Wednesday, January 03, 2007

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா அக்கறை.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் மன்மோகன் சிங் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு.

இலங்கை இனப்பிச்சினை தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர் அடல் பியாரி வாஜ்பாய், ஜஸ்வந்சிங், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர் ,வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயல் நாடுகளான பாகிஸ்தான் இலங்கை ,பங்களாதேஷ்,நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது எதிர்கட்சியினரின் ஆலோசனைகளையும் யோசனைகளை இந்திய பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்கள் குறித்து அவர் அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி>புதினம்.

No comments: