுப்பியிருந்தது. எனினும் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு அதிகாரிகளை தமது முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.

நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த அறிக்கைகள் போலியாவை எனவும் அது அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அதனுடன் படையினருக்கு உள்ள தொடர்பையும் அவர் மறுத்துள்ளார்.

பயங்கரவாதத்தை கையாள்வது தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களில் இருந்து அரசு அதன் எல்லையை முற்று முழுதாக தாண்டியுள்ளதாக தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்தில் இருந்தும், உள்நாட்டிலும் அரசு சுயமாகவே தனிமைப்பட்டுள்ளது. எனினும் அனைத்துலக சமூகம் தம்மை வற்புறுத்துவதாக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பில் மேற்குலக நாடுகள் இரட்டைப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது சிறந்த நடவடிக்கை எனவும் அரச தலைவரின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச, பிபிசி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் பலப்படுத்தப்டப்ட தனது அலுவலகத்தில் இருந்தவாறு நேர்காணல் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

இது அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமானதும், வன்புறுத்தலுமான நடவடிக்கையாகும். பிரச்சனையை விளங்கிக்கொள்ளாது அவர்கள் எங்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர். நாம் தனிமைப்பட மாட்டோம். எமக்கு ஆதரவாக சார்க் அமைப்பில் உள்ள ஆசிய நாடுகள் உள்ளன.

பிரித்தானியா, மேற்குலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தாம் விரும்பியதனை செய்யட்டும் நாம் அவர்களில் தங்கியிருக்கவில்லை. தூதரக அதிகாரிகள் தமது அரசுகளை தவறாக வழி நடத்துகின்றனர்.

அனைத்துலக ஊடகங்களும் பிரச்சினைக்கு ஒரு காரணம். அவர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை கொடுக்கிறார்கள். நாம் எங்களை தற்காத்துக் கொள்வோம். நீங்கள் நாட்டை ஆபத்தில் தள்ள முடியாது. ஹிம் ஹாவெல் முற்றிலும் தவறான தகவல்களை கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்த வாரம் அரசுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் விடயம் நிகழந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அரசின் விசாரணைகள் அனைத்துலக தரத்தில் நடைபெறவில்லை என அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வருடத்தில் மட்டும் நடைபெற்ற வன்முறைகளில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இதில் கடும் போக்கான அரசியல் கட்சிகள், பௌத்த மதகுருமார் போன்றவர்களும் அடக்கம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சிறிலங்காவை கைவிட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என தனது பெயரைக்குறிப்பிடாத கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தெரிவிக்கப்படும் பல முரணான கருத்துக்களினால் நாட்டின் வெளிவிவகார கொள்கையில் முற்றிலும் தெளிவற்ற தன்மையை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒருவருக்கு ஒருவர் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உள்ளுரில் ஒரு செய்தியும் அனைத்துலகத்திற்கு பிறிதொரு செய்தியும் தெரிவித்து வருவது ஆபத்தானது. அதுவே அவர்களை தனிமைப்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Wednesday, June 13, 2007

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல்!!!

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது.

இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சம இடைவெளியை கொண்டுள்ள இந்தியா, தற்போது இலங்கை இராணுவத்துக்கு பக்கபலமாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதி திரும்பும் நடவடிக்கைகளில் சில வெளிநாடுகள் ஈடுபடுவது, ஓரளவு மட்டுமே பயன்தரும் என்பதை உலக நாடுகளும் உணர்ந்துள்ளன. நோர்வே நாடு, எடுத்த அமைதி முயற்சி தோல்வியடைந்ததும் இதனால்தான். இலங்கை பிரச்சினையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் இருந்தது இந்தியா. ஆனால், சமீப காலமாக இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

'இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் விற்பனை செய்யாது' என்று அறிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், 'பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதும் கூடாது' என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தது, பலரையும் வியப்படையச் செய்தது. டில்லியிலும், சென்னையிலும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, இலங்கை பிரச்சினை தொடர்பாக பேசிய நாராயணன், 'விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு தான்' என்பதை தெளிவுபடுத்தினார். 'புலிகளின் கடற்படை பிரிவான கடற்புலிகள் மற்றும் அவர்களிடம் உள்ள போர் விமானங்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றும் பகிரங்கமாக கூறினார்.

இலங்கையில் உள்நாட்டு போர் விவகாரத்தை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கவனித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், துருக்கியில் இருந்து இந்தியா வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இராணுவத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். தற்போதைய நிலையில், இலங்கையின் தேவைகளையும், அதிகாரிகளிடம் ராஜபக்ச கோடிட்டு காட்டினார். வேறு எந்த நாட்டை விட இந்தியாவையே சார்ந்திருக்க இலங்கை விரும்புவது தெளிவானது. இந்தியா கூறும் எந்த ஆலோசனையையும் ஏற்க இலங்கை தயாராக இருக்கிறது. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு இராஜதந்திர முறையில் இலங்கை செயல்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஓயில் கோர்ப்பரசேனை, இலங்கையில் செயல்பட அனுமதித்தது. இலங்கையில் பல பெட்ரோல் பங்க்களையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தியாவின் மற்றொரு மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம், 'தேசிய அனல் மின் கழகம்!' இந்த நிறுவனமும் இலங்கையில் பல இடங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருகோணமலை பகுதியில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கை அமைக்க இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தினமும் 150 கப்பல்கள் வரை ஐரோப்பாவில் இருந்து சிங்கப்பூர் வரை செல்கின்றன. இந்த கப்பல்களுக்கு வழியில் எரிபொருளை நிரப்ப சரியான இடவசதி இல்லை. இந்த கப்பல்களுக்கு எரிபொருள் சப்ளை செய்ய திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. திருகோணமலையில் தேசிய அனல்மின் கழகமும், சிலோன் மின்வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சம்பூர் என்ற இடம் இதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த இடத்தை புலிகள் சமீபத்தில் தாக்கினர். விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் உள்ளன. கப்பல்களை தாக்கி அழிக்கும் கடற்புலிகள் பிரிவும் உள்ளன.

அவற்றை கட்டுப்படுத்தும் சக்தி இலங்கை இராணுவத்திடம் இல்லை. இந்திய இராணுவம் முழு வீச்சில் இலங்கைக்கு உதவினால் மட்டுமே புலிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்க முடியும் என்பதே இலங்கையின் வியூகம். இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் மற்றும் இலங்கையில் அமைய இருக்கும் இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. புலிகளின் போர் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன ராடார்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்றவற்றை இலங்கைக்கு இந்தியா விரைவில் வழங்கும் என தெரிகிறது. இதற்கு முன், இலங்கையிடம், 'அழிவு ஏற்படுத்தாத இராணுவ தளவாடங்கள் மட்டுமே தர முடியும்' என இந்தியா கூறி இருந்தது.

இதனால், பாக்., மற்றும் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கியது இலங்கை. இது இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் என்பது இலங்கைக்கு தெரியும். ஆனாலும், இராணுவத்துக்கு போதுமான ஆயுதங்கள் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, இந்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. எனவே, பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை உதவி பெறுவதை நிறுத்த வேண்டுமானால், இந்தியா தான் உதவியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இரகசியமான வகையில் இலங்கை இராணுவத்துக்கு உதவும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்ற்>புதினம்.

Tuesday, June 12, 2007

வெல்க தமிழ் : பொங்கும் ஜனசமுத்திரம் (நிழல்பட காட்சிப்பதிவு)

சுமார் 10000 ற்கு மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் ஐக்கியநாடுகள் சபைக்கு முன்பாக ஒன்று கூடி தமது தாயக கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்ககோரி பகிரங்க வேண்டுகோள் விடுத்த தினம்.
















படங்கள்>புதினம்,பதிவு.