Thursday, January 04, 2007

தமிழீழத் தேசியஅடையாளம் வைத்திருப்போர் மீது நடவடிக்கை?

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய அடையாள அட்டைகளுடன் வருபவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் துரித சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தமிழீழ தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அடையாளமாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதலாவது தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்ட விடயம் அரசாங்கத்திற்கு தெரிய வந்ததையடுத்தே படைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத இயக்கமொன்று மக்களுக்கு தேசிய அடையாள அட்டையொன்றை தயாரித்து பாவனைக்கு வழங்குவது சட்ட விரோதமாகும். அதேவேளை, அவர்கள் ஸ்தாபித்துள்ளதாக கூறப்படும் அடையாள அட்டை திணைக்களமும் சட்ட விரோத பணியகமாகும்.
நாட்டு மக்களை அடையாளப்படுத்த அரசாங்கத்தினால் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுவே செல்லுபடியாகும். போலி மற்றும் சட்ட விரோத ஆவணங்கள் செல்லு படியற்றதாகும். அதனை தம் வசம் வைத்திருப்பது தேசத்துரோக குற்றமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

அரச படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு இச் சட்ட விரோத அடையாள அட்டைகளுடன் வருவது மோசமான குற்றச் செயலாகும். யாரேனும் புலிகள் வழங்கும் குறிப்பிட்ட அந்த அடையாள அட்டைகளுடன் வந்து பிடிபடும் பட்சத்தில் அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி>பதிவு.

No comments: