இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை நடத்திவரும் இந்திய அரசாங்கத்துக்கு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரச்சினையில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி. நாடர்ளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையை இந்திய அரசு போர் ரீதியாகக் கையாள்கின்றது. காஷ்மீர், குஜராத் பகுதிகளில் இந்திய இராணுவத்தினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் இந்திய அரசு எவ்வாறு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரிப்பில் தலையிட முடியும்?
தனது நாட்டிலேயே பல பிரதேசங்களை பிரித்து வைத்திருக்கும் இந்தியா, இலங்கையில் வடக்கு - கிழக்கை இணைக்கக் கோருவதற்கு எந்தவிதமான அருகதையும் அற்றது. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை போராக மாற்றிய பெருமை இந்தியாவையே சாரும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி போருக்கு இந்தியாவே தூண்டியது. அதனால்தான் எமது நாடு இன்றுவரை அவதிப்படுகின்றது.
இதேவேளை, கியூபா, வடகொரியா, ஈராக் போன்ற நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து லட்சக்கணக்கானோரை அமெரிக்கா கொலை செய்துள்ளது. கொலை செய்து வருகின்றது. இலங்கையிலுள்ள அந்த நாட்டின் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு உணவு அனுப்புவதில்லை என்று வேதனைப்படுகின்றாராம். அவரின் நோக்கம் என்னவென்பது எமக்குத் தெரியும்.
அன்ரன் பாலசிங்கம் மறைவுக்கு, பிரபாகரன் வன்னியில் உரையாற்றியதை லண்டனில் நேரடியாக ஒளிபரப்புச் செய்தார்கள். இந்த ஒளிபரப்பு வசதியைப் விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுக்கொடுத்தது யார்? இந்த ஒளிபரப்புச் சாதன வசதிகளை சமாதான காலத்திலேயே விடுதலைப் புலிகள் பெற்றுக்கொண்டார்கள்.
லக்ஸ்மன் கதிர்காமரை ஒரு ஆங்கிலப் படப் பாணியிலேயே பிரபாகரன் கொலை செய்தார். அந்த ஆங்கிலப் படத்தை நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அன்பளிப்புச் செய்த ஆறு அடி தொலைக்காட்சியிலேயே பிரபாகரன் பார்த்தார் எனத் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.
Wednesday, January 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment